Posts

Showing posts from 2024

தூறல் நின்னு போச்சு - 2

Image
வியாழக்கிழமை (02-May) அங்கங்க பரவலா மழை. வெள்ளிக்கிழமை கிளம்பறதைப் பத்தி முடிவெடுக்க முடியாம ஒரே சஸ்பென்ஸ். பஹ்ரைன்-ல இருந்து கிளம்பி, பாதி வழியில மாட்டிக்கிட்டா என்ன பண்றது-னு ஒரே சஸ்பென்ஸ் + த்ரில்லர். இதையெல்லாம் மீறி கிளம்பிப் போனா, அட்வென்ச்சர் + சஸ்பென்ஸ் + த்ரில்லரா இருக்குமோ.. என்ன பண்றதுன்னு ஒரே டிஸ்கஷன் ஆப் தி கன்ப்யூஸன். நானும் சேதுமாதவன் சாரும், மற்றும் சுற்றமும் நட்பும், எல்லாரும் சேர்ந்து துபாய், அபுதாபி, சவுதி-னு இருக்கற எல்லா ப்ரெண்ட்ஸ் கிட்டயும் போன் பண்ணி மழை அப்டேட் கேட்டோம்.   "டேய் மழை வந்திருந்தாக்கூட இவ்வளவு கஷ்டபட்டிருக்க மாட்டோம். மழை பெய்யுதா மழை பெய்யுதா-னு 5 நிமிஷதுக்கு ஒரு தடவை நீங்க பண்ற டார்ச்சர் தான்-டா தாங்க முடியலை"-னு எதிர் முனை-ல எல்லாரும் பீல் பண்ணிருப்பாங்க. வெரி டெலிகேட் பொசிசன். அதுலயும் Citi ப்ரசன்னா தான் ரொம்ப பாதிக்கபட்டார். அதனால ஒரு வெப்சைட் லின்க் அனுப்பி, "இந்த தடவை மழை வந்தா பெரிய அளவுல பாதிப்பு இருக்க கூடாதுனு எச்சகச்ச முன்னேற்பாடுகள் பண்ணியிருக்காங்க. இந்த லின்க்-ல 30 நிமிஷதுக்கு ஒரு தடவை மழை பெய்யுதா, எங்க எல்லாம் தண்ணி

தூறல் நின்னு போச்சு

Image
இந்த ஏரியா (பாலைவனம்) பலகாலமா நம்ம கண்-ல படாம இருந்துச்சு. Cloud Seeding பண்றேன்-னு சொல்லி உங்க ஆளுங்க எனக்கு வழி காட்டிட்டாங்க. (இனிமே, அடிக்கடி) பாக்கத்தானே போறீங்க.. இந்த (காளியோட) வருணபகவானோட ஆட்டத்தை.. அப்படின்னு 1 மாசம் முன்னாடி வருணபகவான் அடிச்சு ஆடினதுல, பாலைவனத்துலயே படகு ஓட்டற அளவுக்கு தண்ணி. துபாய் குறுக்கு சந்துகள்ல விவேகானந்தர் தெருக்கள்ல எல்லாம் தண்ணியோ தண்ணி. பஸ்செல்லாம் படகாயிடுச்சு. (துபாய்) பஸ்-ஸ்டாண்டு எல்லாம் படகு ஸ்டாண்டு ஆயிடுச்சு. பேஸ்மெண்ட்/அண்டர்க்ரவுண்டு பார்க்கிங்கில் வண்டி விட்டவங்க நிலைமை ரொம்பப் பாவம். காரெல்லாம் நீர்மூழ்கி கப்பலாயிடுச்சு. எல்லாரும் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு போன் செய்து கால் வெயிட்டிங்கில் கா(து)ல் கடுக்க காத்திருந்தாங்க.     ஒருவழியா இந்தக் கலவரமெல்லாம் முடிஞ்சு, 3-4 நாள்ல தண்ணி வடிஞ்சதுக்கப்பறம் தான் மக்களுக்கெல்லாம் கொஞ்சம் நிம்மதி.   பசங்களுக்கு (ஆதித்யா, அவ்யுக்த்) ஒரு Coding போட்டி, துபாய்-ல. நானும், சேதுமாதவன் சாரும் (அவ்யுக்த் அப்பா) பசங்களோட துபாய்-கு போகலாம்.. அதுவும் கார்-ல போகலாம்-னு ப்ளான் போட்டோம். (கார்-ல போகலாம்ங்கற ப்

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2

Image
முந்தைய பதிவைப் படித்துவிட்டு, உடனே போன் செய்து, "அண்ணே.. உங்களுக்கும் தப்பா ஓலை அனுப்பிட்டாங்களா.. சரி சரி ஃப்ரீயா விடுங்க.. நான் ஒரு மினிஸ்டர்.. எனக்கே இப்படித்தான் 2-3 தடவை தப்பா ஓலை அனுப்பியிருக்காங்க.. உடனே IsaTown போலீஸ் ஸ்டேஷன் போக சொல்லலாம்-னு கூப்பிட்டேன்" என்ற சவுதி மினிஸ்டர் கோசகனுக்கு நன்றிகள் பல.. நல்ல மனம் வாழ்க.. நாடு போற்ற வாழ்க..  கதைக்கு வருவோம்: அப்பறம் ஒரு அம்மணி போன் எடுத்தாங்க.. நிற்க.. வருடத்தின் முதல் நாள் 01-Jan அன்று முதல் வேலை, மனாமாவில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பூஜை நடக்கும். மார்கழி மாதம் என்பதால் சுப்ரபாதம், திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி மற்றும் சில பல ஸ்லோகங்கள் சொல்லிவிட்டு, திரு ஷ்யாம்-ஜி வீட்டில் நடக்கும் புது வருட சிறப்பு பூஜை யில் கலந்துகொள்ள ஓடுவேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ளும் பூஜை என்பதால், சீக்கிரம் போனால் தான் நிற்கவாவது இடம் கிடைக்கும். தேரில் கீதை சொன்ன கிருஷ்ணன் கோவிலுக்கு, காரில் போவது என்பது பலருக்கும் அத்தனை நல்ல அனுபவமாக இருப்பதில்லை. காரணம், பார்க்கிங். கோவில் தெருவில் பார்க்