Posts

லண்டன் லெட்டர்

பஹ்ரைன் 04-Aug-2016 அன்புள்ள  ____, நாளது தேதி இங்கு அனைவரும் நலம். அங்கும் அனைவரும் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன். நான் கடந்த வாரம் லண்டன் சென்றுவந்தது குறித்து பகிர்ந்து கொள்ளக்கருதி இக்கடிதம் எழுதுகிறேன். புதன் நள்ளிரவு 1 மணிக்கு பஹ்ரைனில் இருந்து விமானம் புறப்பட்டது. 7 மணிநேர பயணம். ஏர்-ஹோஸ்டஸ் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. ஏர் இந்தியா பணிப்பெண்கள் தேவலாம்(??) என்று தோன்றியது. வியாழக்கிழமை லண்டன் நேரம் காலை 6.15க்கு விமானம் தரையிறங்கியது. சென்ற முறையே ட்யூப் எனும் அண்டர்கிரவுண்ட் ரயிலில் பயணித்திருந்தாலும், இம்முறை விமானநிலையத்திலிருந்து லண்டன் நகரம் சென்றதே ரயிலில் தான். டாக்சி ஏறவேயில்லை. டாக்சி அத்தனை காஸ்ட்லி என்பதும் ஒரு காரணம். எல்லா ரயில் நிலையங்களிலும் அத்தனை சிறந்த கட்டமைப்புகள். நிறைய வழித்தடங்கள் உண்டு. ஒரு சில ரயில் நிலையங்களில் இரண்டு மூன்று வழித்தடங்கள் இருக்கும் பட்சத்தில் ரயில் நிலையமே ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மால் போல அத்தனை பிரம்மாண்டமாய் இருக்கிறது. Piccadilly Line, District Line, City Line இப்படி பல வழித்தடங்கள். ரயில் ம...

நம்பர் 80

மனைவியின் பாஸ்ப்போர்ட் நிமித்தம் எம்பஸியின் அவுட்சோர்ஸ் ஆபீசுக்கு சென்றிருந்தோம். எல்லா பார்ம்களும் பூர்த்தி செய்தபின்பு, அதை சரிபார்த்துவிட்டு, டோக்கன் கொடுத்தான் அந்த அலுவலக ஆள். நம்பர் 80. உள் அறையில் இடம் இல்லை. வெளியில் இருந்த சேர்களில் அமர்ந்தோம். கடைசியாக என்ன டோக்கன் போயிருக்கிறது என்று பார்க்க உள்ளே சென்றேன். நம்பர் 73 என்று காட்டியது. வந்து மனைவியிடம் சொன்னேன். ஆனால் டோக்கனில் 16 நபர்கள் வெயிட்டிங் என்று போட்டிருந்தது. மனைவிக்கு அப்போதே கொஞ்சம் சந்தேகம். உள் அறையில் இடம் கிடைத்தவுடன் அங்கே சென்று அமர்ந்தோம். டோக்கன் நம்பர் 50 கவுண்ட்டர் 3-க்கு செல்லவும் என்று அறிவித்தனர். இப்போது மனைவி என்னைப் பார்த்து, நீங்க வந்தப்போ எப்படி 73 காட்டியிருக்கும்? இப்போதான் டோக்கன் 50 கூப்பிடுறாங்க என்றார். சத்தியமா நான் வந்து பாத்தப்போ 73 தான் போட்டிருந்தாங்கம்மா என்று சொன்னேன். ம்ஹ்ம்.. பதிலுக்கு ஒரே ஒரு தீர்க்கமான பார்வை. நான் ஒன்றும் பேசவில்லை (பேசவும் முடியுமா என்ன??). அடுத்த டோக்கன் நம்பர் கூப்பிடட்டும். அப்போது பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன் (மனதின் அடி...

