வெக்கேஷன்

இந்த வெக்கேஷனுக்கு கெளம்பறதுக்கு முன்னாடி ஒரு மாசம்.. கரெக்ட்டா சொல்லணும்-னா அடுத்த மாசம் இந்நேரம்-நு கணக்கு பண்ணுவோமே அந்த ஒரு மாசம்... ரொம்ப ரொம்ப ரொம்ப மெதுவா நகரும்.

இன்னும் 30 நாள் இருக்கு-ன்னு பாத்து வெச்சுட்டு ஒரு 2 வாரம் கழிச்சு பாத்தா, இன்னும் 28 நாள் பாக்கி இருக்கும்.

இப்படியே ஒவ்வொரு நாளா தள்ளி தள்ளி நமக்கு நாக்கு தள்ளிடும்.

அந்தா இந்தா-ன்னு ஒரு வழியா ட்ராவெலிங் ப்ரம் மனாமா, பஹ்ரைன் டு சென்னை, இந்தியா-னு பேஸ்புக் -ல ஸ்டேடஸ் போட்டு வண்டி ஏறிடுவோம்.

சென்னை வந்து, ப்ளைட் டயர் ரன்வே-ல டச் ஆகுற அந்த நொடியில இருந்து பாஸ்ட் பார்வர்ட் (FAST FORWARD) பட்டன் ஆட்டோமாடிக்கா ஆன் (ON) ஆயிடும் அதுவும் சாதாரண பாஸ்ட் பார்வர்ட் இல்ல.. ஜெட்டுக்கு பின்னாடி பயர் வெச்சா மாதிரி பாஸ்ட் பார்வர்ட்.

ஏர்போர்ட்-ல இருந்து ஆட்டோ/டாக்சி புடிச்சு வீட்டுக்கு வந்து அப்பாடா-ன்னு உட்காந்தா ஒரு வாரம் டஸ்... (அதாங்க இஸ்-ங்கரதுக்குள்ள டஸ்-னு போயிடும்)

ப்ரெண்ட்ஸ்/சொந்த பந்ததுக்கெல்லாம் போன் போட்டு பத்து நிமிஷம்.. பத்தே பத்து நிமிஷம் பேசினாலே அடுத்த ஒரு வாரம் டஸ்...

வர்றதே வருஷத்துக்கு ஒரு தடவை தான்.. நங்கநல்லூர் போய் ஆஞ்சநேயரைப் பாக்கலைன்னா இந்த வெக்கேஷன் பூர்த்தி ஆகாதே-ன்னு கெளம்பி, நங்கநல்லூர்-ல ஒரு யூ டர்ன் போட்டுட்டு வந்தாலே மூனாவது வாரம் டஸ்...

இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. நாளைக்கு பேக்கிங் ஆரம்பிக்கணும்-னு நினைச்சுட்டுப் படுத்து தூங்கிடுவோம். கனவுல "யல்லா யல்லா ஹபீபி"-னு எவனோ சொல்றா மாதிரி கனவு கண்டு பதறியடிச்சு எந்திரிச்சுப் பாத்தா, பேக் டு பஹ்ரைன்.
ப்ளைட்டை விட்டு இறங்கி இமிக்ரேஷன் கவுண்ட்டர் க்யூ-ல நிக்கற அந்த நிமிஷத்துல இருந்து அடுத்த 11 மாசம் ஸ்லோ மோஷன் ஸ்டார்ட் ஆயிடும்.

அரை தூக்கத்துல வேண்டா வெறுப்பா ஆபீஸ் கெளம்பி போய், பேஸ்புக் திறந்து "செம்ம வெக்கேஷன்"-னு ஸ்டேடஸ் போடுவோம்.

எப்படி??? செம்ம வெக்கேஷன்ல...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2