விவே(பபிள்)கம்

டுமீல் டுமீல் (இது சைலன்சர் துப்பாக்கி. அதனால் கொஞ்சம் Husky வாய்ஸில் படிக்கவும்). தேச துரோகிகள் 2 பேரை சுட்டு கொன்றுவிட்டேன். ஆனால் எப்படியோ சத்தம் கேட்டு வெளியில் ஆட்கள் வந்துவிட்டனர். சுமார் 200 பேர் என்னை சுத்துப்போட்டுவிட்டனர். நான் யாருன்னு சொல்லவே இல்லையே... நான் PK.


ஓடிவந்து புர்ஜ் கலிஃபாவின் 150வது தலத்தில் இருந்து குதிக்கிறேன். அடுத்த இரண்டாவது செக்கண்டில் பபிள்கம்மில் முட்டை விட்டேன். அதிலிருந்து பாராசூட் விரிகிறது. அத்தனை பேர் சுட்டதில் தப்பித்த பாராசூட்டில், ஒரே ஒருவர் மட்டும் குறி தவறி சுட்டுவிடுகிறார். பாராசூட்டில் ஓட்டை விழுகிறது. ஆனால் ஓட்டை தானாகவே அடைபடும் டெக்னாலஜி இருப்பதால், அவர்களைப் பார்த்து சிரித்தேன். அதற்குள் ஓட்டை தானாகவே மூடிவிட்டது (என்ன சார் பைக் டயர்ல மட்டும் ஓட்டை விழுந்தா தானா அடைச்சுக்கும் டெக்னாலஜி இருக்கலாம்.. பாராசூட்டில் இருக்க கூடாதா?) பின்னணியில் லாலல்லாலாலா சர்வைவா ஒலிக்கிறது...

எதிரிகளின் கண்ணில் மண்ணைத்தூவி தப்பித்து வீட்டிற்கு வந்துவிட்டேன். நுழையும்போது துபிஜுக்கு துபிஜுக்கு பிக்பாஸ் என்ற பாடலுக்கு என் மனைவி தேவரஞ்சனி குழந்தைகளுக்கு டான்ஸ் பிராக்டிஸ் செய்துகொண்டிருந்தார். சைகை பாஷையில் என்னைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக அபிநயம் பிடித்துக் காண்பித்தார். நானும் பதிலுக்கு சிரிப்பதாக அபிநயம் பிடித்தேன். உள்ளே எனது நண்பன் Spyder (உளவாளி) மகேஷ்பாபு காத்திருந்தார்.

ஏலியன் கோவனன்ட், பாஹுபலி, பல்வாள் தேவன், பழசிராஜா, செங்கோட்டை அர்ஜுன், வஞ்சிக்கோட்டை வாலிபன், ஜேம்ஸ்பாண்ட், ஜானி இங்கிலிஷ் என பலரும் என்னை தேடிக்கொண்டிருப்பதாக சொன்னான். ஆக நான் இப்போது 80 நாடுகள் 8 ஏஜென்சிகளால் தேடப்படும் ஒரு இன்டர்நேஷனல் குற்றவாளி. நீ என்கூட இருக்கறவைக்கும் என்னை யாராலயும் புடிக்க முடியாது நண்பா என்று சொன்னேன். மையமாக சிரித்துவைத்தான்.

வேறு ஒரு சந்தர்ப்பத்தில் Behind Enemy Lines ஓவன் வில்சன் ஒரு ஆபரேஷனில் மாட்டிக்கொள்ள, அவரை நானும் Gladiator ரஸ்ஸல் க்ரோவும் சென்று காப்பாற்றினோம். பின்தொடர்ந்து வந்த எதிரிகளை ரஸ்ஸல் க்ரோவ் ஒரு ராக்கெட் லாஞ்சரை ஏவி துவம்சம் செய்தார். பின்னணியில் தலை விடுதலை ஒலிக்கிறது...

நான் கொஞ்சகாலம் தலைமறைவாக இருப்பதற்காக சேப்ஹவுஸ் (Safe House) சென்றேன். எனது கைவிரல் ரேகையை பதிவு செய்தவுடன் கதவு திறந்தது. உள்ளே பாஹுபலி பம்ப் ஆக்ஷன் Shot Gun வைத்துக்கொண்டு என்னை போட்டுத்தள்ள காத்திருந்தார். எப்படியோ தப்பித்து வெளியே ஓடிவந்தேன். 90 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பல்வாள் தேவன் Sniper மூலம் என் மார்பில் லேசர் லைட் அடித்தான்.. அப்படியே குனிந்து குட்டிக்கரணம் அடித்து, அங்கிருந்து ஓடி லெப்ட் திரும்பி ரைட்டில் ஓடி, மூன்றாவது பில்லருக்கு பக்கத்தில் மறைந்து கொண்டேன்.


நான் என் புல்லட் பைக்கை கிளப்பி எக்ஸ்பிரஸ் ஹைவேயில் எதிர் ட்ராபிக்கில் வளைத்து வளைத்து ஓட்டினேன். பாஹுபலி குதிரையிலும் பல்வாள் தேவன் அவனது சக்கரம் சுற்றும் தேரிலும் துரத்திக்கொண்டு வந்தார்கள்.

இதற்கிடையில் Spyder என் மனைவியை கடத்திக்கொண்டு போய்விட்டான். எனக்கு போன் செய்தான். "Spyder உலகத்துலயே எதிர்க்க முடியாதவன் யாரு தெரியுமா?" "PK பன்ச் டயலாக் பேசாத... இப்போ தேவரஞ்சனி என்கிட்டே தான் இருக்கா. அவ உயிரோட வேணும்னா உடனே நான் சொல்ற இடத்துக்கு வா" என்றான். "நீ சொல்றதை எப்படி நம்பறது?" "தேவரஞ்சனி உன் புருஷன் லைன்ல இருக்கான். பேசு. பேசி, இங்க வரச்சொல்லு.. ஆங்.. நீதான் நல்லா பாடுவியே.. உன் புருஷனுக்கு ஒரு பாட்டு பாடு" என்றான். சிறிது நேர மௌனம்.

போனை வாங்கி...

என்னங்க.. என்னங்க...

எழுந்திருங்க.. மணி 8.30 ஆயிடுச்சு.. அட எழுந்திருங்கன்னா..

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2