அவள் பெயர் கணினி

வழக்கமாகச் செல்லும் பிரௌசிங் சென்டரில் அதி மும்மரமாக 'சாட்'டிக் கொண்டிருந்தான் வினய். சாட்டிங் அக்கவுன்ட் இல்லாமல் இந்த இன்டர்நெட் யுகத்தில் இப்படியும் ஒரு ஆளா என அவனது சக நண்பர்கள் கிண்டலடித்ததன் காரணமாகவே அவன் பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கினான். அதுவரை அவனது கேர்ள் பிரண்டுகளெல்லாம் யார் மூலமாகவோ அறிமுகமானவர்கள் தான். ஆனால் இப்போது பேஸ்புக்கில் வெளிநாட்டு யௌவன நங்கையர்கள் கூட நண்பிகள் ஆனார்கள். விளைவு, இப்போது அவனுக்கே அவன் எத்தனை தளங்களில் மெம்பர் எனத் தெரியாத அளவிற்கு வந்துவிட்டது.




இரண்டு வாரங்களாக அவனுக்கு 'சாட்'டிங்கின் போது மோகம் வரக் காரணம் ப்ரிஸில்லா. தற்செயலாக ஒரு சாட் ரூமில் நுழைந்தபோது பெயர் வசீகரமாகப் பட்டதால் 'ஹாய்' என்றொரு மெசேஜை தட்டினான். பெரும்பாலும் பெண்களிடமிருந்து ரெஸ்பான்ஸ் இருக்காது என்பதால் அவளது பதிலை எதிர்பார்க்கவில்லைதான் என்றாலும், பதில் வந்தவுடன் சற்றே ஆர்வமானான். 27 / M / Hyderabad, என அனுப்பிவிட்டுக் காத்திருந்தான்.

22 / F / B'lore, என பதில் வந்தவுடன் குஷியாகிவிட்டான். இப்படித்தான் அவனுக்கு அவள் அறிமுகமானாள். பின்னர், பரஸ்பரம் தகவல் பரிமாறிக் கொண்டனர். யுனிவர்சிட்டி ஆப் ரோபோடிக்ஸ்-ல் முதலாமாண்டு மாணவி. பிரண்ட்ஷிப், டேட்டிங்கில் ஆர்வமுண்டு எனக் கூறினாள். இதுவரை அவள் டேட்டிங் போனதில்லை என்றவுடன், ஒருவேளை ரொம்ப அவலட்சணமாக இருப்பாளோ என சந்தேகப்பட்டான். அவள் எப்படியிருப்பாள் எனத் தெரிந்துகொள்ளத் துடித்தான். வீடியோ சாட்டில் நேருக்கு நேர் பார்த்து பேச முடியுமென்பதால் அவளை வீடியோ சத்திற்கு அழைத்தான். சம்மதித்தாள். ஆனால் ஆடியோ மட்டுமே வந்தது. வீடியோ வரவில்லை.



ஏன் வீடியோ வரவில்லை எனக் கேட்டான். 'நான் நைட் டிரஸ்-ல் இருக்கிறேன்' எனக் கிறக்கமாக பதிலளித்தாள். அவளது குரல், அதிலிருந்த அந்தக் கிறக்கம், வினயை ஏதோ பண்ணிற்று. உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்றான். பதில் வந்தது. ஸ்நாப் ஷாட்களாக(போட்டோ).அவள் இருந்தால், லைட்டரிள்ளமலே சிகரெட் பற்றிக் கொள்ளும். அவ்வளவு அழகு. மோல்டில் வார்த்தது போல மொழு மொழுவென கொழு கொழுவென இருந்தாள்.

அதிலும் அந்த நீல நிற 'ஸீ-த்ரூ' நைட் ட்ரஸில், 'லோ-நெக்'கில் மிகவும் கவர்ச்சியாக இருந்தாள். போடோவைப் பார்த்தவுடனேயே இவனுக்குள் பற்றிக்கொண்டது. இந்த நொடி அவளை நேரில் பார்க்க வேண்டுமென ஆசை வந்தது அவனுக்கு. கேட்டும் விட்டான். 'நாம் இன்னும் அவ்வளவு நெருக்கமாகவில்லை' என பதில் வந்தது. வேறேதும் சொல்லாமல் அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டான். ஒரு வாரம் இருவருக்குள்ளும் எந்தத் தகவல் பரிமாற்றமுமில்லை.

