Posts

பொய்யாமொழி கயல்விழி - காதல் கதை

Image
காதல் - கல்லூரிக் காலங்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் கடந்து வந்திருப்போம் இந்தக் "காதலை".. இளங்கலை (UG) கல்லூரிக் காலம் தான் எத்தனை இனிமையானது.. முதல் பருவத்தின்போது அந்நியனாக பார்த்த முகங்கள் பிறகு நண்பர்களாவதும், மூன்றாம் அல்லது நான்காம் பருவத்தில் சண்டையிடுவதும், கடைசி பருவத்தில் நிகழும் Farewell நாளின்போது எல்லாரும் கட்டிப்பிடித்து கதறியழுவது என டெம்பிளேட் கல்லூரி வாழ்க்கை. நடுவே சிலபல களேபரங்கள். அதில் சிலர் வில்லனாவதுண்டு (பெரும்பாலும் ப்ரொபஸர்கள்). சிலர் ஹீரோவாவது உண்டு. ப்ரொபஸர் வில்லன் ஆனாலும் ஹீரோ ஆனாலும் அந்த பேட்ச் மாணவர்கள் கோர்ஸ் முடித்து செல்லும்வரையில் அவர் வில்லன்/ஹீரோ தான். ஆனால் கல்லூரி முடித்து வெளியே வந்தபிறகு எல்லா ப்ரொபஸர்களுமே மாணவர்களுக்கு ஹீரோ தான். படிப்பு முடித்து வெளியேறிய பிறகுதான் அவர்களிடம் அந்த இறுக்கம் குறைந்து மாணவர்களால் அவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு களேபரத்தின்போது சக மாணவன் "பொய்யாமொழியை (காரணப்பெயர்) அடிச்சுட்டாய்ங்க டா" எனக் கத்திக்கொண்டே வகுப்பிற்குள் நுழைய, நண்பர்கள் அனைவரும் ஆவேசமாய் ...

ரசனை

ரசனை.. பாஷை ஓரளவுக்கே புரிந்தாலும் மலர் டீச்சர் என சொல்லிச் சொல்லி பேருவகை கொண்டிருந்த குரூப்பில் திடீரென ஒற்றைக் குரலாக ஒலித்த ஷெரில் பெயரைக் கேட்டு ஊர் உலகமே ஜிமிக்கி கம்மல் பாட்டைத் தேடியது.. சில நாட்கள் ட்ரெண்டிங்கில் இருந்த ஷெரில் பெயரை தொங்கலில் விட்டுவிட்டு இப்போது எல்லாரும் ப்ரியா வாரியர் பெயரை நம்பர் 1 ஆக்கியிருக்கிறார்கள். அந்தக் கண்சிமிட்டல் தான் எத்தனை எத்தனை நினைவுகளைக் கிளறியிருக்கும். எத்தனை இளவட்டங்களுக்கு போதையேற்றியிருக்கும். நினைவுகளே நிகழ்விலும் அமையப்பெற்றவர்கள், இருவருமாக சேர்ந்து அந்த நினைவுகளை அசைபோட்டுக்கொள்கிறார்கள். வெறும் நினைவுகளாக மட்டுமே அமையப்பெற்றவர்கள் யதார்த்தத்தை நினைத்து பெருமூச்சு விடுகிறார்கள். கொலவெறி பாடல் உலகளாவிய அளவில் ரசிக்கப்பட்டது. இப்போது குறும்பா-வும் சொடக்கு மேல சொடக்கும் எப்.எம்-களின் தேசிய கீதம். வெள்ளைப் பனிமூட்டத்தின் நடுவே பனி சிற்பம் போல சிலருக்கு தோன்றும் "அந்த ஒருவர்", வேறு யாருக்கோ "ப்பாஹ்" என ரியாக்ஷன் கொடுக்குமளவிற்கு இருப்பது இந்த பாழாய்ப்போன ரசனையாலே. ரோஸ் கலரில் சிலுக்கு சட்டை எ...

