Posts

குறுந்தாடி

Image
தாடி மீசைக்கும் நமக்கும் ரொம்ப தூரம். வின்னர் படத்தில் வடிவேலு சொல்வது போல், வண்டி "மை"-ல மீசை வரைஞ்சதுக்கே புழுதி-ல விட்டுப் பொரட்டிட்டு இருக்காங்கே கதை தான். ஆனாலும் அவ்வப்போது இருக்கும் கொஞ்சநஞ்ச மீசை தாடியை வைத்து சர்க்கிள் பியர்ட் (குறுந்தாடி) முயற்சிப்பது வழக்கம். கல்லூரி நாட்களில் மீசை வைத்திருந்தேன். முதல் பாஸ்போர்ட்டில் கூட எனக்குப் பிடித்த சிவப்புக் கலர் சட்டையில் எடுத்துக்கொண்ட மீசையுடன் கூடிய போட்டோ-தான் இருக்கும். கல்யாணத்திற்குப் பிறகு மீசை இருந்தால், ஆணவம் ஆணாதிக்கம் போன்ற எண்ணங்கள் தலைதூக்கி, அடி வாங்கினால் கோபப்படவோ  திருப்பி அடிக்கவோ தோன்றும் என்பதாலேயே ட்ரிம் அல்லது ஷேவ் தான். இருக்கும் கொஞ்சநஞ்ச மீசை தாடியாவது ஒழுங்காக வளர்ந்திருந்தால் பரவாயில்லை... சீரான இடைவெளியில் இல்லாமல் ஒரு இடத்தில அடர்த்தியாக, இன்னொரு இடத்தில புதிதாகப் போட்ட மொஸைக் தரை போல இருக்கும்பட்சத்தில் மொத்தமாக இல்லாமலிருப்பதே நலம். மீசை தாடியில் விதவிதமாக அலங்காரம் செய்பவர்களைக் கண்டால் கொஞ்சம் எரிச்சலாக இருக்கும். அதிலும் இந்த No Shave November என்று சொல்லி முகம் முழுக்...

எலி வேட்டை

Image
   The Walk படத்தில், கம்பி/கயிற்றில் நடப்பது போல ஒரு அளப்பரிய சாகசம் செய்து கேபிள் வயர் வழியே கோகுல் வீட்டிற்குள் வந்தது அந்த எலி. ( இது சின்ன பட்ஜெட் படம் என்பதால், கிராபிக்சில் சில பல சித்து வேலைகள் செய்து, பிறகு எலி பாதி தூரம் கடக்கும்போது கீழே விழுவது போல ஒற்றைக் கை/காலில் தொங்கி பிறகு மீண்டும் கயிற்றை பிடித்து நடப்பது போல நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்) அது தானாக வந்ததா, அல்லது தான் ஆபீஸ் ட்ரிப் போவதால் சுதாவுக்கு துணையாக இருக்கட்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலே கோகுல் கொண்டுவந்து விட்டதா என்ற கேள்வி எழாமல் இல்லை. முதல்நாள் கிச்சனில் இருந்த உருளைக்கிழங்கு, வெங்காயம் இவைகளை கொஞ்சம் கடித்து வைத்து, தான் வந்திருப்பதை அடையாளப் படுத்தியது எலி. ஆனால் சுதா ஒன்றும் அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையில் அதுவும் மைலாப்பூரில் வளர்ந்த பெண்ணாயிற்றே.. இந்த மாதிரி சாதாரண எலிக்கெல்லாம் பயப்படுவாரா என்ன என நீங்கள் நினைத்தால், அது கதாசிரியரின் தவறல்ல. இரண்டாம் நாள் பிரிட்ஜ் இருக்கும் அறையில், எலியும் நோக்கினார் சுதாவும் நோக்கினார் ரேஞ்சுக்கு, நேருக்கு நேர் ...

