Posts

விருந்தோம்பல் வித் பெருங்கும்பல் - 3

Image
அந்த அவர் (!?) நேரமாவதைப் பார்த்துவிட்டு, welcome drink பண்ணப் புறப்பட்டார். அரைத்த புதினா, கொஞ்சம் உப்பு மற்றும் சில பல பொருட்கள் (secret ingredients) சேர்த்து ஸ்ப்ரைட்டில் கலந்தால், மசாலா ஸ்ப்ரைட் ரெடி. அது என்ன ரகசிய ரெசிபி என்று தானே யோசிக்கிறீங்க... சொல்லமாட்டேன்.. அது தொழில் ரகசியம். இன்னொரு ரகசியம் சொல்லட்டுமா.. பேர் தான் மசாலா ஸ்ப்ரைட்டே தவிர, கலந்தது என்னவோ 7UP வைத்து தான். இதற்குள் வெரைட்டி ரைஸ் அயிட்டங்கள் ரெடியாகிவிட்டன. சரி.. எல்லாத்துலயும் டெஸ்ட்-க்கு கொஞ்சம் டேஸ்ட் பண்ணுவோமே என்று ஆரம்பித்தோம். அனைத்து அயிட்டங்களை அடிப்பொலி. வெஜிடபிள் ரைஸ் மட்டும் கொஞ்சம் காரம் தூக்கலாக இருந்தது. சாப்பிட்டதும் கண்ணில் தண்ணி வந்துவிடும் அளவுக்கு மட்டுமே காரம். மத்தபடி நாக்கை கழட்டி ஏஸி-க்கு அடியில் அரைமணி நேரம் ஆறப்போடும் அளவுக்கு ஜாஸ்தி இல்லை...   முறைமாமன் படத்தில் கவுண்டமணி ஜெயராம் சமையலில் குஷ்புவும் மனோரமாவுக்கு சேர்ந்து உப்பையும் மிளகாய்ப்பொடியையும் மானாவாரியாக அள்ளித்தெளித்து கலந்துவிடுவது போல, ஏதோ சதி நடந்திருக்கலாம் என சந்தேகம் இருக்கு... ம்ம்ம்.. ஒரு பஞ்சாயத்தைக் கூட்டிட வேண...

விருந்தோம்பல் வித் பெருங்கும்பல் - 2

Image
எதையுமே பிளான் பண்ணிப் பண்ணணும் என்று ஞானி வடிவேலர் சொன்னாலும் சொன்னார்.. எங்கே போனாலும் அதே பல்லவி தான். அப்படியான ஒரு பிளானோடு வந்திருந்தார் MTSMT ( விரிவாக்கம் முந்தைய பதிவில்) லக்ஷ்மி நரசிம்மன். சரியாக 5.55 மணிக்கு வந்தார் என சொல்லியிருந்தேனே.. வந்தவர், மேரா ஓனர் தங்கமணியிடம் உரிமையாக காபி போடச்சொல்லி கேட்டார். நானே இதுவரைக்கும் இத்தனை வருடங்களில் அப்படியெல்லாம் உரிமை எடுத்துக்கொண்டு வேலை வாங்கியதில்லை (@!??) சரி போகட்டும்.. காபி சாப்பிட்டு முடித்ததுமே, "பிரசன்னா, மொதல்ல அப்பளத்தைப் பொரிச்சுடலாம்-பா. பொரிச்சு கவர்-ல போட்டு ஓரமா வெச்சுட்டா, ஒரு வேலை முடிஞ்சிடும்" என்றார். "காலங்காத்தால 6 மணிக்கு அப்பளம் பொரிக்க ஆரம்பிச்சா, மத்த வேலை எல்லாம் எப்போ ஆரம்பிக்கறது" என்று கேட்டதும், சுடுங்-காபி சாப்பிட்டதாலோ என்னவோ கடுங்கோபத்துடன் எழுந்தவர், பரபரப்புடன் வடைக்கு வாழைப்பூவை உரிக்க ஆரம்பித்துவிட்டார். ஒவ்வொரு அயிட்டமாக ரெடியாக ஆரம்பித்தது. கிச்சனில் கூட்டமும் கூடியது. கைப் பக்குவத்திற்கு சாம்பிள் காட்ட சாவகாசமாக (அட.. அதாங்க.. 9 மணி ஆபீசுக்கு 10 மணிக்கே!!?? வந்து அட்டண்...

