Posts

கார்

Image
கோகுல் புதிய கார் புக் செய்த அன்றிலிருந்தே ஏதோ ஒன்று சரியாக இல்லாதது போல் உணர்ந்தான். லோன் அப்ரூவ் ஆகுமோ ஆகாதோ என்ற சந்தேகத்தால் அட்வான்ஸ் கட்டவில்லை. அட்வான்ஸ் கட்டலாம் என்று வந்தபோது இவன் செலக்ட் செய்த வண்டியை வேறு யாரோ ரிசர்வ் செய்திருந்தனர். இரண்டு வாரகாலம் போனது. ஆனால் இவன் கேட்ட கலர் கிடைக்கவில்லை. பேசாமல் வண்டியே வேண்டாம் கேன்சல் பண்ணிவிடலாம் என்ற மனநிலையில் இருந்தபோது இவன் ஏற்கனவே செலக்ட் செய்திருந்த கலர் வண்டி உள்ளது என தகவல் வந்தது. கோகுல் உடனே ஷோரூம் விரைந்தான். சார், ஏற்கனவே அட்வான்ஸ் பே பண்ணினவர் இந்த வண்டி வேண்டாம்னு சொல்லிட்டார். நீங்களும் இதே வண்டி கேட்டிருந்ததால முதல்ல உங்களுக்கு கால் பண்ணோம். ரெண்டு மூணு கஸ்டமர் இதே வண்டிக்காக வெயிட்டிங் சார். வேற யாராவது பே பண்றதுக்குள்ள நீங்க அட்வான்ஸ் பே பண்ணிட்டா உங்களுக்கு ரிசர்வ் பண்ணிடலாம். ஐ ஸீ... நான் இப்பவே அட்வான்ஸ் பே பண்றேன். லோன் அப்ரூவ் பண்ணிட்டாங்க. ப்ராசஸிங் கிட்டத்தட்ட கம்ப்ளீட் ஆயிடுச்சு. ரெண்டு மூணு நாள்ல பணம் வந்திடும். ஓகே சார். நீங்க பே பண்ணிட்டு ரெசிப்ட் காபி குடுத்தீங்கன்னா, நான் மத்த ...

குமார்ஜியும் கீதோபதேசமும்

Image
Dear Sri Kumar-ji pranams. Please accept my apologies for writing this in Tamil, as I’m not as proficient as you in English. Hope Srini sir or anyone from Sahasranamam sathsangh would translate it to you. இன்று ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் அவர்கள் இல்லதில் நடைபெற்ற ஸஹஸ்ரநாமம் நிகழ்வில் கலந்துகொள்ள சென்றிருந்தேன். ஸ்ரீ குமார்ஜி பஹ்ரைனிலிருந்து பிரியாவிடை பெற்று செல்வதால் அவருக்கு திவ்ய ப்ரபந்த ஸத்சங்கத்தின் சார்பில் ஒரு சிறிய அன்பளிப்பையும்   கொடுப்பதற்காக சென்றிருந்(தோம்)தேன். முதலில் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பிறகு வரிசையாக சில பல ஸ்தோத்திரங்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அத்தனை அழகாக ஸ்லோகங்களையும் நாம ராமாயணத்தையும் சொல்வதாகட்டும்.. அதுவும் பார்க்காமல் .. அற்புதம். நானெல்லாம் பார்த்துப் படித்தாலே ஸஹஸ்ரநாமத்தில் இல்லாத நாமங்களை எல்லாம் நீங்கள் கேட்கலாம். குழந்தைப் பருவத்தில் இத்தனை விஷயங்களை கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அது அதுக்கு ஒரு நேரம் வரவேண்டுமே. அந்த வகையில் நிச்சயம் அந்தக் குழந்தைகள் புண்யாத்மாக்கள். கீதையின் 13வது அ...

