விருந்தோம்பல் வித் பெருங்கும்பல் - 3
அந்த அவர் (!?) நேரமாவதைப் பார்த்துவிட்டு, welcome drink பண்ணப் புறப்பட்டார். அரைத்த புதினா, கொஞ்சம் உப்பு மற்றும் சில பல பொருட்கள் (secret ingredients) சேர்த்து ஸ்ப்ரைட்டில் கலந்தால், மசாலா ஸ்ப்ரைட் ரெடி. அது என்ன ரகசிய ரெசிபி என்று தானே யோசிக்கிறீங்க... சொல்லமாட்டேன்.. அது தொழில் ரகசியம். இன்னொரு ரகசியம் சொல்லட்டுமா.. பேர் தான் மசாலா ஸ்ப்ரைட்டே தவிர, கலந்தது என்னவோ 7UP வைத்து தான். இதற்குள் வெரைட்டி ரைஸ் அயிட்டங்கள் ரெடியாகிவிட்டன. சரி.. எல்லாத்துலயும் டெஸ்ட்-க்கு கொஞ்சம் டேஸ்ட் பண்ணுவோமே என்று ஆரம்பித்தோம். அனைத்து அயிட்டங்களை அடிப்பொலி. வெஜிடபிள் ரைஸ் மட்டும் கொஞ்சம் காரம் தூக்கலாக இருந்தது. சாப்பிட்டதும் கண்ணில் தண்ணி வந்துவிடும் அளவுக்கு மட்டுமே காரம். மத்தபடி நாக்கை கழட்டி ஏஸி-க்கு அடியில் அரைமணி நேரம் ஆறப்போடும் அளவுக்கு ஜாஸ்தி இல்லை... முறைமாமன் படத்தில் கவுண்டமணி ஜெயராம் சமையலில் குஷ்புவும் மனோரமாவுக்கு சேர்ந்து உப்பையும் மிளகாய்ப்பொடியையும் மானாவாரியாக அள்ளித்தெளித்து கலந்துவிடுவது போல, ஏதோ சதி நடந்திருக்கலாம் என சந்தேகம் இருக்கு... ம்ம்ம்.. ஒரு பஞ்சாயத்தைக் கூட்டிட வேண...