விருந்தோம்பல் வித் பெருங்கும்பல்

Image
30 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் பஹ்ரைன் திவ்யப்ரபந்த சத்சங்கத்தில் இது போன்றதொரு சம்பவம் இதற்கு முன்னர் நிகழ்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இனிமேலும் நடக்குமா என்று தெரியவில்லை. அதற்கும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இனிமேல் நடக்க வாய்ப்பில்லை என்று எப்படி சொல்ல முடியும் என்று கேட்டால், இவ்வளவு சிறப்பாக (🤔!!???) இந்த மாதிரியான சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. PMP அதாவது project management-ல் ஒவ்வொரு project-ம் தனித்துவமானது என்று குறிப்பிடுவதுண்டு. அதாவது, ஒரே மாதிரியான இரண்டு project-கள் நடந்தாலும் தேதி, நேரம், இடம், வேலை செய்யும் ஆட்கள் என்பது மாதிரி பல பல விஷயங்களால் மாறுபாடு உண்டாகி வேறுபாட்டில் வேறாகி கூறுபட்டு கூறாகி வந்து நிற்கும் என PMP -யில் படித்த ஞாபகம்.. அப்படி என்னடா நடந்துச்சு என்று நீங்கள் காண்டாகி கழுத்தைப் பிடிப்பதற்கு முன் சொல்லிடறேன்.. இத்தனை வருஷங்களா, வாரம் தவறாம நடக்கற ப்ரபந்தம் கிளாஸுக்கும் சரி, ஆழ்வார் ஆசார்யன் திருநக்ஷத்ரம், ஏகதின நாலாயிரம், சுந்தரகாண்டம், பாகவதம்-னு பெரிய அளவுல நடக்கற வைபவங்களா இருந்தாலும் சரி, ப்ரஸாதம் பண...

உணவுத் தீவிரவாதம்

Image
டாக்டர் கணேஷ் மற்றும் குழுவினர் இறை இசை பயணத்திற்காக பஹ்ரைன் வந்திருந்த பொழுது அறிமுகம் செய்த பதம் இது - "உணவுத் தீவிரவாதம்". பஹ்ரைன் மற்றும் துபாயில் அவருடைய குழுவினர் எதிர்கொண்ட விருந்தோம்பல் குறித்து மகிழ்ச்சியுடன் கூறுகையில் இந்தப் பதம் அறிமுகமானது. ரஞ்சனியும் குழந்தைகளும் இந்தியாவுக்கு சென்ற அந்த தினம் தொடங்கி இன்றுவரை, ஒரு வேளை கூட பசித்து உண்ணவில்லை.  இங்கிருக்கும் உணவுத் தீவிரவாத தலைவர்கள் எனக்கு பசி ஏற்பட விட்டிருக்கவில்லை என்பதே நிதர்சனம். முதல் நாள் ஸ்வாதி ஸ்ரீராமின் கைவண்ணத்தில் வயிறு நிரம்பியது. அடுத்தடுத்த நாட்களில் விஜி ஸ்ரீராம், ரஞ்சனி கோசகனின் அம்மா (இனி ரகோ-அம்மா) என பலரும் எனது வாயையும் வயிற்றையும் அட்வான்ஸ் புக்கிங் செய்து கொண்டனர் என்பதே உண்மை. தினமும் கழுத்துவரை உணவைக் கொடுக்கும் அவர்கள், ஏகாதசியன்று மட்டும் கொஞ்சம் இரக்க மனதுடன் வயிற்று அளவு மட்டும் உணவு குடுத்து என் வயிற்றில் பாலை வார்த்தனர். ஆனால் அதற்கும் சேர்த்து மறுநாள் துவாதசி அன்று மீண்டும் கலவரம் ஆரம்பமாயிற்று. மோர்க்குழம்பு, சாத்தமுது (ரசம்), பருப்பு உசிலி, சாதம், என ஐந்தடுக்கு டிபன...

நடையா இது நடையா

Image
"உதிப்பன உத்தமர் சிந்தையுள்" என்பது போலே, இப்படியொரு சிந்தனை உதித்தது எந்த உத்தமர் சிந்தையிலோ?? என்ன சிந்தனையா... சொல்றேன். அதுக்கு முன்னாடி, இந்தப் பாசுரத்தோட 2வது அடியை  படிச்சுடுங்க. "ஒன்னலர் நெஞ்சமஞ்சிக் கொதித்திட * மாறி நடப்பன". இப்போ அடிமேல் அடி வெச்சு நடந்து போய் அந்த உத்தமர் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?   அஷோக்... இந்த நாள் உன்னோட காலண்டரில் குறிச்சு வெச்சுக்கோ. நீ எப்படி என் வீட்டை இடிச்சு... (மானே தேனே பொன்மானே) நடுத்தெருவுல நிக்க வெச்சியோ, அதே மாதிரி உன்னையும் ஒருநாள் நடுத்தெருவுல நிக்க வெக்கல, என் பேர் அண்ணாமலை இல்லேடா... என்று ரஜினி சொன்ன டயலாக்கை யார் மீதோ இருக்கும் கடுப்பில், மொத்த பில்டிங்கையும் பார்த்து சொன்னது மட்டுமில்லாமல், நடுத்தெருவில் நிறுத்தியும் விட்ட அந்த மனிதருள் மாணிக்கம்... யாருன்னு தெரிஞ்சா, எனக்கும் சொல்லுங்க.   இந்த வருட சத்சங்க விளையாட்டுகளில் நடைப்பயிற்சியும் இருப்பதாக அறிவித்தனர். அறிவிப்பாளர்களே அசந்துபோகும்படி, அனைவரும் அளித்த அபாரமான பங்களிப்பு... அடேங்கப்பா லெவல். எல்லாரும் 1-2 நாட்கள் நடந்து தோராயமாக 15 முதல் 20 ஆயிரம் ஸ்டெப்கள் ...