New Year Pooja with Trump 😉

Image
டிசம்பர் 30 தொட்டே புதையா ஏரியா அல்லோலகல்லோலப்பட்டது. சிட்டி சென்டர் தாண்டினதுமே டிராபிக் ஜாம்தான். எல்லா வண்டிகளும் பம்பர் டூ பம்பர். சென்ற வருடங்களைக் காட்டிலும் இம்முறை பாதுகாப்புக்கு ஏக கெடுபிடிகள். வண்டிகளின் போல்ட் நட் வரையிலும் கூட கழட்டி சோதனை செய்தார்கள். புதையா ஹைவேயில் யாரும் தப்பித்தவறி கூட டயரை எரித்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு மாதமாகவே டயர்களை வாங்க/விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. எல்லா வண்டிகளிலும் ஸ்டெப்னிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. பழைய டயருக்கு பஞ்சர் ஓட்டினால் கூட 3 மாதம் சிறை. ஏன் இந்த தடவை இவ்வளவு கெடுபிடி? அராஜகமா இருக்கே.. போன வருஷம் பஹ்ரைன் ராஜாவே வந்தப்போ கூட இவ்வளவு கெடுபிடி இல்லையே? மக்கள் பேசிக்கொண்டார்கள். ஆம். கடந்த சில வருடங்களாகவே ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று ஷ்யாம்ஜி வீட்டு பூஜையில் வளைகுடாவிலிருந்து அரபிகளும் ஏகமாய் கலந்துகொள்கிறார்கள். அதிலும் சிலர் பஞ்சகச்சம் உத்திரியம் சகிதம். முத்தாய்ப்பாக சென்ற வருடம் பஹ்ரைன் ராஜாவே (நவீன) ரத தாசேர பதாதிகளின் புடைசூழ கலந்துகொண்டார். இவ்வளவு கெடுபிடி இருக்கே, இந்த தடவை ஸ்பெ...

நீங்கள் இப்படி செய்திருக்க கூடாது பாஸ்கர்ஜி

தோராயமாக ஒரு மாதம் முன்பு ஒரு நாள் பாஸ்கர்ஜி-இடமிருந்து அழைப்பு வந்தது. ஹமாலா-ல ஒரு ஆத்துல லலிதா கல்யாணம் ஏற்பாடாகியிருக்கு சார். வீடியோ எடுக்கணும். ஆடியோ சிஸ்டம் வேணும், ஸ்பீக்கர், மிக்ஸர், 5 மைக் வேணும் சார் என்றார். பிரபந்தம் ஆடியோ சிஸ்டம் இருக்கு சார். ஆனால் 4 மைக் தான் அதில் கனெக்ட் பண்ண முடியும். கண்டிப்பா 5 மைக் வேணுமா? என்றேன். ஆமாம் சார், 2 பாட்டு, 2 மிருதங்கம், 1 வயலின். கண்டிப்பா 5 வேணும் சார் என்றார். வீடியோ-வுக்கு சிதம்பரம், அவர் மூலமாகவே ஆடியோவும் ஏற்பாடானது. டிசம்பர்  6ம் தேதி மாலை ஜுபாரா சங்கர் வீட்டில் ஆடியோ சிஸ்டம் வந்திறங்கியது. VK எனும் வெங்கடகிருஷ்ணன் தான் ஆடியோ மேற்பார்வைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் (ஆடு நம்பர் 1). அவர் வர தாமதமாகவே நான் சென்று ஆடியோவை செட்டப் செய்தேன். ஆஜானுபாகுவான 2 ஸ்பீக்கர், அதற்கேற்றார் போல் ஸ்டான்ட். 4 அடி நீளம் 8 அடி அகலத்தில் மிக்ஸர், அள்ள அள்ளக்குறையாத அமுதசுரபி போல, வரவர வளரும் வயர்கள்.. என ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவே அங்கிருந்தது. VK வந்து பார்த்தவுடன் மெர்சலாகிவிட்டார். சார்.. இதை எப்படி சார் நான் எல்லா ஆத்துக்...

விவே(பபிள்)கம்

Image
டுமீல் டுமீல் (இது சைலன்சர் துப்பாக்கி. அதனால் கொஞ்சம் Husky வாய்ஸில் படிக்கவும்). தேச துரோகிகள் 2 பேரை சுட்டு கொன்றுவிட்டேன். ஆனால் எப்படியோ சத்தம் கேட்டு வெளியில் ஆட்கள் வந்துவிட்டனர். சுமார் 200 பேர் என்னை சுத்துப்போட்டுவிட்டனர். நான் யாருன்னு சொல்லவே இல்லையே... நான் PK. ஓடிவந்து புர்ஜ் கலிஃபாவின் 150வது தலத்தில் இருந்து குதிக்கிறேன். அடுத்த இரண்டாவது செக்கண்டில் பபிள்கம்மில் முட்டை விட்டேன். அதிலிருந்து பாராசூட் விரிகிறது. அத்தனை பேர் சுட்டதில் தப்பித்த பாராசூட்டில், ஒரே ஒருவர் மட்டும் குறி தவறி சுட்டுவிடுகிறார். பாராசூட்டில் ஓட்டை விழுகிறது. ஆனால் ஓட்டை தானாகவே அடைபடும் டெக்னாலஜி இருப்பதால், அவர்களைப் பார்த்து சிரித்தேன். அதற்குள் ஓட்டை தானாகவே மூடிவிட்டது (என்ன சார் பைக் டயர்ல மட்டும் ஓட்டை விழுந்தா தானா அடைச்சுக்கும் டெக்னாலஜி இருக்கலாம்.. பாராசூட்டில் இருக்க கூடாதா?) பின்னணியில் லாலல்லாலாலா சர்வைவா ஒலிக்கிறது... எதிரிகளின் கண்ணில் மண்ணைத்தூவி தப்பித்து வீட்டிற்கு வந்துவிட்டேன். நுழையும்போது துபிஜுக்கு துபிஜுக்கு பிக்பாஸ் என்ற பாடலுக்கு என் மனைவி தேவரஞ்சனி குழந...

