Posts

CIO - சென்சஸ்

நேற்று காலை முதல் இப்படி  ஒரு எச்சரிக்கை மெசேஜ் வாட்சாப்பில் சென்னை மழையை விடவும் பயங்கரமாக கொட்டிக்கொண்டு இருந்தது. தனி மனிதர்கள், க்ரூப் என பாகுபாடின்றி பலரிடம் இருந்து வந்துகொண்டிருந்தது. மெசேஜைப்  படிச்சேன்.. நானும் ரவுடி தானே.. என் பங்கிற்கு நானும்  பலருக்கும் பல க்ரூப்களுக்கும் பார்வேர்டினேன். ஆனா அதை ஒன்னும் அத்தனை பெருசா எடுத்துக்கல. அதனால வாட்ஸாப் ஆத்தா எனக்கு லைட்டா பாடம் புகட்ட நினைச்சு, சாயங்காலமே ஒரு சம்பவத்தை நடத்திட்டா. வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலயே இண்டர்காம் பெல் சத்தம் கேட்டது. தங்கமணி தான் எடுத்தார். யார் நீங்க? எந்த ப்ளாட்? என்றெல்லாம் கேட்டுகொண்டிருந்தார். சரியா பதில் சொல்லலை-ன்னா கதவை திறக்காத என்று நான் சொன்னேன். உடனே இண்டர்காமை என்னிடம் கொடுத்துவிட்டார். எதிர்முனை ஆசாமியிடம் யார் நீ? எந்த ப்ளாட்-க்கு போகணும்? எதுக்கு-ன்னு விடாம கேள்வி கேட்டுட்டு இருந்தேன். சென்ட்ரல் இன்பர்மேடிக்ஸ் ஆர்கனைசேசன்-ல (CIO) இருந்து வந்திருக்கேன். உன்கிட்ட பேசணும்-னு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தான். (பழைய)காக்கிசட்டை, குருதிப்புனல், வேட்டையாடு விளை...

பிரசவம்

முடி திருத்தகம் சென்றிருந்தேன். வழக்கமாக எனக்கு ஒருவர் முடிதிருத்துவார். நடுவில் சில நாட்கள் அவரைக் காணவில்லை. நேற்று சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன். ஊருக்கு போயிருந்தீங்களா என்று கேட்டேன். ஆமாம் சார். என் மனைவி இறந்துட்டாங்க. அதுக்காக போயிருந்தேன் என்றார் சாதாரணமாக. எப்படி என்றேன் நான். 7 மாத கர்ப்பிணியாக இருந்தாள். என்ன காரணமோ தெரியவில்லை. குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது. அது தெரியாமலே சில நாட்கள் அவள் இருந்துவிட்டாள். அதனால் அவளும் இறக்க நேரிட்டது என்றார். அவரை சங்கடப்படுத்திவிட்டோமோ என்று பட்டது எனக்கு. என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. இறைவன் நிச்சயம் உங்களுக்கு துணை இருப்பார் என்று சொன்னேன். போதும் சார். இறைவன் ஒருவனே போதும். வேறு யாரும் வேண்டாம் என்றார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்து இத்தனை சீக்கிரம் மீண்டு விட்டாரா அல்லது விரக்தியில் சொன்னாரா தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, உங்களுக்கு வேறு குழந்தை இருக்கிறதா என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலை கேட்டு, அந்த கேள்வியை கேட்டே இருக்க வேண்டாமோ என்று தோன்றியது. "2 குழந்தைங்க இருக்காங்க சார். ஒ...

