நாளைய வாசல் - 2

நீங்க போராட்டம் பண்ணீங்க. திட்டத்தை நிறுத்தினாங்க. சரிதான். ஆனா முழுசா நிறுத்தலை. கொஞ்ச காலம் கழிச்சு 2025 வாக்கிலே விவசாயிங்களுக்கு நடுவில ஒரு ஜாதி பிரச்னையை கிளப்பிவிட்டு, வெட்டிக்க வெச்சாங்க. அதிலேருந்து தப்பிச்சவங்கள, கொலையாளிகள்-ங்கற பேரில் கைதுபண்ணி ஆயுள் தண்டனை கொடுத்துட்டாங்க. எதிர்த்துப் பேசினவங்களை வாயில கரண்ட் வயரைக் குடுத்து கொன்னுட்டாங்க. அப்பறம் அவங்க நிலத்தை எல்லாம் ஆக்கிரமிச்சு ஒரு எதிர்ப்பு கூட இல்லாம திட்டத்தை செயல்படுத்தினாங்க. 2045-ல் ஒரு பூகம்பம் வந்திச்சு. தமிழகமே, ஏன் இந்தியாவே பாக்காத 13 ரிக்டர் அளவு. எல்லாம் மண்ணோட மண்ணாப்போச்சு. தஞ்சாவூரையும் அதை சுத்தித்தியிருந்த 11 மாவட்டங்களும் அழிஞ்சிடுச்சு.


நீராதாரம் எல்லாம் அழிஞ்சிடுச்சு. அதோட முடிஞ்சிருக்கும்-ன்னு பாத்தா, அதுக்கப்பறம் வந்த கேன்சரும் தோல் நோய்களும் இன்னும் நிறைய மக்களை அழிச்சிடுச்சு. பிழைச்சவங்க எல்லாம், பக்கத்துக்கு மாநிலங்களுக்கு கொத்தடிமையா போயிட்டாங்க. அவங்களுக்கு குழந்தைகளுக்கு  எல்லாம் இப்போ படிப்பு வாசனையே இல்ல. அடிமையாவே வளத்துட்டாங்க.

நீராதாரம் இல்லையா? மழை பெய்யலியா? விவசாயம் பண்ணின கடைசி தலைமுறை நாங்க தானா?

ஆமாம். காட்டை வெட்டி ஆதியோகி சிலை வெச்சா, பின்ன எப்படி மழை பெய்யும்? இந்தியாவுல மட்டும் 22 சிலை இருக்கு இப்போ. குளம், ஏரி இப்படி எல்லாத்திலயும் கட்டிடம் கட்டிட்டாங்க. அப்பறம் எப்படி நீராதாரம் இருக்கும்? இப்போ எல்லாம் மழை பெய்யுது. விஞ்ஞானிங்க தான் விவசாயம் பண்றாங்க. இங்க இல்ல. நான் சொன்ன மாதிரி, செவ்வாய் கிரகத்துல. இயற்கை விவசாயம் பண்ணி, நல்லா சாப்பிட்டு நல்லா வாழறாங்க.

சரி. ஏன் அரசாங்கம் எல்லா மக்களையும் அங்க அனுப்பல?

அட.. எல்லாரும் அங்க போயிட்டா, பின்ன பணக்காரனுக்கு ஏழைக்கும் என்ன வித்தியாசம்? அவன் வெச்சிருக்கற பணத்துக்கு என்ன மதிப்பு? அதான், அவங்க மட்டுமே முடிவுபண்ணி, அவங்க மட்டுமே அரசாங்கத்துகிட்ட பேசினாங்க. இப்போ இருக்கற "ஆப் கி பார் மோடி சர்க்கார்" அனுப்பி வெச்சுட்டாரு.

என்னது மோடி இன்னும் இருக்காரா?

ஆமாம். 2053-ல மோடி உடல்நிலை ரொம்ப மோசமாயிடுச்சு. உடனே பெப்சிக்காரனும் கோலாகாரனும், அம்பானிகிட்ட பேசி அவரை அமெரிக்கா கூட்டிட்டு போயி ஒரு இளம் உடலில் அவரோட உயிரை மாத்திட்டாங்க.

