பாஸிங் - 2
இன்னிக்கு நம்மள சுத்தல்ல விடப்போறாங்க என்று நான் நினைத்து முடிப்பதற்குள் "ஆப்டர் சூபர்வைசர் கோ டு ரெஜிஸ்தரேசன்" (After subervisor go to registharesan) என்றான். ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டாங்க என்று கன்பார்ம் ஆகிவிட்டது. வண்டியை பார்க்கிங் ஏரியாவுக்கு விட்டேன். ஏற்கனவே அங்கு டபுள் பார்க்கிங்கில் இருந்த நண்பனின் வண்டிக்கருகில் என் வண்டியை நிறுத்திவிட்டு, "ஏதோ சூப்பர்வைஸரப் பாத்து கையெழுத்து வாங்கணுமாம். அப்பறம் ரெஜிஸ்ட்ரேஷன் போகணுமாம். நீ கொஞ்சம் வெயிட்பண்ணு. இந்தா என் வண்டி சாவி. யாராவது வண்டிய பார்க்கிங்ல இருந்து எடுக்க வந்தா, என் வண்டியை நகர்த்தினாதான் அவங்க வண்டிய எடுக்க முடியும். நீ கொஞ்சம் பாத்துக்கோ" என்று சொல்லிவிட்டு சூப்பர்வைசர் இருக்கும் இடம் என்று தோராயமாக கூறிய திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றேன். இரண்டு மூன்று பில்டிங் இருந்ததால் எந்த பில்டிங்கிற்குள் நுழைவது என்று குழப்பம். கொஞ்சம் சுற்றும்முற்றும் பார்த்தேன். நண்பனின் வண்டியை பாஸிங் செய்த அரபி ஆபீசர் நின்றுகொண்டு வண்டிகளை ஒழுங்கு படுத்துவதும், சில வண்டிகளை சோதனையிடுவதுமாக...