Posts

மதுரனந்தபுரம்

Image
கி.பி.2212 நண்பன் கிருஷின் வற்புறுத்தலால் இந்தியா செல்லும் சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தான் மூர். அவர்களது குடும்பம் அமெரிக்காவில் குடியேறி நான்கைந்து தலைமுறைகளைக் கடந்துவிட்டது. தாத்தா என்றால் அத்தனை பிரியம் மூருக்கு. அவர் இறந்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும், இப்போது இந்திய சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தது கூட தாத்தா பாசத்தால் தான். ஒரு தடவையாவது இந்தியாவையும் குறிப்பாக தமிழகத்தையும் தனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர்களையும் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டார். அவரால் ஆசைதான் பட முடிந்ததே தவிர, அதை செயல்படுத்த முடியவில்லை. எனவே அவர் ஆசைப்பட்டு, செல்ல முடியாத ஒரு இடத்திற்கு தான் போகப் போகிறோம் என நினைத்து சந்தோஷப்பட்டான் மூர். பயணத்திற்குத் தேவையானவற்றை எடுத்துவைக்கும்போது தாத்தவுடைய "டூரிஸ்ட் ப்லேசஸ் இன் இண்டியா" புத்தகதையும் எடுத்துக் கொண்டான். லீவ் அப்ரூவாகி, டிக்கெட் புக் செய்து, ஒருவழியாக இந்தியா வந்தே விட்டார்கள் இருவரும். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய அந்த நொடி தாத்தவைத்தான் நினைத்துக் கொண்டான் மூர். வடஇந்தியாவில் பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு டெல்லியில் டெண்ட் அட...

குறளி @ குட்டிச் சாத்தான்

Image
1970களில் சின்னமனூரில் கிருஷ்ணய்யர் ரொம்பப் பிரபலம். கண் கட்டு வித்தையில் கை தேர்ந்தவர். அவர் செய்யும் மந்திர தந்திர வித்தைகளைப் பார்க்க எப்போதுமே குழந்தைகள் பட்டாளம் அவரைச் சூழ்ந்திருக்கும். குழந்தைகளிடம் அவர் வீட்டுக்கு வழி கேட்டால், அவரது வீடு வரை கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவார்கள். அவருக்கும் அவர் மனைவி கோமளம்மாளுக்கும் குழந்தைகள் என்றால் அத்தனை பிரியம். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லததும் அந்தப் பிரியத்திற்க்கு காரணம். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வசதி இல்லையென்றாலும், சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தனர். பெரும்பாலும் இந்த மாதிரி அருந்தொழில் (கண் கட்டு வித்தை, சித்து வேலை, மந்திர தந்திர வேலைகள்) செய்பவர்களிடத்து, வசதி குறைவாகவே இருக்கும். அவரது எழுதிய புத்தகங்கள் அவருக்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தந்தன. அவர்கள் இரண்டு பேருக்கு அந்த வருமானமே போதுமானதாக இருந்தது. அவரது "பீதாம்பர ஜாலத் திரட்டு" புத்தகம் ரொம்பப் பிரபலம். அதில், ஆயிரம் கண்கட்டு வித்தைகள் பற்றியும், அதைச் செய்யும் முறைகள் பற்றியும் விளக்கியிருப்பார். செக்கச் சிவந்த, தீயில் சுட்ட இரும்பைக் கையில் பிடிப்பது, தீக் ...

மனாமா டூ மணிலா - ஒரு ரவுண்ட் ட்ரிப்

Image
எதிர்பாராத வேளையில் மணிலா போறதுக்கு வாய்ப்பு வந்தது எனக்கு. ஒருபக்கம் சந்தோஷமா இருந்தாலும், ஒரு பக்கம் சின்ன வருத்தம் இருந்துச்சு. ரெண்டரை வருஷமா இந்தக் கம்பெனில தானிருக்கேன். ஒரு பயலும் கண்டுக்கல. இப்போதான் கல்யாணமாகி, மனைவியை இந்த நாட்டுக்குக் கூட்டிட்டு வந்து 15-20 நாள் ஆகுது. இப்போ வந்து மணிலாவுக்கு போ, மங்காத்தாவுக்குப் போன்னு சொல்றாங்களேனு தான் வருத்தம். ஒரு புதன் கிழமை அலுவலகத்தில் இருந்தபோது ஐராவதம் (யானை சைசுக்கு இருப்பார் என்பதால் அந்தப் பெயர்) அழைத்தார். நீ அடுத்த வாரம் பிலிப்பைன்ஸ் போக வேண்டும். எனவே நாளை வரும்போது பாஸ்போர்ட் மற்றும் 2 போட்டோக்கள் எடுத்துவா என்றார். சாயங்காலம் வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் வேறு சில விஷயங்களைப் பேசிவிட்டு, ஒரு பிசினஸ் ட்ரிப்புக்கு பிலிப்பைன்ஸ் போறேன்னு சொன்னேன். ஏதோ விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைத்து சிரித்தாள். பிறகு நான் உண்மையைத்தான் சொல்கிறேன் எனத் தெரிந்தவுடன் (எப்படித் தான் கண்டுபிடிக்கிறாங்களோ இந்தப் பொம்பளைங்க மட்டும்) முகம் சுருங்கிவிட்டது. அஃபிஷியல் ட்ரிப் என்பதால் அவளை அழைத்துப் போக முடியாது. அதனால் தான் அந்த ரியாக்ஷன். பிர...

