கார்
கோகுல் புதிய கார் புக் செய்த அன்றிலிருந்தே ஏதோ ஒன்று சரியாக இல்லாதது போல் உணர்ந்தான். லோன் அப்ரூவ் ஆகுமோ ஆகாதோ என்ற சந்தேகத்தால் அட்வான்ஸ் கட்டவில்லை. அட்வான்ஸ் கட்டலாம் என்று வந்தபோது இவன் செலக்ட் செய்த வண்டியை வேறு யாரோ ரிசர்வ் செய்திருந்தனர். இரண்டு வாரகாலம் போனது. ஆனால் இவன் கேட்ட கலர் கிடைக்கவில்லை.
பேசாமல் வண்டியே வேண்டாம் கேன்சல் பண்ணிவிடலாம் என்ற மனநிலையில் இருந்தபோது இவன் ஏற்கனவே செலக்ட் செய்திருந்த கலர் வண்டி உள்ளது என தகவல் வந்தது.
கோகுல் உடனே ஷோரூம் விரைந்தான்.

சார், ஏற்கனவே அட்வான்ஸ் பே பண்ணினவர் இந்த வண்டி வேண்டாம்னு சொல்லிட்டார். நீங்களும் இதே வண்டி கேட்டிருந்ததால முதல்ல உங்களுக்கு கால் பண்ணோம். ரெண்டு மூணு கஸ்டமர் இதே வண்டிக்காக வெயிட்டிங் சார். வேற யாராவது பே பண்றதுக்குள்ள நீங்க அட்வான்ஸ் பே பண்ணிட்டா உங்களுக்கு ரிசர்வ் பண்ணிடலாம்.
ஐ ஸீ... நான் இப்பவே அட்வான்ஸ் பே பண்றேன். லோன் அப்ரூவ் பண்ணிட்டாங்க. ப்ராசஸிங் கிட்டத்தட்ட கம்ப்ளீட் ஆயிடுச்சு. ரெண்டு மூணு நாள்ல பணம் வந்திடும்.
ஓகே சார். நீங்க பே பண்ணிட்டு ரெசிப்ட் காபி குடுத்தீங்கன்னா, நான் மத்த பார்மாலிட்டீஸ் ஆரம்பிச்சுடுவேன்.
கோகுல் அட்வான்ஸ் பணம் கட்டப் போகையில்...
இவன் வருவதை கவனிக்காமல், இந்தாங்க மேடம் ஜூஸ் என்று அங்கிருந்த வேறொரு கஸ்டமரிடம் பணிப்பெண் ஜூஸை நீட்ட, அது இவன் மேல் பட்டு, தெறித்து அந்த மற்றொரு பெண் மீதும் விழுந்தது. பிளாஸ்டிக் டம்ளர் ஆகையால் பெரிய சேதமில்லை. ஆனால் இருவர் துணியும் ஜூஸானது.
சாரி சார். நீங்க வர்றதை கவனிக்கலை என்று அந்தப் பணிப்பெண் சொன்னதை கோகுல் காதில் வாங்கவேயில்லை.
அவனது கண்ணெல்லாம் அந்த மற்றொரு பெண் மீதே இருந்தது. அந்தப் பெண்ணுக்கும் இவன் மீது ஒரு கண். ஆனால் சட்டென பார்வையை அவனிடமிருந்து விலக்கினாள்.
சாரி. உங்களுக்கு அந்தப் பொண்ணு ஜூஸ் கொண்டு வர்றதை நான் கவனிக்கலை.
பரவாயில்லங்க, என்றவாறே துணியை டிஷ்யூ வைத்து துடைத்துக்கொண்டாள்.
உங்க பேர் என்னனு தெரிஞ்சுக்கலாமா?
என்ன மிஸ்டர்? இப்போ எதுக்கு என் பேரை கேக்கறீங்க? என்று பொய்யான கோபத்துடன் கேட்டுவிட்டு நகர்ந்தாள்.
மொத்த கார் ஷோரூமும் இவர்களைத்தான் பார்த்தது.
மேடம்.. என் பேர் கோகுல். நம்பர் 98990 98990. ஃபிரீயா இருக்கும்போது கால் பண்ணுங்க. இல்லைன்னாலும் பண்ணுங்க என்றான்.
இவனைப் பார்த்து முறைத்துவிட்டு ஏதும் பேசாமல் சென்றுவிட்டாள். ஆனால் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள். பட்டாம்பூச்சி பறப்பது போல படபடப்பாக இருந்தது. மிக்ஸட் ப்ரூட் மில்க்-ஷேக் சாப்பிட வேண்டும் போலிருந்தது. இன்னும் சில பல...
அவள் வெளியே செல்லும்வரை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் கோகுல். கண்டிப்பாக திரும்பிப் பார்ப்பாள் என்று நினைத்தான். பாவம். ஏமாற்றமே.
கோகுல் கேஷ் கவுண்டரில் பணத்தைக் கட்டிவிட்டு ஒரு காபியை ஏஜென்டிடம் கொடுத்துவிட்டு,
சீக்கிரம் ப்ராசஸ் பண்ணுங்க. அப்பறம், என் மேல ஒரு பொண்ணு மோதுச்சே.. அவங்க யாருன்னு தெரியுமா?
அவங்களா சார்.. பேரு முனியம்மா. இங்க தான் வேலைசெய்யுது..
அந்தப் பொண்ணு இல்ல. கஸ்டமர்.. அவங்க மேலயும் ஜூஸ் கொட்டுச்சே.. அவங்க யாரு தெரியுமா?
ஓஹோ.. அவங்களா சார்.. அவங்களும் இதே வண்டிக்கு அட்வான்ஸ் கட்றதுக்கு தான் வந்தாங்க. ஆனா நீங்க தான் மொதல்ல கேட்டிருந்தீங்க. நீங்க வேண்டாம்-னு சொன்ன அவங்க பணம் கட்டியிருப்பாங்க.
சரி. அவங்க பேர் என்ன? போன் நம்பர் கிடைக்குமா?
சாரி சார். அப்படி எல்லாம் கஸ்டமர் டீட்டெயில் குடுக்க கூடாது.
உடனே கோகுல் ஐந்து 100 ருபாய் நோட்டுகளை எடுத்து எண்ணியவாறே,
இப்போ குடுக்க முடியுமா?
நீங்க இவ்வளவு தூரம் கேக்கறதால பாக்கறேன் சார்.
பைலை எடுத்துப் பார்த்துவிட்டு,
அவங்களுக்கு வேற ஏஜென்ட். இன்னிக்கு அவரு லீவு. பைல்ல நம்பர் இல்ல சார். பேர் மட்டும் தான் இருக்கு. நாளைக்கு எனக்கு கால் பண்ணுங்க, நம்பர் வாங்கித்தரேன். அவங்க பேரு, ஹேம சுதா
அன்றிரவு கோகுலின் போன் ஒலித்தது...

Comments
Post a Comment