Posts

பாஸிங்

Image
சென்ற வாரம் நானும் நண்பனும் வண்டியை பாஸிங் (நம்ம ஊர் FC) கொண்டு சென்றோம். அரைமணி நேரப் பயணத்தில் சோதனைச் சாவடியை அடைந்தோம். எனக்கு சென்ற வருடம் பாஸிங் சென்று வந்த அனுபவம் உண்டு என்கிறபடியால் அவனிடம் "ரொம்ப கறாரா இருப்பாங்க, சின்னதா ஏதாவது தப்பு நடந்தாலும் பெயில் பண்ணி அனுப்பிடுவாங்க. பட்லர் இங்கிலீஷ் தான் பேசணும். உனக்கு இங்கிலீஷ் தெரியும்ன்னு ஸ்டைலா பதில் சொல்லாத. அங்க இருக்கற அரபி ஆபீஸருக்கு புரியாது. அதுக்காகவே பெயில் பண்ணிடுவான்" என்று கொஞ்சம் அளந்துவிட்டிருந்தேன்.   மன்னன் படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் க்யூ-வில் நிற்பது போல், அடித்துபிடித்து இருவரும் அவரவர் வண்டியுடன் ஒரே க்யூவில் நின்றோம். கொஞ்சம் கொஞ்சமாக க்யூ நகர்ந்தது. சோதனை சாவடி "ராம்ப்"பில் (Ramp) ஏற தயாராக நான். என் வண்டிக்குப் பின்னாடி நண்பனும் அவனது வண்டியும்.   வந்தார் ஒரு அரபி ஆபீசர். நேரே நண்பனிடம் சென்று அவனது வண்டி ஓனர்ஷிப் அட்டையையும் அவனது ஓட்டுநர் உரிம அட்டையையும் வாங்கிப் பார்த்துவிட்டு வண்டியை நோட்டம் விட்டார். லைட், பிரேக் எல்லாம் சரியாக இருக்கிற...

நாளைய வாசல் - 2

Image
நீங்க போராட்டம் பண்ணீங்க. திட்டத்தை நிறுத்தினாங்க. சரிதான். ஆனா முழுசா நிறுத்தலை. கொஞ்ச காலம் கழிச்சு 2025 வாக்கிலே விவசாயிங்களுக்கு நடுவில ஒரு ஜாதி பிரச்னையை கிளப்பிவிட்டு, வெட்டிக்க வெச்சாங்க. அதிலேருந்து தப்பிச்சவங்கள, கொலையாளிகள்-ங்கற பேரில் கைதுபண்ணி ஆயுள் தண்டனை கொடுத்துட்டாங்க. எதிர்த்துப் பேசினவங்களை வாயில கரண்ட் வயரைக் குடுத்து கொன்னுட்டாங்க. அப்பறம் அவங்க நிலத்தை எல்லாம் ஆக்கிரமிச்சு ஒரு எதிர்ப்பு கூட இல்லாம திட்டத்தை செயல்படுத்தினாங்க. 2045-ல் ஒரு பூகம்பம் வந்திச்சு. தமிழகமே, ஏன் இந்தியாவே பாக்காத 13 ரிக்டர் அளவு. எல்லாம் மண்ணோட மண்ணாப்போச்சு. தஞ்சாவூரையும் அதை சுத்தித்தியிருந்த 11 மாவட்டங்களும் அழிஞ்சிடுச்சு. நீராதாரம் எல்லாம் அழிஞ்சிடுச்சு. அதோட முடிஞ்சிருக்கும்-ன்னு பாத்தா, அதுக்கப்பறம் வந்த கேன்சரும் தோல் நோய்களும் இன்னும் நிறைய மக்களை அழிச்சிடுச்சு. பிழைச்சவங்க எல்லாம், பக்கத்துக்கு மாநிலங்களுக்கு கொத்தடிமையா போயிட்டாங்க. அவங்களுக்கு குழந்தைகளுக்கு  எல்லாம் இப்போ படிப்பு வாசனையே இல்ல. அடிமையாவே வளத்துட்டாங்க. நீராதாரம் இல்லையா? மழை பெய்யலிய...