கேகிவாகனன் பதி

அகிலனுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டதில இருக்கிற வல்லக்கோட்டை. சென்னையிலருந்து செங்கல்பட்டு போற வழியில ஸ்ரீபெரம்பதூருக்கும், சிங்கபெருமாள் கோவிலுக்கும் நடுவில இருக்கு இந்த வல்லக்கோட்டை. அங்க இருக்கிற முருகன் கோவில் ரொம்பப் பிரசித்தி. இந்தக் கோவில்ல இருக்கிற சிலை தான் இந்தியாவிலயே பெரிய முருகன் சிலை. பிறந்தது, வளந்தது எல்லமே அந்த ஊர் தான். இவனுக்கு 4 வயசிருக்கும்போதே ஒரு விபத்துல அப்பா இறந்துட்டார். அம்மாவும் படிச்சிருந்ததால அவரோட வேலை, அம்மாவுக்கு கிடைச்சது. அந்த வருமானத்தை வெச்சு தான் இவனும் இவன் தங்கச்சியும் படிச்சதெல்லாம். வல்லக்கோட்டையில இருந்த காரணத்தாலயோ என்னவோ, முருகன் மேல பக்தி ஜாஸ்தி. கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் இதெல்லாம் மனப்பாடம். ஸ்கூல்ல இவனுக்கு பெஸ்ட் பிரண்டு கார்த்தி மட்டும் தான். அவங்க அப்பா சங்கரன் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர். சொந்த ஊர் திண்டுக்கல். இந்த ஊருக்கு வந்து 1 வருஷமாகுது. கார்த்தியோட அம்மவும், அகிலனோட அம்மவும் ஒரே ஆபீஸ்ல தான் வேல செஞ்சாங்க. கார்த்தி அகிலனை விடவும் ஒரு வயசு பெரியவன். ஆனா வெளியூர்ல வேற ஸ்கூல்ல படிச்சதால, 2ம் க்ளாஸுக்கு தான் சீட் கு...

சிதைவு

சக்தி மட்டும் தான்னு கிடையாது. ஹோட்டல்ல வேலை செய்யற எல்லார் கிட்டயும் நல்லா பேசுவேன். பொதுவாவே ஹோட்டல்ல வேலை செய்யறவங்கன்னா நிறைய பேருக்கு ஒரு இளக்காரமான ஒரு பார்வை தான் இருக்கும். ஹோட்டல்ல வெய்ட்டர் தானே, இலை எடுக்கறவன் தானே என்கிற மாதிரியான பார்வை. ஹோட்டல்ல வேலை செய்தவன்கிற முறையில அவங்களோட வேலை எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கு தெரியும். நாம அவங்களை வெளியில இருந்து பாக்குறதுக்கு ஒரு யுனிபார்ம், கையில மெனு கார்ட், புன்னகையுடன் கூடிய உபசரிப்புன்னு தான். உள்ளுக்குள்ள எத்தனை விதமான மன உளைச்சல்கள், சொந்தப் பிரச்சனைகள், இது தவிர வேலை செய்யற இடத்துல இருக்கும் பிரச்சனைகள்-ன்னு அவங்க வாழ்கை வேற துறைகளில் வேலை செய்யும் சாமானியனை விடவும் கொஞ்சம் கஷ்டம் தான். நீங்க குடும்பத்தோட ஹோட்டலுக்கு போறீங்க. ஒரு டேபிள் காலி ஆகுது. நீங்க, உங்க மனைவி, பள்ளி செல்லும் வயதிலுள்ள உங்க குழந்தைங்கன்னு எல்லாரும் சீட்ல உக்காந்த அப்பறம், ஒரு சின்னப் பையன் வந்து இலை எடுத்துட்டு டேபிளை துடைச்சு க்ளீன் பண்ணுவான். தன் வயசுப் பசங்க எல்லாம் அவங்கவங்க அப்பா அம்மாவோட, குடும்பத்தோட சாப்பிட ஹோட்டலுக்கு வந்திருக்காங்க. ஆனா இவனோ இலை...

