விருந்தோம்பல் வித் பெருங்கும்பல்
30 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் பஹ்ரைன் திவ்யப்ரபந்த சத்சங்கத்தில் இது போன்றதொரு சம்பவம் இதற்கு முன்னர் நிகழ்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இனிமேலும் நடக்குமா என்று தெரியவில்லை. அதற்கும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
இனிமேல் நடக்க வாய்ப்பில்லை என்று எப்படி சொல்ல முடியும் என்று கேட்டால், இவ்வளவு சிறப்பாக (🤔!!???) இந்த மாதிரியான சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. PMP அதாவது project management-ல் ஒவ்வொரு project-ம் தனித்துவமானது என்று குறிப்பிடுவதுண்டு. அதாவது, ஒரே மாதிரியான இரண்டு project-கள் நடந்தாலும் தேதி, நேரம், இடம், வேலை செய்யும் ஆட்கள் என்பது மாதிரி பல பல விஷயங்களால் மாறுபாடு உண்டாகி வேறுபாட்டில் வேறாகி கூறுபட்டு கூறாகி வந்து நிற்கும் என PMP-யில் படித்த ஞாபகம்..
அப்படி என்னடா நடந்துச்சு என்று நீங்கள் காண்டாகி கழுத்தைப் பிடிப்பதற்கு முன் சொல்லிடறேன்..
இத்தனை வருஷங்களா, வாரம் தவறாம நடக்கற ப்ரபந்தம் கிளாஸுக்கும் சரி, ஆழ்வார் ஆசார்யன் திருநக்ஷத்ரம், ஏகதின நாலாயிரம், சுந்தரகாண்டம், பாகவதம்-னு பெரிய அளவுல நடக்கற வைபவங்களா இருந்தாலும் சரி, ப்ரஸாதம் பண்ணறது சத்சங்கத்தோட ஆண்டாள் கோஷ்டி தான். அந்த ஆண்டாள் கோஷ்டிக்கு சில பல சமயங்கள்ல, "எல்லாம் சூப்பரா பண்ணீங்க"-னு கைதட்டியிருக்கோமே தவிர பெருசா வேறெதுவும் பண்ணதில்லை.
இந்த சமயத்துல நம்ம மோகன் சார் ஒரு 3-4 சத்சங்க பாகவதா கிட்ட பேசிட்டு, அது எதிர்பார்த்தபடி நடக்காதபடியால், என்கிட்டே அதே மேட்டர சொன்னார். சரி.. மேட்டர் என்னவோ நல்லாத்தான் இருக்கு.. மத்தவங்க கிட்டயும் கேட்டுதான் பாப்போமே-ன்னு கேட்டேன். மளமள-ன்னு 4-5 பேர் ஓகே சொல்லிட்டாங்க. தேதியும் நேரமும் குறிச்சுட்டு (சுபம் சீக்கிரம்!!??? எதுக்கு எதை-டா லிங்க் பண்ற? அப்படிங்கற மாதிரி, அந்த வாரம் வெள்ளிக்கிழமையே அதாவது 14-Oct-2022 அன்னிக்கே சம்பவத்தை பண்ணிடலாம்-னு நாள் குறிச்சாச்சு) அடுத்தடுத்த வேலைகளை ஆரம்பிச்சோம்.
தம்பி டீ இன்னும் வரலை-னு தானே பாக்கறீங்க... சொல்றேன்.
அந்த வரலாற்று சிறப்புமிக்க மேட்டர் என்னன்னா, இதுவரைக்கும் ஊறுகாய் மாதிரி (ஊறிய ஊறுகின்ற ஊறும்) ப்ரஸாதம் பண்ணின ஆண்டாள் கோஷ்டிக்கு ஆம்னாட்டிகள் எல்லாரும் சேர்ந்து ப்ரஸாதம் பண்ணிப் போடணும் அப்படிங்கறதே.
அந்த நாளும் வந்தது. காலை 6 மணிக்கு ஆரம்பித்து, 10 மணிக்கு வேலை முடித்து Brunch பரிமாறி விடவேண்டும் என்பதே ஏற்பாடு. சரியாக 5.55மணிக்கு காலிங் பெல் அடித்து டைமிங்கில் (நம்ம சத்சங்கத்துல இதுவரைக்கும் ஒருநாளும் இந்தமாதிரி டைமிங் எல்லாம் ஃபாலோ பண்ணதில்லயேப்பு🤔) கலவரமூட்டினார் மதுரைக்கார திருநெல்வேலி சிங்கிகுளம் மைலாப்பூர் திருவானந்தபுர லக்ஷ்மி நரசிம்மன். அடுத்த 10 நிமிடங்களுக்குள் இந்த event-ன் master brain மோகன் சார் வந்தார். அடுத்த கொஞ்ச நேரத்தில் கோகுலன், என ஒவ்வொரு ஆம்னாட்டியாக வர ஆரம்பிக்க கிச்சன் களைகட்டியது.
மசாலா ஸ்ப்ரைட் (welcome drink), கதம்ப சாதம் (ஆனால் dry-ஆக வெஜிடபிள் ரைஸ் மாதிரி), எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், மோர் சாத்தமுது (திருநெல்வேலி ஸ்டைல் மோர் குழம்பு), உருளைக்கிழங்கு பொரியல், சர்க்கரைப்பொங்கல், பாதம் கீர், மைசூர்பாக், வாழைப்பூ உளுந்த வடை, வெள்ளரிக்காய் பச்சடி, அப்பளம் என அயிட்டங்களை வரிசைகட்டி எழுதினோம்.
ஆனால் எல்லாம் நாங்கள் பிளான் போட்டபடி நடந்ததா???
தொடரும்...
Amarkalamatttic...
ReplyDelete