YEZDI

Image
YEZDI D250 CLASSIC IND Suzuki வண்டியை விற்ற பிறகு அப்பா வாங்கிவந்த பைக் YEZDI. ரேஷன் கார்டில் பெயர் போடாத ஒரே குறை தான். மற்றபடி Yezdi-யும் கிட்டத்தட்ட குடும்பத்தில் ஒரு ஆள். பழைய படங்களில் ரஜினியையோ கமலையோ தேடிவரும் வில்லன் கூட்டம், கண்டிப்பாக Yezdi-ல் தான் வரும். சமயங்களில் ரஜினி கமலே கூட வருவார்கள். 2 ஸ்ட்ரோக், 250 சிசி திறன் கொண்ட வண்டி. சிறப்பம்சமே கிக்கரும், சைலன்சரும் தான். எனக்கு தெரிந்து இந்தியாவின் முதல் டபுள் சைலன்சர் வண்டி என்று நினைக்கிறேன். எத்தனை பாரம் வைத்தாலும் வறுமைக் குடும்பத்தின் தலைப்பிள்ளை போல அசராது ஓடும். தனியாக கியர் ராடு கிடையாது. பொதுவாக மற்ற வண்டிகளில் இடது பக்கம் கியரும், வலது பக்கம் பிரேக்கும் கிக்கரும் (வண்டியை ஸ்டார்ட் செய்ய) இருக்கும். Yezdi-யை பொறுத்தவரையில், வலது பக்கம் பிரேக் மட்டுமே. இடது புறம் உள்ள இரும்பு ராடை சற்றே உள்ளே அழுத்தி பின்பக்கம் நகர்த்தினால் அதுவே கிக்கர். வண்டி ஸ்டார்ட் ஆன பிறகு மீண்டும் முன்பக்கம் கொண்டுவந்த பிறகு அதுவே கியர். இப்போதிருக்கும் வண்டிகள் போல் ஒரே மிதியில் ஸ்டார்ட் செய்ய முடியாது. கொஞ்சம் பம்பிங் ...

பாகுபலியின் கதறல்

Image
இன்று காலை பெரியவனுக்கு 5 வயதிற்கான தடுப்பூசி போடச் சென்றோம். இதுதான் முதல்முறை ஹெல்த் சென்டரில் (சிறிய அரசு மருத்துவமனை) அவனுக்கு தடுப்பூசி போடுகிறோம். அதனால் 7 மணிக்கே வரச்சொல்லி பதிவு செய்துவிட்டார்கள். நேற்றிரவு தூங்க 12 மணியாகிவிட்டதால் எழுப்பவே பெரும்பாடு பட்டோம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை... கொஞ்சம் தாஜா கொஞ்சம் மிரட்டல் உருட்டல் என்று ஒருவழியாக எழுப்பி பல் தேய்த்து பாலை குடிக்கவைத்து ஹெல்த் சென்டருக்கு கிளம்பினோம். கூப்பிடு தூரம் தான் (அவரவர் சக்திக்கேற்ப சத்தமாக கூப்பிடலாம். யாரை என்பது அவரவர் விருப்பம்). அதனால் நடந்தே சென்றோம். உள்ளே செல்லும்போதே "எதுக்கு இங்க வந்திருக்கோம்" என்ற கேள்வியுடன் ஆரம்பித்தான். பின் சிலபல கேள்விகள். இதற்குள் நேராக தாய் சேய் நல மையத்திற்கு சென்றோம். பதிவு சீட்டை காட்டியவுடன், வெயிட் பண்ணுங்க. கூப்பிடுவோம் என்றார் அங்கு பணிபுரியும் இந்த ஊர் பெண்மணி. சென்றமுறை சிறியவனுக்கு தடுப்பூசி போட வந்திருந்தபோது அந்தப் பெண்மணி யாரோ பக்கத்தில் இருப்பவரிடம் பேசிக்கொண்டே அவன் பெயரையும் கூறி அழைத்திருக்கிறார். இது வெளியில் அமர்ந்திருந...