மதுரனந்தபுரம்
கி.பி.2212 நண்பன் கிருஷின் வற்புறுத்தலால் இந்தியா செல்லும் சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தான் மூர். அவர்களது குடும்பம் அமெரிக்காவில் குடியேறி நான்கைந்து தலைமுறைகளைக் கடந்துவிட்டது. தாத்தா என்றால் அத்தனை பிரியம் மூருக்கு. அவர் இறந்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும், இப்போது இந்திய சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தது கூட தாத்தா பாசத்தால் தான். ஒரு தடவையாவது இந்தியாவையும் குறிப்பாக தமிழகத்தையும் தனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர்களையும் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டார். அவரால் ஆசைதான் பட முடிந்ததே தவிர, அதை செயல்படுத்த முடியவில்லை. எனவே அவர் ஆசைப்பட்டு, செல்ல முடியாத ஒரு இடத்திற்கு தான் போகப் போகிறோம் என நினைத்து சந்தோஷப்பட்டான் மூர். பயணத்திற்குத் தேவையானவற்றை எடுத்துவைக்கும்போது தாத்தவுடைய "டூரிஸ்ட் ப்லேசஸ் இன் இண்டியா" புத்தகதையும் எடுத்துக் கொண்டான். லீவ் அப்ரூவாகி, டிக்கெட் புக் செய்து, ஒருவழியாக இந்தியா வந்தே விட்டார்கள் இருவரும். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய அந்த நொடி தாத்தவைத்தான் நினைத்துக் கொண்டான் மூர். வடஇந்தியாவில் பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு டெல்லியில் டெண்ட் அட...