Posts

ஆயிரத்தில் ஒருவன்(ர்) ரவிக்குமார்

Image
ரவிக்குமார் எனும் கொடுங்கோலன்... இது தான் நான் இந்தக் கதைக்கு முதலில் யோசித்த தலைப்பு. ஏன் என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள். அன்று: நான் PMP படிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். சுந்தரராஜன் சார் மூலமாக இங்கே பஹ்ரைனில் இருக்கும் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். சவுதியிலிருந்து ஒரு ஆசான் (mentor) வந்து வகுப்புகள் நடத்தினார். 5 வெள்ளிக்கிழமைகள்.. ஒவ்வொரு வெள்ளியும் 6-7 மணி நேரம்.. மொத்தம் 35 மணி நேர வகுப்புகள். வகுப்புகள் முடிந்தது. ஒரு மாதிரி குன்ஸாக இது தான் PMP என்று ஒரு அர்த்தம் செய்துகொண்டிருந்தேன். பரீட்சை எழுதுவது பற்றி முடிவு செய்திருக்கவில்லை. சர்டிபிகேட் வாங்கினால் இங்கே வேலைக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று பார்த்து, அத்தனை சிறப்பாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றறிந்து பரீட்சை எழுதுவதை அப்போதைக்கு ஒத்தி வைத்தேன். (சில நாட்களுக்கு முன், செப்டம்பர் மாதத்தில்): நானும் கோசகனும் வாக்கிங் போகும்போது (என்னுடைய LinkedIn பக்கத்தைப் பார்த்த பிறகு), "ஜி.. நீங்களும் PMP கோர்ஸ் மட்டும் முடிச்சுட்டு பரீட்சை எழுதலை போல" என்று ஆரம்பித்தார். நானும் கோர்ஸ் மட்...

கொமௌனா Thunder Thoughts...

Image
தலைப்பைப் படித்தவுடன் லங்கோட்டின் தமிழ் பதத்தை நினைத்துக்கொண்டவர்கள் தாமாகவே மேடைக்கு வரவும். தவறினால், இன்றிரவிற்கு(ம்) தன் கையாலேயே பிடிக்காத உப்புமாவை கிண்டி சாப்பிடக்கடவது. கொரோனா தெரியும்.. அதென்ன கொமௌனா?? அதாவது கொரோனா + மௌனம் = கொமௌனா. லாக்டௌன்/வொர்க் பிரம் ஹோம் சமயத்தில் ரங்கமணிகள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளே, தற்போது கொமௌனா எனும் தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. அதிலிருந்து சில ஹைலைட் தகவல்கள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது. வீட்டைப் பெருக்கும்போது முன்னோக்கி பெருகிக்கொண்டே செல்லவேண்டும், மாப் போட்டு துடைக்கும்போது பின்னோக்கி துடைத்துக்கொண்டே செல்லவேண்டும் என்ற பரபரப்பாக பரவிவரும் அந்த Thunder Thought சிந்தனை, இந்தப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே. WFH (Work from home) ரங்கமணிகள் ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்காமல் இருப்பது நலம். நம்மில் பலர் ஆபிஸிலும் கூட RWM (Relaxed work mode)-ல் தான் இருப்போம் என்பது உள்ளிட்ட விஷயங்கள் அனைவருக்கும் தெரியவரும் அந்த தருணத்தில், ஆபீஸ் வேலை குறைந்து வீட்டு வேலை அதிகரிக்கும். மேனேஜர் இல்லாத குறையை தங்கமணி கண்டிப்பாக போக்குவார். ...

என்னை நோக்கிப் பாயும்... பைரவர்

Image
கிராமங்களில் நாய்கள் சர்வ சாதாரணம். வீட்டிற்கு ஒன்று இருக்கும். அல்லது வீதிக்கு இரண்டோ மூன்றோ. அவ்வப்போது வீதியில் யாரேனும் சோறு இடுவார்கள். அந்த வீதிக்கு காவல் அந்த பைரவ/பைரவிகள். எங்கள் வீட்டிலும் கூட நாய் வளர்த்தோம். நான் பிறக்கும் சமயம் வரையில் அதற்கு முன்பும் குறைந்தபட்சம் 10 மாடுகள், 2-3 நாய்கள் இருக்குமாம். எனக்கு விபரம் தெரிந்த பிறகு 1-2 மாடுகள், அவ்வப்போது 1 நாய் என்றானது. ------------------------   நானும் தங்கமணியும் வாக்கிங் போவதுண்டு. இளையவனின் கண்ணில் படாமல், சாவியை எடுத்து கதவு திறக்கும் சத்தம் கூட வராமல், வீட்டை விட்டு ஓடிப்போய்... நடப்போம். அவன் பார்த்துவிட்டால் அவ்வளவு தான். தானும் வாக்கிங் வருவேன் என்று அழுது புரண்டு அடம்பிடிப்பான். சில சமயம் சாக்ஸும் ஷூவுமாக அவனிடம் மாட்டிக்கொள்வோம். அழுவான்.. பெற்ற மனம் பித்து. அழுகையைப் பார்க்கமாட்டாமல் அவனையும் சாக்ஸும் காலுமாக கிளப்புவோம். அப்பறம் எங்க வாக்கிங்.. நான் MBBS படிக்கறேன். நீ வயசான ஆளு.. எம்பி எம்பி BS படி என்று வசூல்ராஜாவில் சொல்வது போல நான் கொஞ்ச நேரமும், தங்கமணி கொஞ்சநேரமும் அவன் கையைப் பிடித்து...

