Posts

Showing posts from 2019

என்னை நோக்கிப் பாயும்... பைரவர்

Image
கிராமங்களில் நாய்கள் சர்வ சாதாரணம். வீட்டிற்கு ஒன்று இருக்கும். அல்லது வீதிக்கு இரண்டோ மூன்றோ. அவ்வப்போது வீதியில் யாரேனும் சோறு இடுவார்கள். அந்த வீதிக்கு காவல் அந்த பைரவ/பைரவிகள். எங்கள் வீட்டிலும் கூட நாய் வளர்த்தோம். நான் பிறக்கும் சமயம் வரையில் அதற்கு முன்பும் குறைந்தபட்சம் 10 மாடுகள், 2-3 நாய்கள் இருக்குமாம். எனக்கு விபரம் தெரிந்த பிறகு 1-2 மாடுகள், அவ்வப்போது 1 நாய் என்றானது. ------------------------   நானும் தங்கமணியும் வாக்கிங் போவதுண்டு. இளையவனின் கண்ணில் படாமல், சாவியை எடுத்து கதவு திறக்கும் சத்தம் கூட வராமல், வீட்டை விட்டு ஓடிப்போய்... நடப்போம். அவன் பார்த்துவிட்டால் அவ்வளவு தான். தானும் வாக்கிங் வருவேன் என்று அழுது புரண்டு அடம்பிடிப்பான். சில சமயம் சாக்ஸும் ஷூவுமாக அவனிடம் மாட்டிக்கொள்வோம். அழுவான்.. பெற்ற மனம் பித்து. அழுகையைப் பார்க்கமாட்டாமல் அவனையும் சாக்ஸும் காலுமாக கிளப்புவோம். அப்பறம் எங்க வாக்கிங்.. நான் MBBS படிக்கறேன். நீ வயசான ஆளு.. எம்பி எம்பி BS படி என்று வசூல்ராஜாவில் சொல்வது போல நான் கொஞ்ச நேரமும், தங்கமணி கொஞ்சநேரமும் அவன் கையைப் பிடித்து நடை

காற்றலை

Image
சிறுவயதில் பட்டம் விட்டு விளையாடும் சிறுவர்கள் மத்தியில் அஷோக் 4 பட்டங்களை இணைத்து பறக்கவிட்டு ஒரு நூலை இழுப்பதன் மூலம் திசையெல்லாம் மாற்றிப் பறக்கச் செய்து கெத்து காட்டுவான். சாதாரண பேப்பர் மடித்து செய்யும் ராக்கெட்டையே வித்யாசமாக செய்து அதில் ஒரு ரோஜாப்பூவோடு பறக்கவைத்து +1 படிக்கும்போது ஒரு பெண்ணிற்கு ப்ரொபோஸ் செய்தான். அசந்துவிட்டாள். அவளுக்கும் இவன் மீது ஒரு கடைக்கண் க்ரஷ் இருந்தது. உடனே காதலை ஏற்றுக்கொண்டாள். ஆனால் அவளை விடவும் எதையாவது பறக்கவைப்பதில் அலாதி ஈடுபாடு அஷோக்கிற்கு. இவனைவிட்டு அவள் பறந்துவிட்டாள். இவனுடன் பள்ளியில் படித்த ரோஹித்தின் தாத்தா திடீரென யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து விடுவாராம். வீட்டில் இருக்கும் பொருளையெல்லாம் இடம் மாற்றி வைப்பாராம். சிறிது நேரத்தில் மீண்டும் கண்ணுக்கு தெரிவாராம். இந்தக் கதையை கேட்டு இவன் சிரித்து வயிறு வலித்து ஆனாலும் அடக்க முடியாமல் சிரித்தான். "டேய் ரோஹித்.. யார்கிட்ட கதை விடுற.. இவங்க தாத்தா மறைவாராம்.. வீட்ல சாமானை எடுத்து இடம் மாத்தி வைப்பாராம்.. திரும்பவும் கண்ணுக்கு தெரிவாராம்.. போடா டேய்.. யாரவது LK

