Posts

கேகிவாகனன் பதி

அகிலனுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டதில இருக்கிற வல்லக்கோட்டை. சென்னையிலருந்து செங்கல்பட்டு போற வழியில ஸ்ரீபெரம்பதூருக்கும், சிங்கபெருமாள் கோவிலுக்கும் நடுவில இருக்கு இந்த வல்லக்கோட்டை. அங்க இருக்கிற முருகன் கோவில் ரொம்பப் பிரசித்தி. இந்தக் கோவில்ல இருக்கிற சிலை தான் இந்தியாவிலயே பெரிய முருகன் சிலை. பிறந்தது, வளந்தது எல்லமே அந்த ஊர் தான். இவனுக்கு 4 வயசிருக்கும்போதே ஒரு விபத்துல அப்பா இறந்துட்டார். அம்மாவும் படிச்சிருந்ததால அவரோட வேலை, அம்மாவுக்கு கிடைச்சது. அந்த வருமானத்தை வெச்சு தான் இவனும் இவன் தங்கச்சியும் படிச்சதெல்லாம். வல்லக்கோட்டையில இருந்த காரணத்தாலயோ என்னவோ, முருகன் மேல பக்தி ஜாஸ்தி. கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் இதெல்லாம் மனப்பாடம். ஸ்கூல்ல இவனுக்கு பெஸ்ட் பிரண்டு கார்த்தி மட்டும் தான். அவங்க அப்பா சங்கரன் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர். சொந்த ஊர் திண்டுக்கல். இந்த ஊருக்கு வந்து 1 வருஷமாகுது. கார்த்தியோட அம்மவும், அகிலனோட அம்மவும் ஒரே ஆபீஸ்ல தான் வேல செஞ்சாங்க. கார்த்தி அகிலனை விடவும் ஒரு வயசு பெரியவன். ஆனா வெளியூர்ல வேற ஸ்கூல்ல படிச்சதால, 2ம் க்ளாஸுக்கு தான் சீட் கு...

சிதைவு

சக்தி மட்டும் தான்னு கிடையாது. ஹோட்டல்ல வேலை செய்யற எல்லார் கிட்டயும் நல்லா பேசுவேன். பொதுவாவே ஹோட்டல்ல வேலை செய்யறவங்கன்னா நிறைய பேருக்கு ஒரு இளக்காரமான ஒரு பார்வை தான் இருக்கும். ஹோட்டல்ல வெய்ட்டர் தானே, இலை எடுக்கறவன் தானே என்கிற மாதிரியான பார்வை. ஹோட்டல்ல வேலை செய்தவன்கிற முறையில அவங்களோட வேலை எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கு தெரியும். நாம அவங்களை வெளியில இருந்து பாக்குறதுக்கு ஒரு யுனிபார்ம், கையில மெனு கார்ட், புன்னகையுடன் கூடிய உபசரிப்புன்னு தான். உள்ளுக்குள்ள எத்தனை விதமான மன உளைச்சல்கள், சொந்தப் பிரச்சனைகள், இது தவிர வேலை செய்யற இடத்துல இருக்கும் பிரச்சனைகள்-ன்னு அவங்க வாழ்கை வேற துறைகளில் வேலை செய்யும் சாமானியனை விடவும் கொஞ்சம் கஷ்டம் தான். நீங்க குடும்பத்தோட ஹோட்டலுக்கு போறீங்க. ஒரு டேபிள் காலி ஆகுது. நீங்க, உங்க மனைவி, பள்ளி செல்லும் வயதிலுள்ள உங்க குழந்தைங்கன்னு எல்லாரும் சீட்ல உக்காந்த அப்பறம், ஒரு சின்னப் பையன் வந்து இலை எடுத்துட்டு டேபிளை துடைச்சு க்ளீன் பண்ணுவான். தன் வயசுப் பசங்க எல்லாம் அவங்கவங்க அப்பா அம்மாவோட, குடும்பத்தோட சாப்பிட ஹோட்டலுக்கு வந்திருக்காங்க. ஆனா இவனோ இலை...