காற்றலை

Image
சிறுவயதில் பட்டம் விட்டு விளையாடும் சிறுவர்கள் மத்தியில் அஷோக் 4 பட்டங்களை இணைத்து பறக்கவிட்டு ஒரு நூலை இழுப்பதன் மூலம் திசையெல்லாம் மாற்றிப் பறக்கச் செய்து கெத்து காட்டுவான். சாதாரண பேப்பர் மடித்து செய்யும் ராக்கெட்டையே வித்யாசமாக செய்து அதில் ஒரு ரோஜாப்பூவோடு பறக்கவைத்து +1 படிக்கும்போது ஒரு பெண்ணிற்கு ப்ரொபோஸ் செய்தான். அசந்துவிட்டாள். அவளுக்கும் இவன் மீது ஒரு கடைக்கண் க்ரஷ் இருந்தது. உடனே காதலை ஏற்றுக்கொண்டாள். ஆனால் அவளை விடவும் எதையாவது பறக்கவைப்பதில் அலாதி ஈடுபாடு அஷோக்கிற்கு. இவனைவிட்டு அவள் பறந்துவிட்டாள். இவனுடன் பள்ளியில் படித்த ரோஹித்தின் தாத்தா திடீரென யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து விடுவாராம். வீட்டில் இருக்கும் பொருளையெல்லாம் இடம் மாற்றி வைப்பாராம். சிறிது நேரத்தில் மீண்டும் கண்ணுக்கு தெரிவாராம். இந்தக் கதையை கேட்டு இவன் சிரித்து வயிறு வலித்து ஆனாலும் அடக்க முடியாமல் சிரித்தான். "டேய் ரோஹித்.. யார்கிட்ட கதை விடுற.. இவங்க தாத்தா மறைவாராம்.. வீட்ல சாமானை எடுத்து இடம் மாத்தி வைப்பாராம்.. திரும்பவும் கண்ணுக்கு தெரிவாராம்.. போடா டேய்.. யாரவது LK...

தீபாவளி

Image
தீபாவளி... தலை தீபாவளி கடந்து சில பல வருஷங்களானாலும் கூட இன்னும் மனசுல பசுமையா நிக்கிறது என்னவோ நம்ம சின்ன வயசு தீபாவளி தான். புதுத்துணி எடுக்க முடிவு செய்யறதுல ஆரம்பிக்கற தீபாவளி, தீபாவளியன்னிக்கு பட்டாசு அட்டைப் பெட்டி குப்பைகளை மொத்தமா கொளுத்தறதுல முடியும். மிச்சம் மீதி பட்டாசை எங்கம்மா எடுத்து ஒளிச்சு வெச்சிருந்தா, எப்போவாவது கார்த்திகை-ல முடியும். புதுத்துணி-ன உடனே ஏதோ கலர் கலரா துணி வாங்கப்போறோம்-னு நாம ஒரு கணக்குப்போட்டு வெச்சிருப்போம். ஆனா ஸ்கூல் யூனிஃபார்ம் தான் பல தீபாவளிகளுக்கு புதுத்துணியா கிடைச்சிருக்கு. சமயத்துல எக்ஸ்ட்ராவா ஒரு கலர் சட்டை கிடைக்கும். அந்த தீபாவளியெல்லாம் அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதுவும் நாம கேக்கற பட்டாசெல்லாம் வாங்கி கொடுத்துட்டா, அவ்வளவு தான். கைலயே புடிக்க முடியாது. அப்போல்லாம் பட்டாசு கிப்ட் பாக்ஸ் இல்லாத சமயம். நாமளே பாத்து பாத்து பட்டாசு வாங்கலாம். நம்ம டேஸ்டுக்கு (என்ன பட்டாசை நக்கிப் பாத்தா வாங்குவ-ன்னு கேக்கறவன் வீட்டுக்குள்ள, தெரு பயலுக எல்லாரும் ராக்கெட் விடுவான்) தகுந்தமாதிரி மத்தாப்பு கம்மியாவும், வெடிக்கற பட்டாசு அத...

