Posts

Showing posts from 2017

நீங்கள் இப்படி செய்திருக்க கூடாது பாஸ்கர்ஜி

தோராயமாக ஒரு மாதம் முன்பு ஒரு நாள் பாஸ்கர்ஜி-இடமிருந்து அழைப்பு வந்தது. ஹமாலா-ல ஒரு ஆத்துல லலிதா கல்யாணம் ஏற்பாடாகியிருக்கு சார். வீடியோ எடுக்கணும். ஆடியோ சிஸ்டம் வேணும், ஸ்பீக்கர், மிக்ஸர், 5 மைக் வேணும் சார் என்றார். பிரபந்தம் ஆடியோ சிஸ்டம் இருக்கு சார். ஆனால் 4 மைக் தான் அதில் கனெக்ட் பண்ண முடியும். கண்டிப்பா 5 மைக் வேணுமா? என்றேன். ஆமாம் சார், 2 பாட்டு, 2 மிருதங்கம், 1 வயலின். கண்டிப்பா 5 வேணும் சார் என்றார். வீடியோ-வுக்கு சிதம்பரம், அவர் மூலமாகவே ஆடியோவும் ஏற்பாடானது. டிசம்பர்  6ம் தேதி மாலை ஜுபாரா சங்கர் வீட்டில் ஆடியோ சிஸ்டம் வந்திறங்கியது. VK எனும் வெங்கடகிருஷ்ணன் தான் ஆடியோ மேற்பார்வைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் (ஆடு நம்பர் 1). அவர் வர தாமதமாகவே நான் சென்று ஆடியோவை செட்டப் செய்தேன். ஆஜானுபாகுவான 2 ஸ்பீக்கர், அதற்கேற்றார் போல் ஸ்டான்ட். 4 அடி நீளம் 8 அடி அகலத்தில் மிக்ஸர், அள்ள அள்ளக்குறையாத அமுதசுரபி போல, வரவர வளரும் வயர்கள்.. என ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவே அங்கிருந்தது. VK வந்து பார்த்தவுடன் மெர்சலாகிவிட்டார். சார்.. இதை எப்படி சார் நான் எல்லா ஆத்துக்கும்

விவே(பபிள்)கம்

Image
டுமீல் டுமீல் (இது சைலன்சர் துப்பாக்கி. அதனால் கொஞ்சம் Husky வாய்ஸில் படிக்கவும்). தேச துரோகிகள் 2 பேரை சுட்டு கொன்றுவிட்டேன். ஆனால் எப்படியோ சத்தம் கேட்டு வெளியில் ஆட்கள் வந்துவிட்டனர். சுமார் 200 பேர் என்னை சுத்துப்போட்டுவிட்டனர். நான் யாருன்னு சொல்லவே இல்லையே... நான் PK. ஓடிவந்து புர்ஜ் கலிஃபாவின் 150வது தலத்தில் இருந்து குதிக்கிறேன். அடுத்த இரண்டாவது செக்கண்டில் பபிள்கம்மில் முட்டை விட்டேன். அதிலிருந்து பாராசூட் விரிகிறது. அத்தனை பேர் சுட்டதில் தப்பித்த பாராசூட்டில், ஒரே ஒருவர் மட்டும் குறி தவறி சுட்டுவிடுகிறார். பாராசூட்டில் ஓட்டை விழுகிறது. ஆனால் ஓட்டை தானாகவே அடைபடும் டெக்னாலஜி இருப்பதால், அவர்களைப் பார்த்து சிரித்தேன். அதற்குள் ஓட்டை தானாகவே மூடிவிட்டது (என்ன சார் பைக் டயர்ல மட்டும் ஓட்டை விழுந்தா தானா அடைச்சுக்கும் டெக்னாலஜி இருக்கலாம்.. பாராசூட்டில் இருக்க கூடாதா?) பின்னணியில் லாலல்லாலாலா சர்வைவா ஒலிக்கிறது... எதிரிகளின் கண்ணில் மண்ணைத்தூவி தப்பித்து வீட்டிற்கு வந்துவிட்டேன். நுழையும்போது துபிஜுக்கு துபிஜுக்கு பிக்பாஸ் என்ற பாடலுக்கு என் மனைவி தேவரஞ்சனி குழந