தீபாவளி

Image
தீபாவளி... தலை தீபாவளி கடந்து சில பல வருஷங்களானாலும் கூட இன்னும் மனசுல பசுமையா நிக்கிறது என்னவோ நம்ம சின்ன வயசு தீபாவளி தான். புதுத்துணி எடுக்க முடிவு செய்யறதுல ஆரம்பிக்கற தீபாவளி, தீபாவளியன்னிக்கு பட்டாசு அட்டைப் பெட்டி குப்பைகளை மொத்தமா கொளுத்தறதுல முடியும். மிச்சம் மீதி பட்டாசை எங்கம்மா எடுத்து ஒளிச்சு வெச்சிருந்தா, எப்போவாவது கார்த்திகை-ல முடியும். புதுத்துணி-ன உடனே ஏதோ கலர் கலரா துணி வாங்கப்போறோம்-னு நாம ஒரு கணக்குப்போட்டு வெச்சிருப்போம். ஆனா ஸ்கூல் யூனிஃபார்ம் தான் பல தீபாவளிகளுக்கு புதுத்துணியா கிடைச்சிருக்கு. சமயத்துல எக்ஸ்ட்ராவா ஒரு கலர் சட்டை கிடைக்கும். அந்த தீபாவளியெல்லாம் அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதுவும் நாம கேக்கற பட்டாசெல்லாம் வாங்கி கொடுத்துட்டா, அவ்வளவு தான். கைலயே புடிக்க முடியாது. அப்போல்லாம் பட்டாசு கிப்ட் பாக்ஸ் இல்லாத சமயம். நாமளே பாத்து பாத்து பட்டாசு வாங்கலாம். நம்ம டேஸ்டுக்கு (என்ன பட்டாசை நக்கிப் பாத்தா வாங்குவ-ன்னு கேக்கறவன் வீட்டுக்குள்ள, தெரு பயலுக எல்லாரும் ராக்கெட் விடுவான்) தகுந்தமாதிரி மத்தாப்பு கம்மியாவும், வெடிக்கற பட்டாசு அத

Thought Process & சமாளிஃபிகேஷன்

Image
இந்த ரெண்டுமே பெண்களின் கவச குண்டலம் போல பிறக்கும்போதே default ஆக அவர்களிடம் இருக்கும் சிறப்புகள். நேத்திக்கு 2 பெண் குழந்தைகள் முறையே 9 வயசு (4ம் கிளாஸ்), 7 வயசு (1ம் கிளாஸ்). வண்டில பின் சீட்ல உக்காந்து பேசிட்டு வந்தாங்க. எங்கே எப்போது ஆரம்பிச்சது-னு தெரியலை. நான் தற்செயலா அதை கேட்டு மிரண்டுட்டேன்.. குழந்தை-லேயே அவங்க சிந்திக்கும் திறனும், சமாளிக்கும் திறனும் பாத்து அப்படியே மெர்சலாயிட்டேன். அவங்க ஏதேதோ பேசிட்டு வந்தாங்க.. சிக்னலில் நின்றபோது நான் கேட்டது மட்டும்.. 7 வயசு குழந்தை: நான் இந்த வருஷம் 1st ஸ்டாண்டர்ட் பாஸ் பண்ணி, என்னை ஸ்பெஷல் ப்ரோமோஷன் பண்ணி, 10th ஸ்டாண்டர்ட்-க்கு அனுப்பிடுவாங்க தெரியுமா.. 9 வயசு குழந்தை: (வயசோ கம்மி.. ஆனா தன்னை மிஞ்சி இவ எப்படிப் போகலாம்/போக முடியும்-ங்கற எண்ணத்தில் அவளை மடக்க நினைத்து) ஓஹோ.. 10th ஸ்டாண்டர்ட் போயிடுவியா நீயி.. அப்போ சரி. Geography ஸ்பெல்லிங் சொல்லு.. உனக்கு சொல்லிக் குடுத்திருப்பங்களே... கரெக்ட்டா சொன்னாத்தான் 10th ஸ்டாண்டர்ட் போக முடியும்.. நான் கூட, சொல்றதுக்கு கொஞ்ச நேரம் எடுத்துக்குவா என்று நினைத்து முடிப்

