Posts

Showing posts from 2016

அகவை 60, ரேபான் கண்ணாடி, புலிநகம் செயின், புல்லட்

Image
சிங்கம் என்றால் என் தந்தைதான் செல்லம் என்றால் என் தந்தை தான் கண் தூங்கினால் துயில் நீங்கினால் என் தந்தை தான் என் தந்தை தான் எல்லோருக்கும் அவர் விந்தை தான் இன்று அப்பாவுக்கு அகவை 60. ரேபான் கண்ணாடி அணிந்து, புலிநகம் செயினை போட்டுக்கொண்டு, உத்திரியத்தை கக்கத்தில் இரண்டு பக்கமும் பறக்கவிட்டபடி புல்லட்டில் ஊரார் பார்க்க செல்லவேண்டும் என்பது அப்பாவின் ஆசை. சீனி அய்யர் (ஸ்ரீனிவாச ஐயங்கார், என் அப்பாவின் தாத்தா) குடும்பம் நொடித்து ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாகிவிட்டது என்று பேசிய ஊரார் முன்னே, நாங்கள் நொடித்துவிடவில்லை என்று காட்டவேண்டும் என்பதற்காகவே மேலே சொன்னதை செய்ய ஆசை அப்பாவுக்கு. கோவில் கைங்கர்யம், வயல்கள், தோட்டம், மாடுகள், வேலையாட்கள் என்று இருந்த குடும்பம், பாட்டியின் அகால மறைவிற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிதிநிலை கரைந்து தோட்டம், மாடுகள், வேலையாட்கள் எல்லாம் இழந்து, கோவில் கைங்கர்யமும் கோவில் சம்பந்தப்பட்ட வயல்கள் மட்டும் எஞ்சி நின்ற சூழ்நிலையில் அப்பாவின் இரண்டு அண்ணன்களும், வேலை நிமித்தம் வெளியூர்களில் செட்டிலாகிவிட்டனர். ஆனால் அப்பா மட்...

லண்டன் லெட்டர்

பஹ்ரைன் 04-Aug-2016 அன்புள்ள  ____, நாளது தேதி இங்கு அனைவரும் நலம். அங்கும் அனைவரும் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன். நான் கடந்த வாரம் லண்டன் சென்றுவந்தது குறித்து பகிர்ந்து கொள்ளக்கருதி இக்கடிதம் எழுதுகிறேன். புதன் நள்ளிரவு 1 மணிக்கு பஹ்ரைனில் இருந்து விமானம் புறப்பட்டது. 7 மணிநேர பயணம். ஏர்-ஹோஸ்டஸ் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. ஏர் இந்தியா பணிப்பெண்கள் தேவலாம்(??) என்று தோன்றியது. வியாழக்கிழமை லண்டன் நேரம் காலை 6.15க்கு விமானம் தரையிறங்கியது. சென்ற முறையே ட்யூப் எனும் அண்டர்கிரவுண்ட் ரயிலில் பயணித்திருந்தாலும், இம்முறை விமானநிலையத்திலிருந்து லண்டன் நகரம் சென்றதே ரயிலில் தான். டாக்சி ஏறவேயில்லை. டாக்சி அத்தனை காஸ்ட்லி என்பதும் ஒரு காரணம். எல்லா ரயில் நிலையங்களிலும் அத்தனை சிறந்த கட்டமைப்புகள். நிறைய வழித்தடங்கள் உண்டு. ஒரு சில ரயில் நிலையங்களில் இரண்டு மூன்று வழித்தடங்கள் இருக்கும் பட்சத்தில் ரயில் நிலையமே ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மால் போல அத்தனை பிரம்மாண்டமாய் இருக்கிறது. Piccadilly Line, District Line, City Line இப்படி பல வழித்தடங்கள். ரயில் ம...

நம்பர் 80

மனைவியின் பாஸ்ப்போர்ட் நிமித்தம் எம்பஸியின் அவுட்சோர்ஸ் ஆபீசுக்கு சென்றிருந்தோம். எல்லா பார்ம்களும் பூர்த்தி செய்தபின்பு, அதை சரிபார்த்துவிட்டு, டோக்கன் கொடுத்தான் அந்த அலுவலக ஆள். நம்பர் 80. உள் அறையில் இடம் இல்லை. வெளியில் இருந்த சேர்களில் அமர்ந்தோம். கடைசியாக என்ன டோக்கன் போயிருக்கிறது என்று பார்க்க உள்ளே சென்றேன். நம்பர் 73 என்று காட்டியது. வந்து மனைவியிடம் சொன்னேன். ஆனால் டோக்கனில் 16 நபர்கள் வெயிட்டிங் என்று போட்டிருந்தது. மனைவிக்கு அப்போதே கொஞ்சம் சந்தேகம். உள் அறையில் இடம் கிடைத்தவுடன் அங்கே சென்று அமர்ந்தோம். டோக்கன் நம்பர் 50 கவுண்ட்டர் 3-க்கு செல்லவும் என்று அறிவித்தனர். இப்போது மனைவி என்னைப் பார்த்து, நீங்க வந்தப்போ எப்படி 73 காட்டியிருக்கும்? இப்போதான் டோக்கன் 50 கூப்பிடுறாங்க என்றார். சத்தியமா நான் வந்து பாத்தப்போ 73 தான் போட்டிருந்தாங்கம்மா என்று சொன்னேன். ம்ஹ்ம்.. பதிலுக்கு ஒரே ஒரு தீர்க்கமான பார்வை. நான் ஒன்றும் பேசவில்லை (பேசவும் முடியுமா என்ன??). அடுத்த டோக்கன் நம்பர் கூப்பிடட்டும். அப்போது பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன் (மனதின் அடி...

