ஒரு ஸ்வீட் மாஸ்டரின் டைரிக்குறிப்பு
சமீபத்தில் பஹ்ரைனில் இதற்குமுன் இல்லாத அளவில் மிகப்பெரிய பூஜை நடந்தது. இத்தகையதொரு மைசூர்பாகை.. இல்ல இல்ல ஹோமத்தை பஹ்ரைனில் கண்டதில்லை. 4-5 வருடக்கனவு. 1 வருடத்திற்கும் மேலான திட்டமிடல். சிறப்பான செயல்திட்டம்.. என அத்தனை சிறப்பாக அமைந்தது அந்த ஜாங்கிரி.. இல்ல இல்ல ஹோமம். கிட்டத்தட்ட 4-5 மாதங்கள் முன்பிருந்தே ரவாலட்டு இல்ல இல்ல.. யாகத்திற்கான பரபரப்பு ஆரம்பமானது. ஜூலை ஆகஸ்ட் வெகேஷன் சமயத்தில் கிட்டத்தட்ட சென்னையிலிருந்து வந்த அனைவருமே யாகத்திற்கான சாமான்களை கொண்டுவந்தனர். வந்த சாமான்களை நிகழ்ச்சிவாரியாகப் பிரித்து அட்டைப்பெட்டிகளில் அடுக்கி, யாகம் நடக்கும் கோவிலுக்கு சாமான்களை ஏற்றி அனுப்பிவிட்டு, அந்த வண்டி அங்கு சேரும் முன்பே தான் அங்கு சென்று அவற்றையெல்லாம் இறக்கி ஸ்டோரில் வைத்தார் அவெஞ்சர்ஸ்-ன் அறிவிக்கப்படாத ஹீரோ VK. ஒருவாரம் முன்பாக மளிகை சாமான்கள், இதர அத்தியாவசியப் பொருட்கள் என சேகரித்து கோவிலில் கொண்டுசேர்த்தனர். அந்த சமயத்தில்தான் நம் கதையின் நாயகனான ஸ்வீட் மாஸ்டர் (குக் மாமா) பஹ்ரைன் வந்துசேர்ந்தார். மைக்கேல் மதன காமராஜன் படத்தின் காமேஸ்வரன் பூர்வீகமான பாலக்காடு ...