வெக்கேஷன்

இந்த வெக்கேஷனுக்கு கெளம்பறதுக்கு முன்னாடி ஒரு மாசம்.. கரெக்ட்டா சொல்லணும்-னா அடுத்த மாசம் இந்நேரம்-நு கணக்கு பண்ணுவோமே அந்த ஒரு மாசம்... ரொம்ப ரொம்ப ரொம்ப மெதுவா நகரும். இன்னும் 30 நாள் இருக்கு-ன்னு பாத்து வெச்சுட்டு ஒரு 2 வாரம் கழிச்சு பாத்தா, இன்னும் 28 நாள் பாக்கி இருக்கும். இப்படியே ஒவ்வொரு நாளா தள்ளி தள்ளி நமக்கு நாக்கு தள்ளிடும். அந்தா இந்தா-ன்னு ஒரு வழியா ட்ராவெலிங் ப்ரம் மனாமா, பஹ்ரைன் டு சென்னை, இந்தியா-னு பேஸ்புக் -ல ஸ்டேடஸ் போட்டு வண்டி ஏறிடுவோம். சென்னை வந்து, ப்ளைட் டயர் ரன்வே-ல டச் ஆகுற அந்த நொடியில இருந்து பாஸ்ட் பார்வர்ட் (FAST FORWARD) பட்டன் ஆட்டோமாடிக்கா ஆன் (ON) ஆயிடும் அதுவும் சாதாரண பாஸ்ட் பார்வர்ட் இல்ல.. ஜெட்டுக்கு பின்னாடி பயர் வெச்சா மாதிரி பாஸ்ட் பார்வர்ட். ஏர்போர்ட்-ல இருந்து ஆட்டோ/டாக்சி புடிச்சு வீட்டுக்கு வந்து அப்பாடா-ன்னு உட்காந்தா ஒரு வாரம் டஸ்... (அதாங்க இஸ்-ங்கரதுக்குள்ள டஸ்-னு போயிடும்) ப்ரெண்ட்ஸ்/சொந்த பந்ததுக்கெல்லாம் போன் போட்டு பத்து நிமிஷம்.. பத்தே பத்து நிமிஷம் பேசினாலே அடுத்த ஒரு வாரம் டஸ்... வர்றதே வருஷத்துக்கு ஒரு தடவை தான்.. நங...

முப்பத்து மூவாயிரம் நன்றிகள்

Image
முப்பது வருடங்களைக்  கடந்து நிற்கும் இந்த தருணத்தில், சற்றே பின்னோக்கி நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறேன். வலி, விரக்தி, மகிழ்ச்சி, வறுமை, கல்வி, பள்ளி, கல்லூரி, சந்தோஷம், அழுகை, வேதனை, கோபம், சண்டை, உறவுகள், நண்பர்கள்..... இப்படிப் பல விஷயங்கள் மனக்கண்ணில் விரிகிறது. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.     பலருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நன்றியும் நீதியைப் போலத்தான். Justice Delayed is Justice Denied என்பது போல நன்றியையும் உடனுக்குடன் தெரிவித்துவிடவேண்டும். நீங்கள் போன மாதம் செய்த உதவிக்கு நன்றி என்று சொன்னால் எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள். இவ்வளவு சொல்கிற நானே, காலம் தாழ்த்தித் தான் நன்றி சொல்கிறேன். நாட்கள், மாதங்கள் இல்லை. சில பல வருடங்கள் கழித்து நன்றி சொல்கிறேன். முதலாவது நன்றி இறைவனுக்கு. நான் ஒன்றும் பெரிதாய் சாதித்துவிடவில்லை என்றாலும், வாழ்வில் இந்த இடத்தை அடைய உறுதுணையாய் இருந்த என் அப்பா, அம்மாவுக்கு நன்றிகள். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய். மகன்தந்த...

ருசியான சொற்பொழிவு

Image
சொற்பொழிவு.  அதிலும் ஆன்மீக சொற்பொழிவு. பேசப்போகிறவர் பன்மொழி வித்தகர், பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார், நல்லவர், வல்லவர் எனும்படி சொற்பொழிவாற்ற வந்திருந்தவரை அறிமுகம் செய்து வைத்தார் மேடையில் பேசியவர். பன்மொழி வித்தகர் என்றவுடனே எனக்கு லேசாக அச்சம். உடன் வந்திருந்த நண்பரிடம், "அன்புல்ல தமிலு மக்கலே" என்று ஏதாவது ஆரம்பிக்கப் போகிறார் என்று சொன்னேன். ஆனால் நல்ல தமிழ் உச்சரிப்புடன் அவர் பேச ஆரம்பித்தவுடன், நண்பர் எனது மூக்கை தேடிக்கொண்டிருந்தார் மொத்தம் 7 நாட்கள் நடைபெறும் அந்த சொற்பொழிவின் முதல் நாள் அதுவும் 10 நிமிடங்கள் மட்டுமே அவரது பேச்சை கேட்க முடிந்தது (காரணம் பின்னர் சொல்கிறேன்). அந்த 10 நிமிட பேச்சில் இருந்தே அவர் ஓரளவு விஷயம் தெரிந்தவர் என தெரிந்துகொண்டேன். நேற்று மீண்டும் சென்றிருந்தேன். "செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்"   சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் இரண்டையும் செவ்வனே செய்திருந்தனர். அங்கே கூடியிருந்த அனைவருக்கும் உணவு பார்சல் செய்யப்பட்டு தயார் நிலையிலிருந்தது. காரில் வீட்டிற்கு...