விக்ரம் வேதா(ளம்)

Image
அவர் பெயர் முருகனடிமை. அசந்தர்ப்பமான சமயங்களில் (கொட்டாவி விடுவது மாதிரி) நம்மையும் மறந்து அப்பா, அம்மா, கடவுளே.. என்று சொல்லுவோம். இவர் அப்படி சொல்லும் வார்த்தை - முருகா. மதுரை பூர்வீகம் என்பதாலோ என்னவோ கொஞ்சம் கள்ளழகரின் காற்று பட்டு, சமயங்களில் வீர வைணவராகவும் இருப்பார். ஆனால் உள்ளுக்குள் எப்போதும் முருகனடிமையே. மற்றபடி தானுண்டு வேலையுண்டு என்று இருப்பவர். ஆனால் பாவம், நித்யகண்டம் பூர்ணாயுசு என்பது போலத்தான் வாழ்க்கை. பிரச்சனைகளைப் போர்வையாகப் போர்த்திக்கொண்டும், பயத்தையே பசிக்கு உணவாகவும் சாப்பிட்டும் காலம் கடத்துபவர். ஒரு சமயம் ஒரு இடத்திற்குப் போக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தப்பறம், இப்படியெல்லாம் நேரா போகவேண்டிய இடத்துக்கு டயத்துக்குப் போயிட்டா நம்ம மானம் மருவாதை என்னாகிறது-னு நினைச்சு, வேற பஸ்ஸில ஏறி சம்பந்தமே இல்லாத இடத்துக்குப் போயி, அதுக்குள்ள எல்லாரும் எங்க இருக்கீங்க எப்போ வருவீங்க-ன்னு 7-8 தடவை போன் பண்ணி சுமாரா ஒன்னரை மணிநேரம் லேட்டா போனதுக்கு அப்பறம்தான் இவருக்கு நிம்மதியா தூக்கமே வந்துச்சு. இது சும்மா சாம்பிள் தான்.. இவர் போகும் இடத்திற்கு பிரச்சனை வருமா, அ

திருவத்திமாமலை

Image
ஆகஸ்ட் 13ம் தேதி. அதிகாலை 2.20 மணி. ஏற்கனவே 2 நாட்களாக சரியான தூக்கம் இல்லாததால் சிவந்த கண்கள் தகதகவென எரிய, பொருட்படுத்தாமல் காரில் கிளம்பினோம் நானும் அப்பாவும். கொஞ்சம் பழங்கள், 3-4 பாட்டில் தண்ணீர். பழங்களை அப்பா எடுத்துக்கொண்டார். தண்ணீர் பாட்டில்களை Backpack-ல் நான் எடுத்துக்கொண்டேன். கியூவில நிப்போம். 10 மணி வரைக்கும் பாப்போம். ஸ்வாமி பாக்க முடியம்-ங்கற மாதிரி இருந்தா நிப்போம். 7-8 மணி நேரத்துக்கும் மேல ஆகும்-ங்கற மாதிரி இருந்தா, கிளம்பிடுவோம் என்று பேசிக்கொண்டு கிளம்பினோம். ஏனென்றால் முந்தைய நாட்களில் இருந்த கூட்டத்தின் எஸ்.டி.டி அப்படி. 3 மணிக்கு காஞ்சியை அடைந்துவிட்டோம். பச்சையப்பாஸ் பார்க்கிங்-ல் தான் இடம் உள்ளது. வேறெங்கும் இடமே இல்லையென்பதால், அந்த நேரத்திலும் காவல்துறை கடமையை செவ்வனே செய்துகொண்டிருந்தது. VIP, VVIP, அமைச்சரோட அத்தை பேரனுக்கு ஆயாவோட சித்தி பொண்ணு ரேஞ்சுக்கு யார் வந்தாலும், ஒரே பதில் - Turn Left (பச்சையப்பாஸ் பார்க்கிங்). உள்ளே போனால், போய்கிட்டே இருக்கு.. எங்க வண்டிய நிறுத்தறதுன்னே தெரியாம தேடி, 30 நிமிஷம் சுத்தி, கடைசில வாஸ்து எல்லாம் பாத்து