ஆட்டுக்கால் 11 ஜி

டெஸ்டிங் யுனிட்ல எல்லாரும் ரொம்பப் பரபரப்பா இருந்தாங்க. ஆட்டுக்கால் 11 ஜி 'லைவ்' டேட்டா பேஸில் எரர் அடித்ததே அவங்க பரபரப்புக்கு காரணம். அவங்களால எங்கருந்து எரர் அடிக்குதுன்னே கண்டுபிடிக்க முடியலை. ஏன்னா இதே டேட்டா பேஸை இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணின இன்னொரு யுனிட், எரர் எதுவும் இல்லைன்னு சொல்லி ரிபோர்ட் குடுத்துட்டாங்க. இப்ப இருக்குற டெஸ்டிங் யுனிட் மட்டுமில்லை, பெரிய ப்ரொக்ராமிங் கம்பெனியான CP(Cut-throat Programming) கம்பெனில கூட யாருக்கும் இதுல எரர் இருக்கா இல்லையன்னு உறுதியா சொல்ல முடியலை. இந்தக் கோடிங் எழுதினது எல்லாம் DMK(Data Mining Knowledge)-ன்னு ஒரு கம்பெனி. திடீர்னு ஒரு நாள் கோடிங் எழுதின கம்பெனில வேலை பாத்த ஆரோக்கிய ராஜா-வை டெஸ்டிங் யுனிட் ஆளுங்க சும்மா விசாரிச்சிருக்காங்க. அவங்க கேட்ட கேள்விக்கெல்லாம், 'வரும்... ஆனா வராது' ரேஞ்சுக்கு பதில் சொல்லிருக்காரு ராஜா. அவங்களுக்கு இவரு மேல சந்தேகம் அதிகமாயிடுச்சு. உடனே அவங்களோட டெல்லி ஆபீஸுக்கு இவரை கூட்டிட்டுப் போய் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ராஜாவும் தனக்கு தெரிஞ்ச ப்ரொக்ராமிங் அறிவை வெச்சு சமாளிச்சுப் பாத்தி...

சப்பாத்தி

இளநிலைக் கல்லூரி நாட்களில் எனது டிபன் பாக்ஸ் மிகப் பிரபலம். எனது அம்மா செய்து தரும் சப்பாத்திகளுக்காக. சப்பாத்தி அத்தனை மெதுவாக இருக்கும். அதற்கு சைட்-டிஷ் பெரும்பாலும் உருளைக் கிழங்கு குருமாவக  இருக்கும். சாப்பிட்ட பிறகு 2 - 3 மணி நேரமாவது அந்தக் குருமா வாசனை கையில் இருக்கும். சப்பாத்தி கொண்டு செல்லும் நாட்களில் அதை நான் சாப்பிட்டதாக எனக்கு நினைவேயில்லை. சக மாணவர்களின் டப்பாக்களை லவட்ட ஒரு குழுவே இருக்கும். இதன் தலைவர் விக்கி என்கிற விக்னேஷ். பிரேம், சண்முகம், முத்துராஜா, ராஜாக்கண்ணு, ஆறுமுகம், ஜெயபாலன், பாரி இவர்களெல்லாம் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள். சிலர் அவ்வப்போது மட்டும் உறுப்பினராவார்கள். 3வது / 4வது ஹவரின்போதே அவர்கள் கட்சிப் பணி யை ஆரம்பித்து விடுவார்கள். முதலில் மாட்டுவது பிரசாத்தின் டப்பாவாகத் தானிருக்கும். அவன் தினமும் முட்டை கொண்டு வருவான். இது அவனுடன் பள்ளியில் படித்த விக்கிக்கு தெரியும். அதனால் அவனது முதல் குறியே பிரசாத்தின் டப்பா தான். அடுத்ததாக மாட்டுவது மதிவாணனின் டப்பா. அவன் கொண்டுவரும் ஆனியன் ரைஸ், எனது சப்பாத்தியைப் போல அத்தனை பிரபலம். ஆனியன் ரைஸ் கொண்டு...