நைனா மாமா

பெரியவர்கள் தான் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். அது பிறந்தவுடன் நடக்கும் நிகழ்வு. குழந்தைகள் பேச ஆரம்பிக்கும்பொழுது, மழலை மொழியில் பெரியவர்களுக்கு சூட்டும் பெயர்கள் வித்தியாசமானவை. விசித்திரமானவை. அப்படி என் மகன் ஒரு நண்பருக்கு சூட்டிய பெயர் தன் நைனா மாமா. அயுண், அமினு இப்படி அந்தப் பட்டியல் நீளும். நானும் கூட என் தாத்தாவுக்கு இப்படி விசித்திரமான பெயர் சூட்டியுள்ளேன். வெங்கடவரதன் எனும் அவரது பெயர் என் வாயில் நுழையாத காரணத்தால் வந்தது  "வெங்கடேச குமார ஜலபதி". சில பல வருடங்களுக்கு முன் உறவினர் ஒருவர் அவரது குழந்தைக்கு சூட்டவிருந்த பெயர் "ஜெய வீர ஆஞ்சநேயர்". ABT-யில் ஆஞ்சநேயருக்கு பதில் இவர் மலையை தூக்க நேர்ந்திருக்கும். நல்லவேளையாக அப்படி எதுவும் நிகழவில்லை. அவரது உருவத்திற்கேற்ற அழகான பெயர் சூட்டப்பெற்றார். நைனா மாமாவின் குழந்தைகள் அவரை நைனா என்று அழைப்பார்கள். ஆதித்யாவும் அப்படியே அழைக்க ஆரம்பித்து பின்னர் மாமா அதனுடன் ஒட்டிகொண்டது. நண்பர் ஒருவரது மகள், மழலை மொழியில் என்னை "பிசன்னா மாமா" என்று தான் விளிப்பாள். இது பரவாயில்லை. அவரது ...

மதுரனந்தபுரம்

Image
கி.பி.2212 நண்பன் கிருஷின் வற்புறுத்தலால் இந்தியா செல்லும் சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தான் மூர். அவர்களது குடும்பம் அமெரிக்காவில் குடியேறி நான்கைந்து தலைமுறைகளைக் கடந்துவிட்டது. தாத்தா என்றால் அத்தனை பிரியம் மூருக்கு. அவர் இறந்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும், இப்போது இந்திய சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தது கூட தாத்தா பாசத்தால் தான். ஒரு தடவையாவது இந்தியாவையும் குறிப்பாக தமிழகத்தையும் தனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர்களையும் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டார். அவரால் ஆசைதான் பட முடிந்ததே தவிர, அதை செயல்படுத்த முடியவில்லை. எனவே அவர் ஆசைப்பட்டு, செல்ல முடியாத ஒரு இடத்திற்கு தான் போகப் போகிறோம் என நினைத்து சந்தோஷப்பட்டான் மூர். பயணத்திற்குத் தேவையானவற்றை எடுத்துவைக்கும்போது தாத்தவுடைய "டூரிஸ்ட் ப்லேசஸ் இன் இண்டியா" புத்தகதையும் எடுத்துக் கொண்டான். லீவ் அப்ரூவாகி, டிக்கெட் புக் செய்து, ஒருவழியாக இந்தியா வந்தே விட்டார்கள் இருவரும். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய அந்த நொடி தாத்தவைத்தான் நினைத்துக் கொண்டான் மூர். வடஇந்தியாவில் பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு டெல்லியில் டெண்ட் அட...