எதிராத்து துளசி

Image
எதிர் வீட்டுக்கு ஸ்ரீராம் மனைவி மக்களுடன் குடித்தனம் வந்திருக்கார். பேருக்கேத்தா போலவே, லவ குசா மாதிரி 2 ஆம்மனாட்டி பசங்க. அவ்வப்போது வீட்டுக்கு வந்து போவார். அவர் வீட்டம்மணியும் எங்காத்து தங்கமணியும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டா. கேக்கவா வேணும்.. இவா லூட்டியில மொத்த பில்டிங்கும் ஏக களேபரம் தான். ஸ்ரீராமன் பேருக்கேத்தா மாதிரி ஏகபத்தினி விரதனா இருப்பார்-னு பாத்தா, அப்பறமாதான் தெரிஞ்சுது அவருக்கு எங்காத்து துளசி மேல ஒரு கண்-னு. துளசி அத்தனை அர்த்தபுஷ்டியா இல்லேன்னாலும், ஓரளவுக்காவது பாக்கற மாதிரிதான். ஒரு சமயம் அவர் துளசியைப் பாக்கறதை நான் பாத்துட்டேன். உடனே ஏதேதோ காரணம் சொல்லிட்டு கிளம்பிட்டார். அன்னிலேர்ந்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அதுக்கு அப்பறம் நான் இருக்கற சமயத்திலே வீட்டுக்கு வர்றதையே அவாய்ட் பண்ணிடுவார். வந்தாலும் 5-10 நிமிஷத்துக்கு மேல இருக்கறதில்லை. இந்த சின்ன சமயத்திலயும் துளசியைப் பாக்க அவர் தவறியதில்லை. அதை நானும் பாக்க தவறியதில்லை. நான் கொஞ்சம் முறைச்சவுடனே புரிஞ்சுண்டு கிளம்பிடுவார். இதை இப்படியே விடக்கூடாது-ன்னு முடிவுபண்ணி, ஒருநாள் எங்காத்து தங்கமண...

ஆண்டவன் ஸ்வாமிகள்

நேற்று காலை வரை அக்ஷதையுடன் அருளாசி வழங்கி உயர்வற உயர்நலம் பாசுரத்திற்கு விளக்கம் கொடுத்த நம் ஆசார்யன், இன்று அந்தி சாய்வதற்குள் அந்த அமரரின் அதிபதியுடன் ஐக்கியமாகிவிட்டார். சிட்டி குரூப்பில் வேலை செய்துவந்த சமயம். ஒரு வார இறுதியில் திருவயிந்திபுரம் நண்பர் ஒருவர், ஆண்டவன் அங்கு எழுந்தருளியிருப்பதாகவும், சேவிக்கப் போகலாமா என்று கேட்டார். மடத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அப்போது நம் சம்பிரதாய விஷயங்களில் அத்தனை பெரிய ஞானம் இல்லாமலிருந்த சமயம் (இப்போதும் மாற்றமில்லை). பைக்கில் சென்னையிலிருந்து திருவயிந்திபுரம் வரை செல்லும் நீண்ட பயணத்திற்காகவே ஒப்புக்கொண்டேன். (குறிப்பு: அம்மா வழியில் ஆண்டவன் சிஷ்யர்கள். மாமாக்கள் எல்லோரும் ஆண்டவனுக்கு நெருக்கம். சின்ன மாமாவின் பெயரை சொன்னால் தெரியும் அளவுக்கு பரிச்சியம் கொண்டவர்கள்) 2 நாட்கள் அவருடனே தங்கியிருந்து தேவநாதனையும் ஆண்டவன் ஸ்வாமிகளையும் திவ்யமாக சேவித்தேன். காலை வந்திருந்த அனைவருக்கும் அருட்ப்ரஸாதம் வழங்கினார். பிறகு ததியாராதனை ஆரம்பமானது. அங்கிருந்த சிலருடன் ஏதோ கேலியாக சிரித்துப் பேசிவிட்டு ஆண்டவன் ஓய்வெடுக்க அறைக்கு...

தரிகெட்டுப் போனேனே...

Image
உள்ளங்கையில் 2 இடங்களில் காயம். வலது முழங்காலில் நல்ல சிராய்ப்பு. அங்கங்கே தசைப்பிடிப்பு. கைகால்களில் வலி. நான் ஏன் இப்படித் தரிகெட்டுப் போனேன்? காரணம் சிட்டி நாராயணனும், கோகுலனும் தான். பெரியவன் குங்பூ வேண்டாம். கிரிக்கெட்தான் பிடிக்கும் என்று சொன்னதிலிருந்து தொடங்கியது எனக்கு போதாத வேளை. வெள்ளிக்கிழமை காலைகளில் நண்பர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். பல நாட்களாக (வருடங்களாக) என்னை அழைத்தும் நான் பாராமுகமாய் இருந்துவிட்டேன். வியாழக்கிழமை பின்னிரவு 6 மணிக்கு (அதாவது வெள்ளி காலை 6 மணிக்கு) விளையாட அழைப்பார்கள். நித்ராதேவி சமேத சொப்பனேஸ்வரர் அருளாசியில் மூழ்கியிருக்கும் வேளையில் விளையாட அழைத்தால் பின்னே என்ன செய்வதாம்.. அதனால்தான் பாராமுகம். அதிலும் நடுவில் கொஞ்சம் காலமாக (ஜஸ்ட் 20 வருடங்கள் மட்டும்) கிரிக்கெட்டுடன் தொடர்பில் இல்லை. மற்றபடி நான் ஒரு ஸ்டார் பிளேயர். 8வது படிக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் விளையாட காலை டிபன் முடித்துவிட்டு களத்திற்கு(கிரவுண்ட்) சென்றேன். மதியம் சாப்பிட வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு சென்றவன், சிக்ஸர் போர் என விளையாட்டு ஆர்வத்தில் மறந்துவ...