தூக்கு தண்டனை

Image
என்ன பாஸ்கரு.. ரெண்டு நாள்ல தூக்கு. ஆனா ரொம்ப குஷியா இருக்கியேப்பா. வருத்தமே இல்லையா? எதுக்குண்ணே வருத்தப்படணும்? அந்த ரவி பெரிய நல்லவனாட்டம் போலீஸோட சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு என்னை ஜெயில்ல போட்டான்... நான் பெயில்ல வந்து அவனைப் போட்டேன். ஆசை தீர வெட்டினேன். சும்மா ரத்தம் தெரிச்சுது பாரு... சுத்தி இருந்தவனெல்லாம் தெறிச்சு ஓடிட்டான். எனக்கு தூக்குன்னு தேதி தான் குறிச்சிருக்காங்க. ஆனா இன்னும் தூக்குல போடலல்ல.. என்ன நடக்குதுன்னு பாரு. பாஸ்கரு ஏதோ பிளான் வெச்சிருக்க போல.. ஆமா. பிளான் இருக்கு. வொர்கவுட் ஆகுமா தெரியல. ஆனா வொர்க் ஆச்சுன்னா அப்பறம் இந்த பாஸ்கரோட லெவலே வேற.. அப்படி என்ன பிளான் பாஸ்கரு? இருண்ணே. நாளன்னிக்கு நீயே தெரிஞ்சுக்குவ.. நீ எஸ்கேப் ஆனா, இந்த அண்ணனை மறந்திராத பாஸ்கரு. உன்னைப் போயி மறப்பேனா.. நான் வெளில போனதும், மொதல் வேலை, உன்னை வெளில கொண்டுவர்றது தான். தூக்கு தண்டனை நாளும் வந்தது. பாஸ்கர், உங்க கடைசி ஆசை என்ன? ஐயா, அடுத்த மாசம் நடக்கப்போற தேர்தல்ல எங்க தொகுதியில நான் வேட்பாளரா நிக்கணும். அவ்வளவு தான். அதுக்கு வாய்ப்பில்லை....

கேமரா

Image
என்ன சதீஷ் எப்போதான் புது கேமரா வாங்கப்போற? வாங்கலாம் ப்ரோ.. நல்ல ஆபருக்கு நாலு வருஷம் வெயிட் பண்ணாலும் தப்பில்லைன்னு ஒரு படத்துல ஆண்டவரே சொல்லியிருக்காரு.. அந்த நாளும் வந்தது. ப்ரோ, ஒரு ஆபர் போட்டிருக்கான். நிக்கான் SLR 3300 கேமரா + பேஸிக் லென்ஸ் சேர்த்து பதினேழாயிரம் ருபாய். நல்ல ஆபர் மாதிரி இருக்கு. கேமரா எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க. நல்ல கேமரா-ன்னா வாங்கிடலாம். சதீஷ், எண்ட்ரி லெவலுக்கு இந்த கேமரா ஓகே தான். நல்ல ஆபர். சூப்பர் ப்ரோ. இன்னிக்கே வாங்கறோம். க்ளிக்கறோம், பேஸ்புக்-ல Satty Clicks-ன்னு ஒரு போட்டோகிராபி பேஜ் கிரியேட் பண்றோம், கலக்கறோம். எல்லாம் ஓகே. அதென்னய்யா பேரு சட்டி க்ளிக்ஸ்-ன்னு? ப்ரோ, அது சட்டி இல்ல. சேட்டி க்ளிக்ஸ். சதீஷோட ஷார்ட் பார்ம் ப்ரோ. ஓஹோ.. அப்போ சரி அப்போ சரி.. கேமரா வாங்கியாயிற்று. என்ன சதீஷ், கேமரா வாங்கின அன்னிலேருந்து பையை விட்டே வெளியில எடுக்கல போல? பூஜை ரூம்ல சாமி படத்துக்கு சேர்த்து கேமராவுக்கு சூடம் பத்தி காட்டறீங்கன்னு கேள்விப்பட்டேன்... அப்படிலாம் இல்ல ப்ரோ. கேமரால ஒன்னும் புரியல. நிறையா ஆப்ஷன்ஸ் இருக...

பாஸிங் - 2

Image
இன்னிக்கு நம்மள சுத்தல்ல விடப்போறாங்க என்று நான் நினைத்து முடிப்பதற்குள் "ஆப்டர் சூபர்வைசர் கோ டு ரெஜிஸ்தரேசன்" (After subervisor go to registharesan) என்றான். ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டாங்க என்று கன்பார்ம் ஆகிவிட்டது. வண்டியை பார்க்கிங் ஏரியாவுக்கு விட்டேன். ஏற்கனவே அங்கு டபுள் பார்க்கிங்கில் இருந்த நண்பனின் வண்டிக்கருகில் என் வண்டியை நிறுத்திவிட்டு, "ஏதோ சூப்பர்வைஸரப் பாத்து கையெழுத்து வாங்கணுமாம். அப்பறம் ரெஜிஸ்ட்ரேஷன் போகணுமாம். நீ கொஞ்சம் வெயிட்பண்ணு. இந்தா என் வண்டி சாவி. யாராவது வண்டிய பார்க்கிங்ல இருந்து எடுக்க வந்தா, என் வண்டியை நகர்த்தினாதான் அவங்க வண்டிய எடுக்க முடியும். நீ கொஞ்சம் பாத்துக்கோ" என்று சொல்லிவிட்டு சூப்பர்வைசர் இருக்கும் இடம் என்று தோராயமாக கூறிய திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றேன். இரண்டு மூன்று பில்டிங் இருந்ததால் எந்த பில்டிங்கிற்குள் நுழைவது என்று குழப்பம். கொஞ்சம் சுற்றும்முற்றும் பார்த்தேன். நண்பனின் வண்டியை பாஸிங் செய்த அரபி ஆபீசர் நின்றுகொண்டு வண்டிகளை ஒழுங்கு படுத்துவதும், சில வண்டிகளை சோதனையிடுவதுமாக...

