Posts

சைக்கிள்

Image
சின்னப் பசங்க எல்லாருக்கும் சைக்கிள் ஓட்டறதுன்னா ரொம்பவே புடிக்கும். எனக்கும் தான். எந்த வயசில கத்துக்க ஆரம்பிச்சேன்னு சரியா ஞாபகமில்ல. ஆனா ஆறாவது படிக்கும்போது ஒரு லீவு நாள், சனிக்கிழமைன்னு நினைக்கறேன், கால்வண்டி (சின்ன சைக்கிள்) 2 மணி நேர வாடகைக்கு எடுத்து சுத்திதிட்டு கடையில விட நேரமாயிடுச்சுன்னு வேகமா ஓட்டினேன். அப்போ செயின் கழண்டு போச்சு. பெடல் கிழிச்சு கால்ல காயம் ஆச்சு. அது மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கு. தழும்பா. அப்புறம் கொஞ்ச நாளைக்கெல்லாம் பெரிய சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சாச்சு. வீட்லயே அப்பாவோட ராலே (Raleigh. ராலே-வை நெல்லைத் தெலுங்கென்று நினைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல) சைக்கிள் இருக்கும். ஸ்டாண்ட் போட்டபடி கொஞ்ச நேரம் ஓட்டுவேன். அப்பறம் இறங்கி வந்திடுவேன். ஏன்னா, சைக்கிள் பரண் மேல இருந்துச்சு. அது பரண் மேல போனதுக்கும் ஒரு கதை இருக்கு. அப்போல்லாம் பெரிய சைக்கிள்-ல ரெண்டு பக்கமும் கால் போட்டு ஓட்ட தெரியாது. பாருக்கு நடுவில கால் (குறுக்கு பெடல் / குரங்கு பெடல்) போட்டு தான் ஓட்டத் தெரியும். அப்படி ஒட்டும்போதே ரேஸ். பெரிய சாம்பியன்ஷிப் ரேஸ்-ல்லாம் கிடையாது. தெ...

பிசிபேளாபாத்

இந்த வெள்ளி கிழமையும் எப்போதும் போலவே 8.30 க்கு ஆரம்பித்து 8.50 க்கு விடிந்தது. மிக சாதாரண வெள்ளிக்கிழமை / விடுமுறை நாளாகவே பட்டது எனக்கு. ஆனால் தங்கமணி அப்படியொரு முடிவெடுத்தபோது தான் புரிந்தது, என் நினைப்பு எவ்வளவு தவறானதென்று. மதிய உணவிற்கு பிசிபேளாபாத் பண்ணப் போவதாக சொன்னவுடன் எனக்கு புரிந்துவிட்டது, இன்னிக்கு என்னை சோதித்து பார்க்க முடிவெடுத்தாச்சுன்னு. பெரும்பாலான கணவர்களை போல, நானும் புது பொண்டாட்டியின் சமையலுக்கு பரிசோதனை கூடத்து "சிங்கம்" தான். முந்தைய நாள் ஹோட்டலுக்கு கூட்டிப் போகாததன் விளைவு இப்படி மோசமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொள்ளும். என் மனைவி சமைத்து. ஆனாலும் அவள் ரொம்ப சமத்து (அடுத்த வேளைக்குஅந்த பிசிபேளாபாத் தும் கிடைக்காம போயிடுமே!!!) சரி. எவளவோ பண்ணிட்டோம். இதை பண்ண மாட்டோமா!!! என்றெண்ணி மனதை திடப்படுத்திக் கொண்டேன். கிச்சனில் காய்கறி, பாத்திரம், இன்னபிற என எல்லாத்தையும் தயார் செய்துவிட்டு, நேராக வந்து 'லேப்டாப்'பிக் கொண்டிருந்த என்னிடமிருந்து அதை பாசமாக பறித்தார் தங்கமணி. எதுக்குன்னு க...