என்னங்க சொல்றீங்க? உயிரை மாத்தினங்களா? புரியலையே...

அட.. கூடுவிட்டு கூடு பாயறது-ன்னு சொல்வாங்களே, அதான். நல்ல திடகாத்திரமான ஒருவரை தேர்ந்தெடுத்து உடலுக்கு பாதிப்பு வராத அளவுக்கு மின்சாரம் பாய்ச்சி, கொன்னுடுவாங்க. அப்பறம் யாருக்கு தேவையோ, அவங்க பழைய உடலில் இருந்து நினைவுகள் அத்தனையும் அந்த புது மூளைக்கு செலுத்தி, திரும்பவும் உயிர் குடுப்பாங்க. புது இளமையான உடல், பழைய நினைவுகள் அனுபவங்கள்.

சரி. பெப்சிக்காரனும் கோலாகாரனும், எதுக்கு கூட்டிட்டுப் போயி வைத்தியம் பாக்கணும்?

பின்ன, இந்தியா பூரா இருக்கற அத்தனை நதிகள்லயும் தண்ணி எடுத்துக்கலாம். அதுவும் அளவில்லாம எடுத்துக்கலாம்-னு அரசு உத்தரவு போட்டார் மோடி. அவனுங்க ரெண்டுபேரும் மத்த நாட்டுல இருந்த தொழிற்சாலையை மூடிட்டு மொத்தமா இங்க வந்துட்டான். அதுக்கு செய்யற கைமாறு தான் வைத்தியம்.

சரி அதனால மோடிக்கு என்ன லாபம்?

அப்படி கேளுங்க. இப்போ உலகம் பூராம் அந்த ரெண்டையும் விக்கறது அம்பானி. அம்பானிக்கு லாபம் கிடைச்சா, அது மோடிக்கு கிடைச்ச மாதிரி தானே?

சரி அவர் செவ்வாய் கிரகம் போகலையா?

அவர் போகாமையா?? எல்லாம் போயாச்சு போயாச்சு. 6 மாசத்துக்கு ஒருதடவை தான் இங்க வருவாரு. 2 மாசம் இங்க இருப்பாரு. ஆதியோகியை பாத்துட்டு, மிச்சம் இருக்கற நாட்டுக்கெல்லாம் ஒரு ரவுண்டு போயிட்டு வந்து, திரும்பவும் செவ்வாய் கிரகம் போயிடுவார்.

சரி.. இவ்வளவு விபரங்கள் தெரிஞ்சு வெச்சிருக்கீங்களே, நீங்க யாரு? பாத்தா அந்தக் காலத்து ஆளு மாதிரி இருக்கீங்க. இத்தனை கலவரங்களுக்கு மத்தியில நீங்க மட்டும் எப்படி தப்பிச்சு உயிரோட இருக்கீங்க?

என்னை தெரியலையா? என்று சொல்லி, தலையையும் பாதி முகத்தையும் மறைத்து கட்டியிருந்த முண்டாசை கழட்டி தோளில் போட்டு, இரண்டு பக்கமும் கைகளால் பிடித்தவாறே, கலிங்கப்பட்டியில் கலிங்கத்துப்பரணி படித்தவன் நான். கிரேக்க வரலாற்றை உலகிற்கு எடுத்துக்கூறியவன் நான். அப்படி ஒருமுறை நான் நடைபயணம் சென்றபொழுது தான், இந்த அவலங்கள் இங்கே அரங்கேறின. நான் திரும்பிவந்து பார்க்கும்போது ஒன்றும் மிஞ்சவில்லை. ஆனால் நான் வெட்டுவதற்கு ஒரு கருவேல மரம் கூட இல்லை என்பதை அறிந்து நான் மிகவும் கலங்கினேன்.. அப்போது ஒருநாள் அந்த அடையாறு ஆலமரம்...  தம்பி.. தம்பி.. ஏன் ஓடறீங்க?

முற்றும்

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2