ஏர்போர்ட்

Image
எப்போதுமே பல உணர்ச்சிமயமான நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் இடம் எனக்கு தெரிந்தவரையில் ஏர்போர்ட். எத்தனை சுவாரஸ்யங்கள் ஏக்கங்கள் பிரிவுகள் கண்ணீர்கள் பாசப்பிணைப்புகள் கோபங்கள் துக்கங்கள் சிரிப்புகள் வரவேற்புகள் வழியனுப்புகள் இன்னும் சில பல புகள் கள் ள் ள் ள் ள்... அலுவல் விஷயமாக ஊருக்குப் போயிருக்கும் அப்பாவை வரவேற்க காத்திருக்கும் குட்டிப்பெண்ணின் கண்களில் இருக்கும் தவிப்பு, உள்ளத்திலிருக்கும் பாசம், தனக்கு என்ன வாங்கிவருவாரோ என்ற அந்த ஏக்கம்.. நண்பனை/நண்பியை உற்சாகமாக கட்டியணைத்து வரவேற்று காதோரம் ஏதோ ஏடாகூட ஜோக்கை சொல்லி கொல்லென சிரிப்பை சிதறிவிட்டு.. பார்க்கும் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.. காதலியை வழியனுப்ப வந்தவனின் கண்களில் இருக்கும் அந்த ஏக்கம்.. வரவேற்க வந்தவன், இந்த நொடி வருவாளா அடுத்த நொடி வருவாளா என காத்திருக்கும் கண்களில் இருக்கும் தவிப்பு கல்யாணத்திற்கு பிறகு உற்சாகமாக மனைவியை வழியனுப்பி வைக்கும் கணவனின் உடல்மொழி.. ஆனால் சோகமாக இருப்பது போல் காட்டிக்கொள்ளும் முகம்.. அதுவே திரும்பிவரும் மனைவியை வரவேற்க உற்சாகமாக

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்

Image
மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் என்ற பதத்தை நம்மில் பலர் கேட்டிருப்போம். ஆனால் நேரில் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவே. அழகான சுந்தரகாண்டம் பாராயணமும் மதுரமான மதுரகவியாழ்வார் திருநக்ஷத்ரமும் ஒருசேர நடந்தது. நடந்து முடிந்த சென்னை பெங்களூரு IPL போட்டி போல, மெதுவாக தொடங்கி கடைசி ஸர்க்கம் நெருங்க நெருங்க பரபரவென ஓடி ஒரு ரன்னில் தோற்றது போல ஒருமணிக்கு முடிக்கவேண்டிய பாராயணத்தை ஒன்னேகால் சுமாருக்கு முடிப்போம். இதுவே வழக்கமாகிவிட்டபடியால் நம்ம ஆஞ்சி.. (அதாங்க ஆஞ்சநேயர்) நம் ஸ்வபாவம் தெரிந்து போகிற போக்கில் போகட்டுமென விட்டுவிட்டார். நண்பர் ஒருவர் மதுரமான பலாச்சுளைகளை பெருமாளுக்கு நைவேத்யம் செய்யக் கொண்டுவந்தார். தேனில் ஊறிய பலாச்சுளைகள் பெருமாளுக்கு உகக்குமோ இல்லையோ பாகவதர்களாகிய நமக்கு (சரி சரி.. பாபியான எனக்கு) உகக்குமே என்றெண்ணி உடனே தங்கமணியை தேன் வாங்கிவரச்சொல்லி பலாச்சுளைகளை ஊறப்போட்டு, பெருமாளுக்கு நைவேத்யம் செய்தாகிவிட்டது. ஆனால் நீள்வெட்டாக இல்லாமல், குறுக்காக வெட்டி தேனில் ஊறப்போட்டு விட்டார்கள். சரி போகட்டும்.. தவறே செய்திருந்தாலும் சரணமடை