பாஸிங்

Image
சென்ற வாரம் நானும் நண்பனும் வண்டியை பாஸிங் (நம்ம ஊர் FC) கொண்டு சென்றோம். அரைமணி நேரப் பயணத்தில் சோதனைச் சாவடியை அடைந்தோம். எனக்கு சென்ற வருடம் பாஸிங் சென்று வந்த அனுபவம் உண்டு என்கிறபடியால் அவனிடம் "ரொம்ப கறாரா இருப்பாங்க, சின்னதா ஏதாவது தப்பு நடந்தாலும் பெயில் பண்ணி அனுப்பிடுவாங்க. பட்லர் இங்கிலீஷ் தான் பேசணும். உனக்கு இங்கிலீஷ் தெரியும்ன்னு ஸ்டைலா பதில் சொல்லாத. அங்க இருக்கற அரபி ஆபீஸருக்கு புரியாது. அதுக்காகவே பெயில் பண்ணிடுவான்" என்று கொஞ்சம் அளந்துவிட்டிருந்தேன்.   மன்னன் படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் க்யூ-வில் நிற்பது போல், அடித்துபிடித்து இருவரும் அவரவர் வண்டியுடன் ஒரே க்யூவில் நின்றோம். கொஞ்சம் கொஞ்சமாக க்யூ நகர்ந்தது. சோதனை சாவடி "ராம்ப்"பில் (Ramp) ஏற தயாராக நான். என் வண்டிக்குப் பின்னாடி நண்பனும் அவனது வண்டியும்.   வந்தார் ஒரு அரபி ஆபீசர். நேரே நண்பனிடம் சென்று அவனது வண்டி ஓனர்ஷிப் அட்டையையும் அவனது ஓட்டுநர் உரிம அட்டையையும் வாங்கிப் பார்த்துவிட்டு வண்டியை நோட்டம் விட்டார். லைட், பிரேக் எல்லாம் சரியாக இருக்கிற...

நாளைய வாசல் - 2

Image
நீங்க போராட்டம் பண்ணீங்க. திட்டத்தை நிறுத்தினாங்க. சரிதான். ஆனா முழுசா நிறுத்தலை. கொஞ்ச காலம் கழிச்சு 2025 வாக்கிலே விவசாயிங்களுக்கு நடுவில ஒரு ஜாதி பிரச்னையை கிளப்பிவிட்டு, வெட்டிக்க வெச்சாங்க. அதிலேருந்து தப்பிச்சவங்கள, கொலையாளிகள்-ங்கற பேரில் கைதுபண்ணி ஆயுள் தண்டனை கொடுத்துட்டாங்க. எதிர்த்துப் பேசினவங்களை வாயில கரண்ட் வயரைக் குடுத்து கொன்னுட்டாங்க. அப்பறம் அவங்க நிலத்தை எல்லாம் ஆக்கிரமிச்சு ஒரு எதிர்ப்பு கூட இல்லாம திட்டத்தை செயல்படுத்தினாங்க. 2045-ல் ஒரு பூகம்பம் வந்திச்சு. தமிழகமே, ஏன் இந்தியாவே பாக்காத 13 ரிக்டர் அளவு. எல்லாம் மண்ணோட மண்ணாப்போச்சு. தஞ்சாவூரையும் அதை சுத்தித்தியிருந்த 11 மாவட்டங்களும் அழிஞ்சிடுச்சு. நீராதாரம் எல்லாம் அழிஞ்சிடுச்சு. அதோட முடிஞ்சிருக்கும்-ன்னு பாத்தா, அதுக்கப்பறம் வந்த கேன்சரும் தோல் நோய்களும் இன்னும் நிறைய மக்களை அழிச்சிடுச்சு. பிழைச்சவங்க எல்லாம், பக்கத்துக்கு மாநிலங்களுக்கு கொத்தடிமையா போயிட்டாங்க. அவங்களுக்கு குழந்தைகளுக்கு  எல்லாம் இப்போ படிப்பு வாசனையே இல்ல. அடிமையாவே வளத்துட்டாங்க. நீராதாரம் இல்லையா? மழை பெய்யலிய...