நாளைய வாசல் - 1

சைரன் வைத்த வண்டியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நந்தம்பாக்கம் அரங்கத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தார். டிஜிட்டல்  3D பேனர்கள் பளிச் பளிச்சென கண்ணைக் கவர்ந்தன. ஆம். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் 3D தொழில்நுட்பம் தான்.   பக்கத்தில் அந்த சைரன் வண்டியையும் அமைச்சரையும் பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிட்டவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்தான். ஏங்க இந்த பழைய பேனர் எல்லாம் இல்லாம, இந்த புது டிஜிட்டல் பேனர் நல்லா இருக்குல்ல?   வரைதல், பெயிண்டிங், அச்சடிக்கப்பட்ட பேனர் இதெல்லாம் ஒழிந்து ஒரு மாமாங்கமாகிவிட்டது. இரண்டே இரண்டு தட்டையான குச்சி போன்ற வஸ்து தான் தேவை. மேலும் கீழுமாக செட் செய்து கட்டிவிட்டால் போதும். அந்த குச்சிகளில் இருந்து ஒளிக்கற்றைகள் வந்து, அதில் காட்சிகள் விரியும். இதுவும் ஒருவகை ப்ரொஜெக்ஷன் நுட்பம் தான். ஆனால் திரையிட சுவரோ திரையோ தேவையில்லை. அந்த குச்சிகளில் இருந்து, காட்சிகள் விரியும். இடத்திற்கு ஏற்ப நீள அகலங்களை கூட்டவோ குறைக்கவோ முடியும். அச்சிடப்பட்ட பேனர்களை போல அல்லாமல், இந்த டிஜிட்டல் பேனர்களில் தலைவர்கள் நடக்கல...

அம்மா

Image
    கோபிசெட்டிபாளையத்தில் பிறந்து சில வருடங்களில் தாத்தாவின் மறைவிற்கு பிறகு மாமாக்கள் கோவை சென்னை என இரண்டு ஊர்களுக்கு வேலைக்கு செல்ல, குடும்பம் கோவைக்கு மாற்றலானது. 7 பேர் கொண்ட பெரிய குடும்பம். பாட்டியும் அம்மாவும் கோவைக்கும் சென்னைக்கும் மாறி மாறி ட்ரெயின் பிடித்தனர்.   பெரியம்மாவின் (அம்மாவின் அக்கா) திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்வியல் நடைமுறைகளைக் கண்ட பாட்டி, கண்டிப்பாக பட்டணத்து மாப்பிள்ளைக்கு இரண்டாவது பெண்ணை (அம்மாவை) திருமணம் செய்து கொடுப்பதில்லை என முடிவு செய்து மும்மரமாக மாப்பிள்ளை தேடும் படலத்தை தொடங்கினார். இதனாலேயே அப்பாவுக்கு யோகம் அடித்தது எனலாம்.   அப்போது இரண்டாவது பெரியப்பா (அப்பாவின் அண்ணா) எப்படியோ இந்த தகவலை தெரிந்துகொண்டு பாட்டியை சந்தித்துப் பேச, சீக்கிரமே பீபீப்பி டும்டும்டும். அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். ஆனால் இந்த வரனையும் பொருத்தமில்லை என்று சொல்லி தட்டிக்கழிக்கக்கூடும் என்பதால், கடைசிவரைக்கும் அம்மாவின் ஜாதகத்தை அப்பாவிடம் காட்டவேயில்லை.   திருமணத்திற்குப் பிறகு ஜாதகத்தைப் பார்த...

கடவுள்

Image
படைக்கும் கடவுள் - பிரம்மா காக்கும் கடவுள் - விஷ்ணு அழிக்கும் கடவுள் - சிவன் இப்படித்தான் நமக்கெல்லாம் அந்தக்காலத்தில் சொல்லிக்குடுத்தாங்க. இந்த இன்டர்நெட் யுகத்தில் படைக்கும் கடவுள் - கூகுள் காக்கும் கடவுள் - பேஸ்புக் அழிக்கும் கடவுள் - கேம்ஸ் / ஆன்லைன் மல்டி பிளேயர் கேம் சைட்ஸ். இந்த கடவுளர்கள் எல்லாரும், மல்டிபுள் பெர்சனாலிட்டி. சில சமயம் படைக்கும் கடவுள் காக்கும் /அழிக்கும்  வேலையை செய்வாரு. காக்கும் கடவுள், படைக்கும்/அழிக்கும் வேலையை செய்வாரு. படைக்கும்/காக்கும்/அழிக்கும் வேலையை ஒரே கடவுள் செய்வாரு. இப்போ எல்லாம் பல விஷயங்கள் கூகுள்-இடமிருந்து/இருப்பதால் தான் உருவாகுது/படைக்கப் படுகிறது. கார்-ல இருந்து கம்ப்யூட்டர் வரைக்கும், நண்பர்கள், நண்பிகள், வாழ்க்கைத்துணை, அந்த துணைக்கு ஒரு  இணை இப்படி எந்த விஷயத்துக்கு அவரை சரணடைஞ்சாலும் கூகுள் ஆண்டவர் கண்டிப்பாக வரம் அருள்வார். சமயங்களில் நம்மைப் பத்தி நமக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் இந்த கூகிளாண்டவர் தெரிஞ்சு வெச்சிருப்பாரு. யாருக்கும் தெரியக்கூடாது-ன்னு சில விஷயங்கள் மறைச்சு வெச்...