செப்டம்பர்

Image

ஹாஸ்டல் நாட்கள்

Image

கையெழுத்தால் வந்த பிரச்சனை - 2

ரேங்க் கார்ட் அது தான் அடுத்த பிரச்சனையே. 2 சப்ஜெக்ட் அவுட். காலேஜா இருந்தா, அரியர்.. அடுத்த செமஸ்டர் கிளியர் பண்ணிடுவேன்-னு சொல்லி தப்பிக்கலாம். ஸ்கூல்-ல ம்ஹ்ம்.. சரி மத்த சப்ஜெக்ட்-லயாவது நல்ல மார்க் வாங்கியிருக்கோமா?? அதுவும் இல்லை. சரி.. தலையே போனாலும் தன்மானத்தை விடக்கூடாது-ன்னு வீட்ல விஷயத்தை சொல்லிட்டேன். அம்மா செம மூட் அவுட். அப்பா வீட்டுக்கு வந்தவுடனே சொல்லிட்டாங்க. அப்பாவும் கடமை தவறாம என்னைப் பின்னிட்டாரு. அடுத்த பரீட்சை-ல நல்ல மார்க் வாங்குவேன்-னு சொன்னேன். அப்பறம்தான் விட்டாரு. அப்போ தெரியல. இனி வரப்போற எல்லா exam-கும் இப்படித்தான் அடிக்கப் போறாரு.. நானும் இப்படித்தான் சொல்லப்போறேன்-னு.. விதி வலியது. அடுத்த ஒரே மாசத்துல midterm. இந்த தடவை சொன்ன சொல்லக் காப்பாத்தணும்-னு முடிவு பண்ணி வெறிகொண்டு படிக்க ஆரம்பிச்சேன். பரீட்சை முடிஞ்சு ரிசல்ட் வந்துச்சு. ரஜினி ஒரே பாட்டுல பெரிய ஆளா வர மாதிரி இங்க நீங்க கற்பனை பண்ணினால், நிர்வாகம் பொறுப்பல்ல. இந்த தடவை 3 சப்ஜெக்ட் அவுட் (என்ன கொடுமை சரவணன்). சும்மா விடுவாங்களா ராமதிலகம்.. (போன ஜென்மத்துப் புண்ணியத்தைப் பாத்து கடவுள...

பிரசன்னாவின் பிரச்சனைகள் - 1

என்னோட பிளாக்-கையும் மதிச்சுப் பாக்க வந்த உங்களுக்கு நன்றி  என்னடா பிரசன்னா-பிரச்சனை-ன்னு எழுதிருக்கானே, இவனுக்கு அப்படி என்ன பிரச்சனை-னு நினைக்கிறீங்களா? "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்" ரேஞ்சுக்கு பிரச்சனை இருக்கு பாஸ். ஆனா நாம எல்லாம் பிரச்னையை போர்வையா போத்திட்டு தூங்குவோம்-ல (ஒரு போர்வை வாங்க துப்பு இல்லையடா உனக்கு-னு நீங்க மனசுக்குள்ள நினைக்கறது எனக்கே சத்தமா கேக்குது. ஆனா மேட்டர் கோர்வையா வருது பாருங்க) நான் பிறக்கும் முன்னமே, ஆன் குழந்தை தான் பிறக்கும்-னு கணிச்சு பிரசன்ன வரதன் தான் பேரு-ன்னும் முடிவு பண்ணிட்டாங்க. வேற யாரு.. எங்கப்பா அம்மா தான். பட் அந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு. எங்கம்மாவுக்கு சீமந்தம் ஏற்பாடு பண்ணப்ப தான் முதல் பிரச்சனை ஆரம்பம். எங்கப்பா கூடப்பிறந்த பெரியப்பா பெரியப்பா-னு 2 பேரு (எங்கப்பாவுக்கு 2 அண்ணன்) சீமந்த செலவை நாங்க ஏத்துக்க முடியாதுன்னு பிரச்சனை. அப்பல்லாம் எல்லாரும் கூட்டுப் பொரியல் குடும்பமா இருந்தாங்களாம். யாருன்னு கேக்கறீங்களா.. தாத்தா, பெரியப்பா 1 பெரியம்மா 1, அவங்க 3 பசங்க (லேட்டர் என்ட்ரி 2 ஆக மொத்தம் 5), பெரியப...