அது ஒரு கொரோனா காலம்
ஆதி மனிதனின் கற்காலம்.. சில பல அரசர்களின் பொற்காலம்.. வரிசையில், எதிர்வரும் ஆண்டுகளில் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் இந்த கொரோனா காலம். அப்படி என்ன விசேஷம் என கேட்பவர்களுக்கு, அப்படி என்ன இல்லையென நாக்குமேல பல்லைப் போட்டு கேட்குமளவுக்கு எச்சகச்ச விசேஷங்கள் இருக்கிறது இந்தக் கொரோனா காலத்தில். கொரோனா தொற்று வராதவர்களுக்கு பல பிரச்சனைகள் என்றால், நோய்த்தொற்று வந்தவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுடன் சேர்த்து இன்னும் ஒரு பிரச்சனை... அவ்வளவே. லாக்-டவுன், சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தம், உள்ளூரில் சிலபல கிலோமீட்டர் சுற்றளவுக்கு மேல் செல்ல தடை, மார்க்கெட் மூடல், டாஸ்மாக் மூடல், ஒர்க் ப்ரம் ஹோம், அதுவும் கணவன் மனைவி இருவருக்கும் ஒர்க் ப்ரம் ஹோம், குழந்தைகளுக்கு ஆன்லைன் ஸ்கூல்.. இதையெல்லாம் தாண்டி கைக்கு க்ளவுஸ்.. முக்கியமாக முகத்துக்கு/மூக்குக்கு மாஸ்க். மாஸ்க் போடுவது என்ன அவ்வளோ பெரிய பிரச்சனையா என்று நினைக்க வேண்டாம். காற்று போகும் அளவுக்கு லூஸாகவும், கொரோனா கிருமி போக முடியாத அளவுக்கு டைட்டாகவும், நாசித் துவாரத்துக்கு குறைந்தது ஒன்னரை இன்ச் மேலே தொடங்கி...