YEZDI

Image
YEZDI D250 CLASSIC IND Suzuki வண்டியை விற்ற பிறகு அப்பா வாங்கிவந்த பைக் YEZDI. ரேஷன் கார்டில் பெயர் போடாத ஒரே குறை தான். மற்றபடி Yezdi-யும் கிட்டத்தட்ட குடும்பத்தில் ஒரு ஆள். பழைய படங்களில் ரஜினியையோ கமலையோ தேடிவரும் வில்லன் கூட்டம், கண்டிப்பாக Yezdi-ல் தான் வரும். சமயங்களில் ரஜினி கமலே கூட வருவார்கள். 2 ஸ்ட்ரோக், 250 சிசி திறன் கொண்ட வண்டி. சிறப்பம்சமே கிக்கரும், சைலன்சரும் தான். எனக்கு தெரிந்து இந்தியாவின் முதல் டபுள் சைலன்சர் வண்டி என்று நினைக்கிறேன். எத்தனை பாரம் வைத்தாலும் வறுமைக் குடும்பத்தின் தலைப்பிள்ளை போல அசராது ஓடும். தனியாக கியர் ராடு கிடையாது. பொதுவாக மற்ற வண்டிகளில் இடது பக்கம் கியரும், வலது பக்கம் பிரேக்கும் கிக்கரும் (வண்டியை ஸ்டார்ட் செய்ய) இருக்கும். Yezdi-யை பொறுத்தவரையில், வலது பக்கம் பிரேக் மட்டுமே. இடது புறம் உள்ள இரும்பு ராடை சற்றே உள்ளே அழுத்தி பின்பக்கம் நகர்த்தினால் அதுவே கிக்கர். வண்டி ஸ்டார்ட் ஆன பிறகு மீண்டும் முன்பக்கம் கொண்டுவந்த பிறகு அதுவே கியர். இப்போதிருக்கும் வண்டிகள் போல் ஒரே மிதியில் ஸ்டார்ட் செய்ய முடியாது. கொஞ்சம் பம்பிங் செய்

பாகுபலியின் கதறல்

Image
இன்று காலை பெரியவனுக்கு 5 வயதிற்கான தடுப்பூசி போடச் சென்றோம். இதுதான் முதல்முறை ஹெல்த் சென்டரில் (சிறிய அரசு மருத்துவமனை) அவனுக்கு தடுப்பூசி போடுகிறோம். அதனால் 7 மணிக்கே வரச்சொல்லி பதிவு செய்துவிட்டார்கள். நேற்றிரவு தூங்க 12 மணியாகிவிட்டதால் எழுப்பவே பெரும்பாடு பட்டோம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை... கொஞ்சம் தாஜா கொஞ்சம் மிரட்டல் உருட்டல் என்று ஒருவழியாக எழுப்பி பல் தேய்த்து பாலை குடிக்கவைத்து ஹெல்த் சென்டருக்கு கிளம்பினோம். கூப்பிடு தூரம் தான் (அவரவர் சக்திக்கேற்ப சத்தமாக கூப்பிடலாம். யாரை என்பது அவரவர் விருப்பம்). அதனால் நடந்தே சென்றோம். உள்ளே செல்லும்போதே "எதுக்கு இங்க வந்திருக்கோம்" என்ற கேள்வியுடன் ஆரம்பித்தான். பின் சிலபல கேள்விகள். இதற்குள் நேராக தாய் சேய் நல மையத்திற்கு சென்றோம். பதிவு சீட்டை காட்டியவுடன், வெயிட் பண்ணுங்க. கூப்பிடுவோம் என்றார் அங்கு பணிபுரியும் இந்த ஊர் பெண்மணி. சென்றமுறை சிறியவனுக்கு தடுப்பூசி போட வந்திருந்தபோது அந்தப் பெண்மணி யாரோ பக்கத்தில் இருப்பவரிடம் பேசிக்கொண்டே அவன் பெயரையும் கூறி அழைத்திருக்கிறார். இது வெளியில் அமர்ந்திருந