அகவை 60, ரேபான் கண்ணாடி, புலிநகம் செயின், புல்லட்

Image
சிங்கம் என்றால் என் தந்தைதான் செல்லம் என்றால் என் தந்தை தான் கண் தூங்கினால் துயில் நீங்கினால் என் தந்தை தான் என் தந்தை தான் எல்லோருக்கும் அவர் விந்தை தான் இன்று அப்பாவுக்கு அகவை 60. ரேபான் கண்ணாடி அணிந்து, புலிநகம் செயினை போட்டுக்கொண்டு, உத்திரியத்தை கக்கத்தில் இரண்டு பக்கமும் பறக்கவிட்டபடி புல்லட்டில் ஊரார் பார்க்க செல்லவேண்டும் என்பது அப்பாவின் ஆசை. சீனி அய்யர் (ஸ்ரீனிவாச ஐயங்கார், என் அப்பாவின் தாத்தா) குடும்பம் நொடித்து ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாகிவிட்டது என்று பேசிய ஊரார் முன்னே, நாங்கள் நொடித்துவிடவில்லை என்று காட்டவேண்டும் என்பதற்காகவே மேலே சொன்னதை செய்ய ஆசை அப்பாவுக்கு. கோவில் கைங்கர்யம், வயல்கள், தோட்டம், மாடுகள், வேலையாட்கள் என்று இருந்த குடும்பம், பாட்டியின் அகால மறைவிற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிதிநிலை கரைந்து தோட்டம், மாடுகள், வேலையாட்கள் எல்லாம் இழந்து, கோவில் கைங்கர்யமும் கோவில் சம்பந்தப்பட்ட வயல்கள் மட்டும் எஞ்சி நின்ற சூழ்நிலையில் அப்பாவின் இரண்டு அண்ணன்களும், வேலை நிமித்தம் வெளியூர்களில் செட்டிலாகிவிட்டனர். ஆனால் அப்பா மட்...

லண்டன் லெட்டர்

பஹ்ரைன் 04-Aug-2016 அன்புள்ள  ____, நாளது தேதி இங்கு அனைவரும் நலம். அங்கும் அனைவரும் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன். நான் கடந்த வாரம் லண்டன் சென்றுவந்தது குறித்து பகிர்ந்து கொள்ளக்கருதி இக்கடிதம் எழுதுகிறேன். புதன் நள்ளிரவு 1 மணிக்கு பஹ்ரைனில் இருந்து விமானம் புறப்பட்டது. 7 மணிநேர பயணம். ஏர்-ஹோஸ்டஸ் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. ஏர் இந்தியா பணிப்பெண்கள் தேவலாம்(??) என்று தோன்றியது. வியாழக்கிழமை லண்டன் நேரம் காலை 6.15க்கு விமானம் தரையிறங்கியது. சென்ற முறையே ட்யூப் எனும் அண்டர்கிரவுண்ட் ரயிலில் பயணித்திருந்தாலும், இம்முறை விமானநிலையத்திலிருந்து லண்டன் நகரம் சென்றதே ரயிலில் தான். டாக்சி ஏறவேயில்லை. டாக்சி அத்தனை காஸ்ட்லி என்பதும் ஒரு காரணம். எல்லா ரயில் நிலையங்களிலும் அத்தனை சிறந்த கட்டமைப்புகள். நிறைய வழித்தடங்கள் உண்டு. ஒரு சில ரயில் நிலையங்களில் இரண்டு மூன்று வழித்தடங்கள் இருக்கும் பட்சத்தில் ரயில் நிலையமே ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மால் போல அத்தனை பிரம்மாண்டமாய் இருக்கிறது. Piccadilly Line, District Line, City Line இப்படி பல வழித்தடங்கள். ரயில் ம...