இதிலுமா வேகம் சௌந்தர் சார்???

Image
சௌந்தர் சாரும் குடும்பமும் இதற்கு முன்பே பஹ்ரைனில் இருந்திருந்தாலும், இப்போது திரும்பி வந்திருந்த இந்த 2 வருடங்களாகத் தான் எனக்குப் பரிச்சியம். இதற்கு முன் இருந்தபோது, அவருடைய அக்காவும் அவர் குடும்பமும் கூட பஹ்ரைனில் தான், சொந்தமும் நட்பும் புடைசூழ இருந்திருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் பலர் நிரந்தரமாக இந்தியாவுக்கு செல்ல, சௌந்தர் துபாய் சென்று சிலகாலம் கழித்து, அங்கிருந்து இந்தியா சென்றுவிட்டார். 2 வருடங்களுக்கு முன்பு, மீண்டும் துபாயில் வேலை. அங்கு சேர்ந்த சில மாதங்களில், ட்ரான்ஸ்பரில் பஹ்ரைனுக்கு வந்தார்கள். சத்சங்கத்திற்கு வர ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருடனும் பழக ஆரம்பித்தாலும், யாருடனும் அத்தனை நெருக்கம் பாராட்டவில்லை. இன்னும் சில காலத்தில் சத்சங்கத்தில் இருக்கும் குழந்தைகளிடம் சௌந்தர் சாருக்கு கொஞ்சம் ஈடுபாடு உண்டானது. அதிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் அத்தனை பாசமாக விளையாட ஆரம்பித்தார். சுஜாதா மேடமும், வம்சியும் (கவிதார்கிக சிம்மன்) கூட கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தார்கள். வம்சி அவன் வயதிற்கு ஏற்ற நண்பர்கள் சத்சங்கத்தில் யாரும் இல்லையென்றாலும், மற்ற சிறு...

அது ஒரு கொரோனா காலம்

Image
ஆதி மனிதனின் கற்காலம்.. சில பல அரசர்களின் பொற்காலம்.. வரிசையில், எதிர்வரும் ஆண்டுகளில் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் இந்த கொரோனா காலம். அப்படி என்ன விசேஷம் என கேட்பவர்களுக்கு, அப்படி என்ன இல்லையென நாக்குமேல பல்லைப் போட்டு கேட்குமளவுக்கு எச்சகச்ச விசேஷங்கள் இருக்கிறது இந்தக் கொரோனா காலத்தில். கொரோனா தொற்று வராதவர்களுக்கு பல பிரச்சனைகள் என்றால், நோய்த்தொற்று வந்தவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுடன் சேர்த்து இன்னும் ஒரு பிரச்சனை... அவ்வளவே. லாக்-டவுன், சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தம், உள்ளூரில் சிலபல கிலோமீட்டர் சுற்றளவுக்கு மேல் செல்ல தடை, மார்க்கெட் மூடல், டாஸ்மாக் மூடல், ஒர்க் ப்ரம் ஹோம், அதுவும் கணவன் மனைவி இருவருக்கும் ஒர்க் ப்ரம் ஹோம், குழந்தைகளுக்கு ஆன்லைன் ஸ்கூல்.. இதையெல்லாம் தாண்டி கைக்கு க்ளவுஸ்.. முக்கியமாக முகத்துக்கு/மூக்குக்கு மாஸ்க். மாஸ்க் போடுவது என்ன அவ்வளோ பெரிய பிரச்சனையா என்று நினைக்க வேண்டாம். காற்று போகும் அளவுக்கு லூஸாகவும், கொரோனா கிருமி போக முடியாத அளவுக்கு டைட்டாகவும், நாசித் துவாரத்துக்கு குறைந்தது ஒன்னரை இன்ச் மேலே தொடங்கி...