கிச்சா / கிச்சாமி / சாமி / கிருஷ்ணஸ்வாமி

ஒரு தசாப்தமும் ஒரு வருடமும் பஹ்ரைனிலும் ஒரு வருடம் துபாய்/மஸ்கட் என மொத்தம் 12 வருடங்கள் வளைகுடா வாழ்க்கை முடித்து கிழக்கு ஆசியாவிற்கு செல்கிறார். பஹ்ரைனில், ரஞ்சனி மாமா என்றழைக்கும் வெகுசிலரில் ஒருவர். எங்களுக்கு அண்ணா / சார் / கிச்சா என தோன்றும் பெயர்களில் எல்லாம் அழைப்போம். பெரும்பாலும் ஒற்றையாய் மட்டுமே சத்சங்கம் வருவதால் அவர் குடும்பம் பற்றி அத்தனை பரிச்சியம் இல்லை. பகவத் ராமானுஜர் நாடகத்தின் வாயிலாகத்தான் அவர் மகன் ஆதித்யாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கராத்தே பயின்றதால் உடல்நலத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கும் பையன். என்ன சாப்பிடுகிறோம் அதில் எவ்வளவு எண்ணெய் இருக்கிறது எவ்வளவு கார்போஹைட்ரேட் என பார்த்து பார்த்து சாப்பிடும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பான். மற்றபடி பரமசாது.. அப்பாவைப் போலவே.. கல்லூரி சேர்ந்தாகிவிட்டதால் அவனும் அம்மாவும் இப்போது சென்னைவாசிகள். நானும் சிட்டி நாராயணனும் சேர்ந்திருக்கும் சமயத்தில் மாட்டினால் கண்ணீர்விடும்வரை கலாய்ப்போம். நரசிம்மன் அண்ணா கத்தார் போனபிறகு பெரும்பாலும் கிச்சா சார் தான் மாட்டுவார். ஏதாவது சொல்லி சமாளிப்ப...

பொய்யாமொழி கயல்விழி - காதல் கதை

Image
காதல் - கல்லூரிக் காலங்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் கடந்து வந்திருப்போம் இந்தக் "காதலை".. இளங்கலை (UG) கல்லூரிக் காலம் தான் எத்தனை இனிமையானது.. முதல் பருவத்தின்போது அந்நியனாக பார்த்த முகங்கள் பிறகு நண்பர்களாவதும், மூன்றாம் அல்லது நான்காம் பருவத்தில் சண்டையிடுவதும், கடைசி பருவத்தில் நிகழும் Farewell நாளின்போது எல்லாரும் கட்டிப்பிடித்து கதறியழுவது என டெம்பிளேட் கல்லூரி வாழ்க்கை. நடுவே சிலபல களேபரங்கள். அதில் சிலர் வில்லனாவதுண்டு (பெரும்பாலும் ப்ரொபஸர்கள்). சிலர் ஹீரோவாவது உண்டு. ப்ரொபஸர் வில்லன் ஆனாலும் ஹீரோ ஆனாலும் அந்த பேட்ச் மாணவர்கள் கோர்ஸ் முடித்து செல்லும்வரையில் அவர் வில்லன்/ஹீரோ தான். ஆனால் கல்லூரி முடித்து வெளியே வந்தபிறகு எல்லா ப்ரொபஸர்களுமே மாணவர்களுக்கு ஹீரோ தான். படிப்பு முடித்து வெளியேறிய பிறகுதான் அவர்களிடம் அந்த இறுக்கம் குறைந்து மாணவர்களால் அவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு களேபரத்தின்போது சக மாணவன் "பொய்யாமொழியை (காரணப்பெயர்) அடிச்சுட்டாய்ங்க டா" எனக் கத்திக்கொண்டே வகுப்பிற்குள் நுழைய, நண்பர்கள் அனைவரும் ஆவேசமாய் ...