ஆட்டுக்கால் 11 ஜி

டெஸ்டிங் யுனிட்ல எல்லாரும் ரொம்பப் பரபரப்பா இருந்தாங்க. ஆட்டுக்கால் 11 ஜி 'லைவ்' டேட்டா பேஸில் எரர் அடித்ததே அவங்க பரபரப்புக்கு காரணம். அவங்களால எங்கருந்து எரர் அடிக்குதுன்னே கண்டுபிடிக்க முடியலை. ஏன்னா இதே டேட்டா பேஸை இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணின இன்னொரு யுனிட், எரர் எதுவும் இல்லைன்னு சொல்லி ரிபோர்ட் குடுத்துட்டாங்க. இப்ப இருக்குற டெஸ்டிங் யுனிட் மட்டுமில்லை, பெரிய ப்ரொக்ராமிங் கம்பெனியான CP(Cut-throat Programming) கம்பெனில கூட யாருக்கும் இதுல எரர் இருக்கா இல்லையன்னு உறுதியா சொல்ல முடியலை. இந்தக் கோடிங் எழுதினது எல்லாம் DMK(Data Mining Knowledge)-ன்னு ஒரு கம்பெனி. திடீர்னு ஒரு நாள் கோடிங் எழுதின கம்பெனில வேலை பாத்த ஆரோக்கிய ராஜா-வை டெஸ்டிங் யுனிட் ஆளுங்க சும்மா விசாரிச்சிருக்காங்க. அவங்க கேட்ட கேள்விக்கெல்லாம், 'வரும்... ஆனா வராது' ரேஞ்சுக்கு பதில் சொல்லிருக்காரு ராஜா. அவங்களுக்கு இவரு மேல சந்தேகம் அதிகமாயிடுச்சு. உடனே அவங்களோட டெல்லி ஆபீஸுக்கு இவரை கூட்டிட்டுப் போய் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ராஜாவும் தனக்கு தெரிஞ்ச ப்ரொக்ராமிங் அறிவை வெச்சு சமாளிச்சுப் பாத்தி...

சப்பாத்தி

இளநிலைக் கல்லூரி நாட்களில் எனது டிபன் பாக்ஸ் மிகப் பிரபலம். எனது அம்மா செய்து தரும் சப்பாத்திகளுக்காக. சப்பாத்தி அத்தனை மெதுவாக இருக்கும். அதற்கு சைட்-டிஷ் பெரும்பாலும் உருளைக் கிழங்கு குருமாவக  இருக்கும். சாப்பிட்ட பிறகு 2 - 3 மணி நேரமாவது அந்தக் குருமா வாசனை கையில் இருக்கும். சப்பாத்தி கொண்டு செல்லும் நாட்களில் அதை நான் சாப்பிட்டதாக எனக்கு நினைவேயில்லை. சக மாணவர்களின் டப்பாக்களை லவட்ட ஒரு குழுவே இருக்கும். இதன் தலைவர் விக்கி என்கிற விக்னேஷ். பிரேம், சண்முகம், முத்துராஜா, ராஜாக்கண்ணு, ஆறுமுகம், ஜெயபாலன், பாரி இவர்களெல்லாம் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள். சிலர் அவ்வப்போது மட்டும் உறுப்பினராவார்கள். 3வது / 4வது ஹவரின்போதே அவர்கள் கட்சிப் பணி யை ஆரம்பித்து விடுவார்கள். முதலில் மாட்டுவது பிரசாத்தின் டப்பாவாகத் தானிருக்கும். அவன் தினமும் முட்டை கொண்டு வருவான். இது அவனுடன் பள்ளியில் படித்த விக்கிக்கு தெரியும். அதனால் அவனது முதல் குறியே பிரசாத்தின் டப்பா தான். அடுத்ததாக மாட்டுவது மதிவாணனின் டப்பா. அவன் கொண்டுவரும் ஆனியன் ரைஸ், எனது சப்பாத்தியைப் போல அத்தனை பிரபலம். ஆனியன் ரைஸ் கொண்டு...

புரியலை. என்ன சொல்ல வர்றீங்க?

கணவன் ஷங்கருக்காக காத்திருந்துவிட்டு அப்போது தான் படுத்தாள் லேகா. அடுத்த 10 நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது. ஷங்கர் தான் பார்ட்டி முடிந்து திரும்பியிருந்தான். ஜன்னலை மட்டும் திறந்து பார்த்தாள். தண்ணியடிச்சுட்டு வந்தா கதவை திறக்க மாட்டேன், என்று சொல்லித்தான் அனுப்பியிருந்தாள். ஆனாலும், எதிர்பார்த்தது போலவே தண்ணியடித்துவிட்டு தான் வந்திருந்தான். இடது பக்கம் வெளியே எடுத்து விடப்பட்ட சட்டை, வலது பக்கம் இன்னமும் இன்ஸர்ட் செய்யப்பட்டு இருந்தது. ஒரு கை மட்டும் முழங்கை வரைக்கும் மடிக்கபட்டு இருந்தது. மற்றொரு கை, கஃப் பட்டன் மட்டும் கழட்டி விடப்பட்ட நிலையில். ஒரு காலில் மட்டும் சாக்ஸ் இருந்தது. சற்று தள்ளிப் பார்த்தாள். கேட் அருகிலேயே ஷூ-வும் ஒரு கால் சாக்ஸ்-ம் இருந்தது. கண்கள் இரண்டும் சிவப்பேறி வீங்கியிருந்தன. அந்தக் கண்களுடன், இவளைப் பார்த்து, ரொமாண்டிக்காக கண்ணடித்தான். செல்போன் கயிறுடன், முதுகு பக்கம் தொங்கி கொண்டிருந்தது. கழுத்தில் கட்டியிருந்த டை, பேண்ட் பாக்கெட்டில் சுருட்டி வைக்கப் பட்டு, முழங்கால் வரைக்கும் தொங்கி கொண்டிருந்தது. அவள் முகத்தில் ஒசாமாவைக் கண்ட அமெரிக்கப் படைகள் போல அத்த...