Thought Process & சமாளிஃபிகேஷன்

Image
இந்த ரெண்டுமே பெண்களின் கவச குண்டலம் போல பிறக்கும்போதே default ஆக அவர்களிடம் இருக்கும் சிறப்புகள். நேத்திக்கு 2 பெண் குழந்தைகள் முறையே 9 வயசு (4ம் கிளாஸ்), 7 வயசு (1ம் கிளாஸ்). வண்டில பின் சீட்ல உக்காந்து பேசிட்டு வந்தாங்க. எங்கே எப்போது ஆரம்பிச்சது-னு தெரியலை. நான் தற்செயலா அதை கேட்டு மிரண்டுட்டேன்.. குழந்தை-லேயே அவங்க சிந்திக்கும் திறனும், சமாளிக்கும் திறனும் பாத்து அப்படியே மெர்சலாயிட்டேன். அவங்க ஏதேதோ பேசிட்டு வந்தாங்க.. சிக்னலில் நின்றபோது நான் கேட்டது மட்டும்.. 7 வயசு குழந்தை: நான் இந்த வருஷம் 1st ஸ்டாண்டர்ட் பாஸ் பண்ணி, என்னை ஸ்பெஷல் ப்ரோமோஷன் பண்ணி, 10th ஸ்டாண்டர்ட்-க்கு அனுப்பிடுவாங்க தெரியுமா.. 9 வயசு குழந்தை: (வயசோ கம்மி.. ஆனா தன்னை மிஞ்சி இவ எப்படிப் போகலாம்/போக முடியும்-ங்கற எண்ணத்தில் அவளை மடக்க நினைத்து) ஓஹோ.. 10th ஸ்டாண்டர்ட் போயிடுவியா நீயி.. அப்போ சரி. Geography ஸ்பெல்லிங் சொல்லு.. உனக்கு சொல்லிக் குடுத்திருப்பங்களே... கரெக்ட்டா சொன்னாத்தான் 10th ஸ்டாண்டர்ட் போக முடியும்.. நான் கூட, சொல்றதுக்கு கொஞ்ச நேரம் எடுத்துக்குவா என்று நினைத்து முடிப்...

விக்ரம் வேதா(ளம்)

Image
அவர் பெயர் முருகனடிமை. அசந்தர்ப்பமான சமயங்களில் (கொட்டாவி விடுவது மாதிரி) நம்மையும் மறந்து அப்பா, அம்மா, கடவுளே.. என்று சொல்லுவோம். இவர் அப்படி சொல்லும் வார்த்தை - முருகா. மதுரை பூர்வீகம் என்பதாலோ என்னவோ கொஞ்சம் கள்ளழகரின் காற்று பட்டு, சமயங்களில் வீர வைணவராகவும் இருப்பார். ஆனால் உள்ளுக்குள் எப்போதும் முருகனடிமையே. மற்றபடி தானுண்டு வேலையுண்டு என்று இருப்பவர். ஆனால் பாவம், நித்யகண்டம் பூர்ணாயுசு என்பது போலத்தான் வாழ்க்கை. பிரச்சனைகளைப் போர்வையாகப் போர்த்திக்கொண்டும், பயத்தையே பசிக்கு உணவாகவும் சாப்பிட்டும் காலம் கடத்துபவர். ஒரு சமயம் ஒரு இடத்திற்குப் போக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தப்பறம், இப்படியெல்லாம் நேரா போகவேண்டிய இடத்துக்கு டயத்துக்குப் போயிட்டா நம்ம மானம் மருவாதை என்னாகிறது-னு நினைச்சு, வேற பஸ்ஸில ஏறி சம்பந்தமே இல்லாத இடத்துக்குப் போயி, அதுக்குள்ள எல்லாரும் எங்க இருக்கீங்க எப்போ வருவீங்க-ன்னு 7-8 தடவை போன் பண்ணி சுமாரா ஒன்னரை மணிநேரம் லேட்டா போனதுக்கு அப்பறம்தான் இவருக்கு நிம்மதியா தூக்கமே வந்துச்சு. இது சும்மா சாம்பிள் தான்.. இவர் போகும் இடத்திற்கு பிரச்சனை வருமா, அ...