புரியலை. என்ன சொல்ல வர்றீங்க?
கணவன் ஷங்கருக்காக காத்திருந்துவிட்டு அப்போது தான் படுத்தாள் லேகா. அடுத்த 10 நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது. ஷங்கர் தான் பார்ட்டி முடிந்து திரும்பியிருந்தான். ஜன்னலை மட்டும் திறந்து பார்த்தாள். தண்ணியடிச்சுட்டு வந்தா கதவை திறக்க மாட்டேன், என்று சொல்லித்தான் அனுப்பியிருந்தாள். ஆனாலும், எதிர்பார்த்தது போலவே தண்ணியடித்துவிட்டு தான் வந்திருந்தான்.
இடது பக்கம் வெளியே எடுத்து விடப்பட்ட சட்டை, வலது பக்கம் இன்னமும் இன்ஸர்ட் செய்யப்பட்டு இருந்தது. ஒரு கை மட்டும் முழங்கை வரைக்கும் மடிக்கபட்டு இருந்தது. மற்றொரு கை, கஃப் பட்டன் மட்டும் கழட்டி விடப்பட்ட நிலையில். ஒரு காலில் மட்டும் சாக்ஸ் இருந்தது. சற்று தள்ளிப் பார்த்தாள். கேட் அருகிலேயே ஷூ-வும் ஒரு கால் சாக்ஸ்-ம் இருந்தது. கண்கள் இரண்டும் சிவப்பேறி வீங்கியிருந்தன. அந்தக் கண்களுடன், இவளைப் பார்த்து, ரொமாண்டிக்காக கண்ணடித்தான். செல்போன் கயிறுடன், முதுகு பக்கம் தொங்கி கொண்டிருந்தது. கழுத்தில் கட்டியிருந்த டை, பேண்ட் பாக்கெட்டில் சுருட்டி வைக்கப் பட்டு, முழங்கால் வரைக்கும் தொங்கி கொண்டிருந்தது. அவள் முகத்தில் ஒசாமாவைக் கண்ட அமெரிக்கப் படைகள் போல அத்தனை கோபம். இவளைப் பார்த்து விட்டு, கோமாளித்தனமாக சிரித்தபடியே சொன்னான்,

ஷங்கர் : கதவுத் தற சல்லம்.
லேகா : குடிச்சுட்டு வந்தா, கதவைத் திறக்க மாட்டேன்னு சொல்லித்தான அனுப்பினேன்?
ஷங்கர் : யாழு சொள்னா நான் குயிசிருக்கேன்னு? இல்லவே இல்ல செழ்ழம். கதவ தொற.
லேகா : ம்க்கும். யாராவது சொல்லித்தான் தெரியணுமா? பாத்தாலே தெரியுதே. மூக்கு முட்ட குடிச்சுட்டு வந்திருகீங்கன்னு.
ஷங்கர் : நோ நோ டார்ளீங்ங்.. ஒரே ஒரு ஸ்மாலோட பதும்ன்னு நிர்த்திடன். கார்த்திப் பய தான், லர்ஜ் சாப்டான். நாழ் ளார்ஜ். ல்ல. அஞ்ச் என்றான் 3 விரல்களைக் காட்டி.
லேகா : அவர் 5 லார்ஜ் சாப்ட்டா, உங்களுக்கு எப்படி இவ்வளவு போதை வந்துச்சு?
ஷங்கர் : அவன் தான், கம்னி குட்றான்னு செல்லி என்க்கும் குத்துட்டான். ஆனா ந்நான் ஒரு ஸ்மால் தான் குட்சென்.
என்றவாறே, தள்ளாடியபடி கீழே விழப் பார்த்தான்.
லேகா : கீழ விழுந்து தொலைக்காதீங்க, என்று கதவைத் திறந்து விட்டாள் அவனுக்கு.
ஷங்கர் : லேக்கி... என்ன்ன் மெள உக்கு அவ்ளவ் பாஸ்ஸ்ஸ்சமா???
லேகா : இப்ப தூங்குங்க. அதெல்லம், காலையில பேசிக்கலாம்.
ஷங்கர் : ஓகே. குழஸ்சௌ.... ஒமரா....................... நே...
லேகா : புரியலை. என்ன சொல்ல வர்றீங்க?
ஷங்கர் : சல்லம், குடீஸ்ட்டு ஒலர்றேன்னு நெக்காத. ஐ ஆம்லெட் யு. (ஐ ஆம் லவ் யு-வைத் தான், அப்படி சொன்னான்.)
தலையணைக்குப் பக்கத்தில் வைத்திருந்த சாப்பாட்டை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு பிறகு, மட்டையாகிவிட்டான்.
விடிந்து விட்டது. ஷங்கர் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். எப்போதும் போல் இல்லாமல், கன்னத்தை நக்கி நக்கி எழுப்பினாள் லேகா. மெல்ல கண்ணைத் திறந்து பார்த்தான். அவன் வீட்டு நாய் பிங்கி அவனைச் செல்லமாக நக்கிக் கொண்டிருந்தது. ச்சீ, போ போ, என்றவாறே எழுந்தான். அவன் படுத்திருந்தது கேட் பக்கத்தில். நாய்க்கு சாப்பாடு வைக்கும் தட்டைத் தான், தலைக்கு வைத்து தூங்கியிருக்கிறான்.
இரவு அவன் குடித்துவிட்டு வந்திருந்ததால், லேகா கதவைத் திறக்கவேயில்லை. லேகாவிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு அவன் பேசியதெல்லாம் பிங்கியுடன் தான். சாப்பிட்டது கூட பிங்கியின் சாப்பாடு தான். இனிமேல் இந்தக் கார்த்தி-யுடன் குடிக்கப் போகவே கூடாது என்று நினைத்தவாறே வீட்டிற்குள் சென்றான். இவனது கோலத்தைப் பார்த்து, லேகாவின் கோபம் சற்றே தனிந்திருந்தது.
புரியலை என்ன சொல்ல வர்றீங்க......இப்படி சொன்னது நாயா?......
ReplyDeleteயோவ்......குசும்புய்யா உமக்கு!.......