சாக்லேட்

சாக்லேட் மிகப் பிடித்தமான ஒன்று. பல்வேறு தருணங்களில் சாக்லேட் சிலபல அனுபவங்களை கொடுத்துள்ளது. பள்ளியில் படிக்கும்போது பழைய?? நோட்டு புத்தகங்களை எடைக்குப் போட்டு லேக்டோ கிங் சாக்லேட் வாங்கி சாப்பிட்டேன். இது ஒரு தவறா? இதற்காக என் அப்பா என்னை பெல்ட்டால் பின்னினார். என்ன ஒன்று, பரீட்சை முடியும் முன்பே லேக்டோ கிங் வாங்கியாகிவிட்டது. சென்னையில் வேலை செய்துகொண்டிருந்த சமயம். ஸ்பென்சர் பிளாசாவில் தான் அலுவலகம். அப்போதெல்லாம் சென்னையின் வெகுசில ஷாப்பிங் மால்களில் அதுவும் ஒன்று. மதியம் சாப்பாட்டு இடைவேளையின்போது அவ்வப்போது ஸ்பென்சரில் ந(பி)கர்வலம் செய்வது உண்டு. அப்படி ஒருநாள் நண்பன் தினேஷுடன் சென்றிருந்தபோது 2 பெரிய சாக்லேட் பார்கள் வாங்க நேர்ந்தது. ஒரு சாக்லேட்டை  அலுவலகத்தில் வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும். ஒன்று எங்களுடையது. தினேஷிடம்  ஒரு சாக்லேட்டை கொடுத்து உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொண்டு மீதியை எனக்கு கொடு என்றேன். பதிலுக்கு அவன், நீ எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொண்டு எனக்கு கொடு என்றான் (நம்மளப் பத்தி தெரியல). நான் முழுசும் சாப்பிடுவேன்-னு சொன்னதை அவன...

சுட்டதை சுட்ட கதை

ரொம்ப நாளைக்கு அப்பறம் நேத்து ரேடியோ மிர்ச்சி கேட்டேன். செந்தில் இப்போ "சுட்ட கதை"-ன்னு ஒரு நிகழ்ச்சி பண்றார். "நீங்க நான் ராஜா சார்" நிகழ்ச்சிக்கு பதிலா இப்போ இந்த "சுட்ட கதை" வருது-ன்னு நினைக்கறேன். அதுல ஒரு சுட்ட கதை சொன்னார் செந்தில். ஒரு அப்பாவுக்கும் பொண்ணுக்கும் நடக்கற உரையாடல். அந்த பொண்ணு, "அப்பா, அந்த D ப்ளாக் சந்தோஷ் ஒருநாள் நீ எனக்கு ஸ்பெஷல் ப்ரெண்ட்-னு சொன்னான். அப்போலருந்து அவன பாத்தாலே என்னால நார்மலா இருக்க முடியல. படபடப்பா இருக்கு. ஏதோ தப்பு பண்றமோ-னு தோணுதுப்பா" என்கிறாள். "ஸ்வேதா நீ ரெண்டாம் கிளாஸ் படிக்கற வரைக்கும் மூச்சா வந்தா சொல்லத் தெரியாது. அடக்கவும் தெரியாது. யூனிபார்ம் ஸ்கர்ட்-லயே போயிடுவ. சாயுங்காலம் வரும்போது அப்பா இந்த ஸ்கர்ட் ஒரே நாத்த கப்பு -னு சொல்லுவ" என்கிறார். அந்தப் பெண் கோபத்துடன் "அப்பா நான் என்ன சொல்றேன்.. நீ என்ன சொல்ற.." என்று கேட்கிறாள். "ஸ்வேதா.. உனக்கு இப்போ மூச்சா வந்தா அதே மாதிரி தான் ஸ்கர்ட்-லயே போயிடுவியா சொல்லு" என்று கேட்கிறார். அந்தப் பெண் வெட்கத்துடனும்...

CIO - சென்சஸ்

நேற்று காலை முதல் இப்படி  ஒரு எச்சரிக்கை மெசேஜ் வாட்சாப்பில் சென்னை மழையை விடவும் பயங்கரமாக கொட்டிக்கொண்டு இருந்தது. தனி மனிதர்கள், க்ரூப் என பாகுபாடின்றி பலரிடம் இருந்து வந்துகொண்டிருந்தது. மெசேஜைப்  படிச்சேன்.. நானும் ரவுடி தானே.. என் பங்கிற்கு நானும்  பலருக்கும் பல க்ரூப்களுக்கும் பார்வேர்டினேன். ஆனா அதை ஒன்னும் அத்தனை பெருசா எடுத்துக்கல. அதனால வாட்ஸாப் ஆத்தா எனக்கு லைட்டா பாடம் புகட்ட நினைச்சு, சாயங்காலமே ஒரு சம்பவத்தை நடத்திட்டா. வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலயே இண்டர்காம் பெல் சத்தம் கேட்டது. தங்கமணி தான் எடுத்தார். யார் நீங்க? எந்த ப்ளாட்? என்றெல்லாம் கேட்டுகொண்டிருந்தார். சரியா பதில் சொல்லலை-ன்னா கதவை திறக்காத என்று நான் சொன்னேன். உடனே இண்டர்காமை என்னிடம் கொடுத்துவிட்டார். எதிர்முனை ஆசாமியிடம் யார் நீ? எந்த ப்ளாட்-க்கு போகணும்? எதுக்கு-ன்னு விடாம கேள்வி கேட்டுட்டு இருந்தேன். சென்ட்ரல் இன்பர்மேடிக்ஸ் ஆர்கனைசேசன்-ல (CIO) இருந்து வந்திருக்கேன். உன்கிட்ட பேசணும்-னு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தான். (பழைய)காக்கிசட்டை, குருதிப்புனல், வேட்டையாடு விளை...

