கார்
கோகுல் புதிய கார் புக் செய்த அன்றிலிருந்தே ஏதோ ஒன்று சரியாக இல்லாதது போல் உணர்ந்தான். லோன் அப்ரூவ் ஆகுமோ ஆகாதோ என்ற சந்தேகத்தால் அட்வான்ஸ் கட்டவில்லை. அட்வான்ஸ் கட்டலாம் என்று வந்தபோது இவன் செலக்ட் செய்த வண்டியை வேறு யாரோ ரிசர்வ் செய்திருந்தனர். இரண்டு வாரகாலம் போனது. ஆனால் இவன் கேட்ட கலர் கிடைக்கவில்லை. பேசாமல் வண்டியே வேண்டாம் கேன்சல் பண்ணிவிடலாம் என்ற மனநிலையில் இருந்தபோது இவன் ஏற்கனவே செலக்ட் செய்திருந்த கலர் வண்டி உள்ளது என தகவல் வந்தது. கோகுல் உடனே ஷோரூம் விரைந்தான். சார், ஏற்கனவே அட்வான்ஸ் பே பண்ணினவர் இந்த வண்டி வேண்டாம்னு சொல்லிட்டார். நீங்களும் இதே வண்டி கேட்டிருந்ததால முதல்ல உங்களுக்கு கால் பண்ணோம். ரெண்டு மூணு கஸ்டமர் இதே வண்டிக்காக வெயிட்டிங் சார். வேற யாராவது பே பண்றதுக்குள்ள நீங்க அட்வான்ஸ் பே பண்ணிட்டா உங்களுக்கு ரிசர்வ் பண்ணிடலாம். ஐ ஸீ... நான் இப்பவே அட்வான்ஸ் பே பண்றேன். லோன் அப்ரூவ் பண்ணிட்டாங்க. ப்ராசஸிங் கிட்டத்தட்ட கம்ப்ளீட் ஆயிடுச்சு. ரெண்டு மூணு நாள்ல பணம் வந்திடும். ஓகே சார். நீங்க பே பண்ணிட்டு ரெசிப்ட் காபி குடுத்தீங்கன்னா, நான் மத்த ...