சிதைவு
சக்தி மட்டும் தான்னு கிடையாது. ஹோட்டல்ல வேலை செய்யற எல்லார் கிட்டயும் நல்லா பேசுவேன். பொதுவாவே ஹோட்டல்ல வேலை செய்யறவங்கன்னா நிறைய பேருக்கு ஒரு இளக்காரமான ஒரு பார்வை தான் இருக்கும். ஹோட்டல்ல வெய்ட்டர் தானே, இலை எடுக்கறவன் தானே என்கிற மாதிரியான பார்வை. ஹோட்டல்ல வேலை செய்தவன்கிற முறையில அவங்களோட வேலை எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கு தெரியும். நாம அவங்களை வெளியில இருந்து பாக்குறதுக்கு ஒரு யுனிபார்ம், கையில மெனு கார்ட், புன்னகையுடன் கூடிய உபசரிப்புன்னு தான். உள்ளுக்குள்ள எத்தனை விதமான மன உளைச்சல்கள், சொந்தப் பிரச்சனைகள், இது தவிர வேலை செய்யற இடத்துல இருக்கும் பிரச்சனைகள்-ன்னு அவங்க வாழ்கை வேற துறைகளில் வேலை செய்யும் சாமானியனை விடவும் கொஞ்சம் கஷ்டம் தான். நீங்க குடும்பத்தோட ஹோட்டலுக்கு போறீங்க. ஒரு டேபிள் காலி ஆகுது. நீங்க, உங்க மனைவி, பள்ளி செல்லும் வயதிலுள்ள உங்க குழந்தைங்கன்னு எல்லாரும் சீட்ல உக்காந்த அப்பறம், ஒரு சின்னப் பையன் வந்து இலை எடுத்துட்டு டேபிளை துடைச்சு க்ளீன் பண்ணுவான். தன் வயசுப் பசங்க எல்லாம் அவங்கவங்க அப்பா அம்மாவோட, குடும்பத்தோட சாப்பிட ஹோட்டலுக்கு வந்திருக்காங்க. ஆனா இவனோ இலை...