பிரசவம்

முடி திருத்தகம் சென்றிருந்தேன். வழக்கமாக எனக்கு ஒருவர் முடிதிருத்துவார். நடுவில் சில நாட்கள் அவரைக் காணவில்லை. நேற்று சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன். ஊருக்கு போயிருந்தீங்களா என்று கேட்டேன். ஆமாம் சார். என் மனைவி இறந்துட்டாங்க. அதுக்காக போயிருந்தேன் என்றார் சாதாரணமாக. எப்படி என்றேன் நான். 7 மாத கர்ப்பிணியாக இருந்தாள். என்ன காரணமோ தெரியவில்லை. குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது. அது தெரியாமலே சில நாட்கள் அவள் இருந்துவிட்டாள். அதனால் அவளும் இறக்க நேரிட்டது என்றார். அவரை சங்கடப்படுத்திவிட்டோமோ என்று பட்டது எனக்கு. என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. இறைவன் நிச்சயம் உங்களுக்கு துணை இருப்பார் என்று சொன்னேன். போதும் சார். இறைவன் ஒருவனே போதும். வேறு யாரும் வேண்டாம் என்றார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்து இத்தனை சீக்கிரம் மீண்டு விட்டாரா அல்லது விரக்தியில் சொன்னாரா தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, உங்களுக்கு வேறு குழந்தை இருக்கிறதா என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலை கேட்டு, அந்த கேள்வியை கேட்டே இருக்க வேண்டாமோ என்று தோன்றியது. "2 குழந்தைங்க இருக்காங்க சார். ஒ...

வெக்கேஷன்

இந்த வெக்கேஷனுக்கு கெளம்பறதுக்கு முன்னாடி ஒரு மாசம்.. கரெக்ட்டா சொல்லணும்-னா அடுத்த மாசம் இந்நேரம்-நு கணக்கு பண்ணுவோமே அந்த ஒரு மாசம்... ரொம்ப ரொம்ப ரொம்ப மெதுவா நகரும். இன்னும் 30 நாள் இருக்கு-ன்னு பாத்து வெச்சுட்டு ஒரு 2 வாரம் கழிச்சு பாத்தா, இன்னும் 28 நாள் பாக்கி இருக்கும். இப்படியே ஒவ்வொரு நாளா தள்ளி தள்ளி நமக்கு நாக்கு தள்ளிடும். அந்தா இந்தா-ன்னு ஒரு வழியா ட்ராவெலிங் ப்ரம் மனாமா, பஹ்ரைன் டு சென்னை, இந்தியா-னு பேஸ்புக் -ல ஸ்டேடஸ் போட்டு வண்டி ஏறிடுவோம். சென்னை வந்து, ப்ளைட் டயர் ரன்வே-ல டச் ஆகுற அந்த நொடியில இருந்து பாஸ்ட் பார்வர்ட் (FAST FORWARD) பட்டன் ஆட்டோமாடிக்கா ஆன் (ON) ஆயிடும் அதுவும் சாதாரண பாஸ்ட் பார்வர்ட் இல்ல.. ஜெட்டுக்கு பின்னாடி பயர் வெச்சா மாதிரி பாஸ்ட் பார்வர்ட். ஏர்போர்ட்-ல இருந்து ஆட்டோ/டாக்சி புடிச்சு வீட்டுக்கு வந்து அப்பாடா-ன்னு உட்காந்தா ஒரு வாரம் டஸ்... (அதாங்க இஸ்-ங்கரதுக்குள்ள டஸ்-னு போயிடும்) ப்ரெண்ட்ஸ்/சொந்த பந்ததுக்கெல்லாம் போன் போட்டு பத்து நிமிஷம்.. பத்தே பத்து நிமிஷம் பேசினாலே அடுத்த ஒரு வாரம் டஸ்... வர்றதே வருஷத்துக்கு ஒரு தடவை தான்.. நங...