அநாதைப் பணம்

குமரவேல், இப்போது அவன் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாமானியன். ஒரு காலத்தில் அவனது குடும்பத்திற்கு பல லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் இருந்தது. அவனது தாத்தா ஞானவேல். அவரது பேரைச் சொன்னலே ஊரில் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்தவர். பல ஏழைப் பெண்களின் கழுத்தில் தாலி ஏறியதே அவர் செய்த பொருளுதவியால் தான். பிறருக்குக் கொடுத்தும், சொந்தங்களால் ஏமாற்றப்பட்டும் சொத்துக்கள் கரைந்தன. குமரவேலின் தந்தை சக்திவேலின் காலத்தில் ஒரு சிலவற்றைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து சொத்துக்களும் போய்விட்டது. இதனால் தந்தை செய்துவந்த தான தர்மங்களை சக்திவேலால் தொடர முடியவில்லை. குமரவேல் பிறந்த பிறகு கஷ்ட ஜீவனம் தான் என்ற நிலை. சில வருடங்களில் தொழிலில் வந்த லாபத்தால் கஷ்டத்திலிருந்து மீண்டு, ஓரளவுக்கு நல்ல நிலையை அடைந்தார் சக்திவேல். ஆனால் மனைவியின் புற்று நோய் செலவிற்கே அவரது வருமானம் சரியாக இருந்தது. இவரிடமிருந்த பணத்தைக் கொண்டு சிலகாலம் தான் மனைவியின் மரணத்தை தள்ளிப் போட முடிந்தது. அம்மா இறந்த பிறகு குமரவேலுக்கு எல்லாமே சக்திவேல் தான். தாத்தாவின் சொத்துக்கள் கிடைக்கவில்லையே தவிர குமரவேலுக்கு ...

அவள் பெயர் கணினி

Image
வழக்கமாகச் செல்லும் பிரௌசிங் சென்டரில் அதி மும்மரமாக 'சாட்'டிக் கொண்டிருந்தான் வினய். சாட்டிங் அக்கவுன்ட் இல்லாமல் இந்த இன்டர்நெட் யுகத்தில் இப்படியும் ஒரு ஆளா என அவனது சக நண்பர்கள் கிண்டலடித்ததன் காரணமாகவே அவன் பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கினான். அதுவரை அவனது கேர்ள் பிரண்டுகளெல்லாம் யார் மூலமாகவோ அறிமுகமானவர்கள் தான். ஆனால் இப்போது பேஸ்புக்கில் வெளிநாட்டு யௌவன நங்கையர்கள் கூட நண்பிகள் ஆனார்கள். விளைவு, இப்போது அவனுக்கே அவன் எத்தனை தளங்களில் மெம்பர் எனத் தெரியாத அளவிற்கு வந்துவிட்டது. இரண்டு வாரங்களாக அவனுக்கு 'சாட்'டிங்கின் போது மோகம் வரக் காரணம் ப்ரிஸில்லா. தற்செயலாக ஒரு சாட் ரூமில் நுழைந்தபோது பெயர் வசீகரமாகப் பட்டதால் 'ஹாய்' என்றொரு மெசேஜை தட்டினான். பெரும்பாலும் பெண்களிடமிருந்து ரெஸ்பான்ஸ் இருக்காது என்பதால் அவளது பதிலை எதிர்பார்க்கவில்லைதான் என்றாலும், பதில் வந்தவுடன் சற்றே ஆர்வமானான். 27 / M / Hyderabad, என அனுப்பிவிட்டுக் காத்திருந்தான். 22 / F / B'lore, என பதில் வந்தவுடன் குஷியாகிவிட்டான். இப்படித்தான் அவனுக்கு அவள் அறிமுகமானாள். பின்னர், பரஸ்...