சாக்லேட்

சாக்லேட் மிகப் பிடித்தமான ஒன்று. பல்வேறு தருணங்களில் சாக்லேட் சிலபல அனுபவங்களை கொடுத்துள்ளது. பள்ளியில் படிக்கும்போது பழைய?? நோட்டு புத்தகங்களை எடைக்குப் போட்டு லேக்டோ கிங் சாக்லேட் வாங்கி சாப்பிட்டேன். இது ஒரு தவறா? இதற்காக என் அப்பா என்னை பெல்ட்டால் பின்னினார். என்ன ஒன்று, பரீட்சை முடியும் முன்பே லேக்டோ கிங் வாங்கியாகிவிட்டது. சென்னையில் வேலை செய்துகொண்டிருந்த சமயம். ஸ்பென்சர் பிளாசாவில் தான் அலுவலகம். அப்போதெல்லாம் சென்னையின் வெகுசில ஷாப்பிங் மால்களில் அதுவும் ஒன்று. மதியம் சாப்பாட்டு இடைவேளையின்போது அவ்வப்போது ஸ்பென்சரில் ந(பி)கர்வலம் செய்வது உண்டு. அப்படி ஒருநாள் நண்பன் தினேஷுடன் சென்றிருந்தபோது 2 பெரிய சாக்லேட் பார்கள் வாங்க நேர்ந்தது. ஒரு சாக்லேட்டை  அலுவலகத்தில் வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும். ஒன்று எங்களுடையது. தினேஷிடம்  ஒரு சாக்லேட்டை கொடுத்து உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொண்டு மீதியை எனக்கு கொடு என்றேன். பதிலுக்கு அவன், நீ எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொண்டு எனக்கு கொடு என்றான் (நம்மளப் பத்தி தெரியல). நான் முழுசும் சாப்பிடுவேன்-னு சொன்னதை அவன...

சுட்டதை சுட்ட கதை

ரொம்ப நாளைக்கு அப்பறம் நேத்து ரேடியோ மிர்ச்சி கேட்டேன். செந்தில் இப்போ "சுட்ட கதை"-ன்னு ஒரு நிகழ்ச்சி பண்றார். "நீங்க நான் ராஜா சார்" நிகழ்ச்சிக்கு பதிலா இப்போ இந்த "சுட்ட கதை" வருது-ன்னு நினைக்கறேன். அதுல ஒரு சுட்ட கதை சொன்னார் செந்தில். ஒரு அப்பாவுக்கும் பொண்ணுக்கும் நடக்கற உரையாடல். அந்த பொண்ணு, "அப்பா, அந்த D ப்ளாக் சந்தோஷ் ஒருநாள் நீ எனக்கு ஸ்பெஷல் ப்ரெண்ட்-னு சொன்னான். அப்போலருந்து அவன பாத்தாலே என்னால நார்மலா இருக்க முடியல. படபடப்பா இருக்கு. ஏதோ தப்பு பண்றமோ-னு தோணுதுப்பா" என்கிறாள். "ஸ்வேதா நீ ரெண்டாம் கிளாஸ் படிக்கற வரைக்கும் மூச்சா வந்தா சொல்லத் தெரியாது. அடக்கவும் தெரியாது. யூனிபார்ம் ஸ்கர்ட்-லயே போயிடுவ. சாயுங்காலம் வரும்போது அப்பா இந்த ஸ்கர்ட் ஒரே நாத்த கப்பு -னு சொல்லுவ" என்கிறார். அந்தப் பெண் கோபத்துடன் "அப்பா நான் என்ன சொல்றேன்.. நீ என்ன சொல்ற.." என்று கேட்கிறாள். "ஸ்வேதா.. உனக்கு இப்போ மூச்சா வந்தா அதே மாதிரி தான் ஸ்கர்ட்-லயே போயிடுவியா சொல்லு" என்று கேட்கிறார். அந்தப் பெண் வெட்கத்துடனும்...