ஆண்டு விழா - 4
நாடகத்தின் நடுவே அவன் Stephen Hawking-ஆக வீல் சேரில் மேடைக்கு வந்து சில பல விஷயங்கள் சொல்லிவிட்டு மீண்டும் கையசைத்தபடியே உள்ளே செல்ல, இப்போது பலத்த கரவொலி. கிட்டதட்ட எல்லாருமே பதிலுக்கு கையசைத்து அவனை நெகிழச் செய்தனர். இந்த நாடகத்திற்குள்ளாக அதன் ஒரு பகுதியாக ஒரு டான்ஸ். அதில் ஆடிய அந்தப் பெண் குழந்தை தனி ஆவர்த்தனத்தில் கலக்கி விட்டார். ஹெட் மாஸ்டரை "மான்ஸ்டர்" என்ற வசனத்தை தெரிந்தே தான் வைத்திருந்தார்கள். பள்ளி முதல்வராக வந்த மாணவன், அப்படியே Mr Bean தான். கண், கண்ணசைவு, உடல்மொழி, பேச்சு, ஸ்ப்ரிங் போல நடப்பது என அனைத்திலும் அப்படியே Mr Bean போலவே இருந்தான். ஒரு ஆசிரியரின் பெருமையை எடுத்துக்கூறும் இந்த நாடகத்திலாவது "அதை" நிச்சயமாக சொல்லியிருக்க வேண்டும். ம்ஹ்ம்.. சொல்லவில்லை. இதற்குள் மணி 8.30 தாண்டிவிட்டது. சின்னப் பையன் ஏற்கனவே என் மீது சாய்ந்தபடி தூங்கிவிட்டான். அவனைப் பார்த்து, எனக்கும் லேசாக தூக்கம் வர, தன்னையறியாமல் ஒரு கொட்டாவி வந்துவிட்டது. ஆங்கரிங் செய்ய வந்த மாணவி நான் வாயைப் பிளந்து கொண்டு கொட்டாவி விடுவதைப் பார்த்துவிட்டார். உடனே அவர் பார்வையைத் திர...