வினய் தனது வலையை விரித்துக் கொண்டுதானிருந்தான் வேறு சில பெண்களுக்கு. ப்ரிஸில்லாவிடமிருந்து எப்படியும் மெசேஜ் வருமென்று எதிர்பார்த்திருந்தான். அவனுக்கா தெரியாது இது போன்ற பெண்களைப் பற்றி. அவனறியாதவாறு அவனை கவனித்துக் கொண்டிருந்தால் அவள். அவன் அதை உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. சரியாக 8 வது நாள் அவளிடமிருந்து மெசேஜ் வந்தது. எப்படியிருக்கிறாய், ஏன் பேசிக் கொண்டிருக்கும்போதே இணைப்பைத் துண்டித்துவிட்டாய், என்னைப் பிடிக்கவில்லையா, இத்தனை நாட்கள் ஏன் மெசேஜ் இல்லை, என அடுக்கடுக்கான கேள்விகள்.

வினய் உடனே பதிலளிக்கவில்லை. ஆனாலும் அவள் விடாமல் 'பிங்' செய்துகொண்டிருந்தாள். இவனுக்கும் அவள் அவ்வாறு செய்வாள் எனத் தெரியும். சிறிது நேரம் கழித்து, ' நாம் இன்னும் அவ்வளவு நெருக்கமாகவில்லை' என மட்டும் பதில் 'டைப்'பினான். உடனே அவளிடமிருந்து ஆடியோ சாட்டிற்க்கான கால் வந்தது. தான் நினைத்தது பலித்ததால் லேசான சிரிப்போடு சில நொடிகள் 'ஆன்சர்' பட்டனை அழுத்தினான்.


இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. எதிர்முனையில் அவள் விம்மும் சத்தம் மட்டும் கேட்டது. வினய் உடனே 'ஹலோ... ஹலோ. ப்ரிஸ்ஸி.. ஏன் அழுகிறாய்? ப்ளீஸ். அழாதே. இனி கண்டிப்பாக தினமும் பேசுகிறேன். மெசேஜ் அனுப்புகிறேன். அழாதே ப்ரிஸ்ஸி' என்றான். அவளும் சற்றே தேரியவாறு 'சரி' என்றால். அடுத்தடுத்து வந்த நாட்களில் சில பல சம்பாஷனைகளைப் பரிமாறிக் கொண்டனர். வெகு சீக்கிரமே அவள் வினயிடம் தான் காதலைச் சொன்னாள். அதனை ஏற்றுக்கொண்டு தானும் அவளைக் காதலிப்பதாக மறுமொழி கூறினான். தயக்கமாக மீண்டும் 'உன்னைப் பார்க்க வேண்டும்' என்றான் வினய். அவள் உடனே சரி என்றால். வீடியோ 'சாட்'தில் அவளை அழைத்தான். அதனை கட் செய்துவிட்டாள்.

லேசான கோபத்துடன் காரணத்தைக் கேட்டன் வினய். 'சாட்'டில் இல்லை. நேரில் பார்க்கணும் உன்னை என்றாள். அவளது இந்த பதிலால் ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனான். அவள் தந்த பெங்களூரு அட்ரஸ்சைக் குறித்துக் கொண்டு ஒரு முத்தைப் பதித்தான் தனது மைக்கில். அவளிடமிருந்து மெலிதான சிரிப்பு மட்டும் பதிலாய் வந்தது. வெறும் சிரிப்பு மட்டும்தான என்றவுடன், நேரில் வரும்போது என்னையே தரேன் எனக் கூறி இணைப்பைத் துண்டித்தாள். தன் எண்ணம் இவ்வளவு சீக்கிரம் ஈடேறப்போவதை நினைத்து அவனது அன்றைய இரவு கழிந்தது. கனவெல்லாம் ப்ரிஸில்லா தான். நீல நிற நைட் ட்ரஸில்.


ப்ரிஸில்லாவை நேரில் பார்க்கப் போகும் சந்தோஷத்துடனும் பல விதமான கிளர்ச்சியான எண்ணங்களுடன் பெங்களூருவை நோக்கிப் பயணப்பட்டான். அவனைப் போல் இன்னும் பல வினய்-கள் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நிஷா, வந்தனா, ஷாந்தி, சம்யுக்தா, ராணி, சமந்தா இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பெயரில், அவள் சொன்ன அதே பெங்களூரு அட்ரஸ்சுக்கு. தாங்கள் திரும்பப் போவதில்லை என்பதறியாமல். அவர்கள் தேடிப் போவது, இணையத்தில் பார்த்து நேரில் சிதைந்து அதன் காரணமாகவே மிகக் கொடூரமாக துர்மரணமடைந்து , இது போன்ற வினய்-களை பழி வாங்கத் துடிக்கும் அவளை. இல்லை அதை. அவள் பெயர்...

Comments

Post a Comment

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2