சாக்லேட்

சாக்லேட் மிகப் பிடித்தமான ஒன்று. பல்வேறு தருணங்களில் சாக்லேட் சிலபல அனுபவங்களை கொடுத்துள்ளது. பள்ளியில் படிக்கும்போது பழைய?? நோட்டு புத்தகங்களை எடைக்குப் போட்டு லேக்டோ கிங் சாக்லேட் வாங்கி சாப்பிட்டேன். இது ஒரு தவறா? இதற்காக என் அப்பா என்னை பெல்ட்டால் பின்னினார். என்ன ஒன்று, பரீட்சை முடியும் முன்பே லேக்டோ கிங் வாங்கியாகிவிட்டது.
சென்னையில் வேலை செய்துகொண்டிருந்த சமயம். ஸ்பென்சர் பிளாசாவில் தான் அலுவலகம். அப்போதெல்லாம் சென்னையின் வெகுசில ஷாப்பிங் மால்களில் அதுவும் ஒன்று. மதியம் சாப்பாட்டு இடைவேளையின்போது அவ்வப்போது ஸ்பென்சரில் ந(பி)கர்வலம் செய்வது உண்டு. அப்படி ஒருநாள் நண்பன் தினேஷுடன் சென்றிருந்தபோது 2 பெரிய சாக்லேட் பார்கள் வாங்க நேர்ந்தது.

ஒரு சாக்லேட்டை  அலுவலகத்தில் வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும். ஒன்று எங்களுடையது. தினேஷிடம்  ஒரு சாக்லேட்டை கொடுத்து உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொண்டு மீதியை எனக்கு கொடு என்றேன். பதிலுக்கு அவன், நீ எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொண்டு எனக்கு கொடு என்றான் (நம்மளப் பத்தி தெரியல). நான் முழுசும் சாப்பிடுவேன்-னு சொன்னதை அவன் நம்பவில்லை. சரி. நீ சாப்பிடு பாக்கலாம் என்றான்.
2 நிமிடத்தில் சாக்லேட் காலி. "நல்லா சாப்பிடுற டா" என்றான். அந்தக் குரலில் கோபம், எரிச்சல், ஏக்கம் மற்றும் சிலபல கெட்டவார்த்தைகள் இருந்தது. ஹிஹி... நான்தான் மொதல்லயே சொன்னேன்ல.. அப்பவே கொஞ்சம் எடுத்துட்டு மிச்சம் கொடுத்திருக்கலாம். அவனுக்கு கொடுத்துவைக்கவில்லை.
இதை ஏன் இப்போ சொல்றேன்-னு பாக்கறீங்களா? இப்போ எல்லாம் வீட்ல சாக்லேட் இருந்தாலே, நான் ஒரு பீஸ் கூட சாப்பிட முடியலை. நான் கை வைக்கும் முன்னமே, மகன் முடித்துவிடுகிறான்.
தினேஷ்தான் அன்று சாபம் விட்டிருக்கவேண்டும்.. அடிக்கடி பலித்துகொண்டே இருக்கிறது...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2