வனவாசம் - 2

Image
அப்போது... "எலேய்" என்று யாரோ சத்தம் போட்டார். எங்களை யார் கூப்பிடப்போகிறார்கள் என்று  நினைத்து, நாங்கள் தொடர்ந்து நடந்தோம். "எலேய்... உங்களத்தாண்டா. நில்லுங்கடா" என்று மீண்டும் கேட்டது. நின்று சுற்றும் முற்றும் பார்த்தோம். பக்கத்தில் இருந்த தோட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் தான் கத்தியிருக்கிறார். அதுவும் எங்களைப் பார்த்து தான். நின்றோம். "யாருடா நீங்க? எங்கடா போறீங்க?" என்று அதட்டலாக கேட்டார். எங்களுக்கு உதறல் எடுத்தது. சீனி ஓடுடா என்று சொல்லி, நானும் ஓடத்தொடங்கினேன், மலையடிவாரத்தை நோக்கி. நாங்கள் ஓடுவதைப் பார்த்து அந்த ஆள் எதிர் திசையில் ஓடினார். வேலியிடப்பட்ட அந்த தோட்டத்தின் நுழைவு பாதை எங்களுக்கு பின்னால்... அதாவது அதைக் கடந்து வந்துவிட்டோம். அந்த ஆள் நுழைவு வரை போய், திரும்பவும் எங்களை தொடர்ந்து வந்து பிடிப்பதற்குள் நிச்சயம் கொஞ்சம் தூரம் ஓடியிருப்போம். ஆனால் கள்ளாட்டம் ஆடிய அந்த ஆள், பாதியிலேயே வேலியை எகிறி குதித்து வந்து எங்களை பிடித்துவிட்டார். "யாருடா நீங்க? எங்கடா போறீங்க?" மீண்டும் அதே கேள்வி. த

வனவாசம்

Image
நானும் சீனியும் வனவாசம் போய் இப்போது 20 வருடங்கள் ஆகியிருக்கும். டார்ஜான் என்று சொல்வது கொஞ்சம் அதிகம் தான். என்றாலும் இந்தியா இரண்டு Bear Grylls-சையோ அல்லது Steve Irwin-னையோ இழந்திருக்கிறது என்பது நிதர்சனம். இதைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தால் கோவில் படத்தில் வரும் வடிவேலு போல உங்களுக்கு மிருகதோஷம் பிடிக்கும். 1997-1998 வருடம். நாங்கள் 8-வது படித்துக்கொண்டிருந்தோம். செல்லத்துரை சார் தான் க்ளாஸ் சார். தவிர அவர் அசிஸ்டன்ட் HM கூட. கொஞ்சம் மெதுவாக சமயங்களில் போரடிக்கும் விதமாக பாடம் நடத்துவார். முன் வரிசை மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தும்போது சாரல் மழை தான். அவரைப் போல் இதுவரை யாரும் தும்மல் போட்டு பார்த்ததில்லை என்பது இங்கு கொசுறு செய்தி. அக் என்று சத்தம் முதலில் வரும். பின்னர் கொஞ்சம் காற்றுடன் மூக்கிலிருந்து ஹூன் என்று சத்தம் வரும். தும்மும் சமயத்தில் முன் வரிசை மாணவர்களுக்கு கண்டிப்பாக குடை தேவைப்படும். அப்போதெல்லாம் நான் கொஞ்சம் கணக்கில் (கணிதத்தில்) வீக். இப்போ மட்டும் என்னவாம் என்று கேட்பவர்களுக்கு ஆதார் அட்டை தொலைந்து போகக் கடவது. சாதாரண க்ளாஸ் டெஸ்ட் தொடங்கி

ஷ்யாம் ஸ்ரீராம்

Image
ஸ்ரீராமும் ஸ்வாதியும் சூப்பர் மார்க்கெட் போயிருந்தார்கள். ஒவ்வொரு மாதமும் மளிகை சாமான் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கவும் போகும் அதே வழக்கமான விசிட் தான்.     மளிகை சாமான்களை முடித்துவிட்டு, காய்கறி பக்கம் வந்தார்கள். ஸ்ரீராம் டிராலியை வைத்துக்கொண்டு நிற்க, ஸ்வாதி காய்கறிகளை எடுக்க சென்றாள். முதலில் கொஞ்சம் காய்கறிகளை எடுத்துக்கொண்டு ஸ்வாதி வரும் வேளையில், வேறொரு பெண்மணி வந்து ஸ்ரீராமின் டிராலியில் கொஞ்சம் சாமான்களை வைத்துவிட்டு வண்டியையும் ஸ்ரீராமையும் ஒரு கணம் ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு சென்றார். யாருங்க அது? தெரியலடி என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண்மணி சென்ற திசையைப் பார்த்தான் ஸ்ரீராம்.   அதெப்படி யாருன்னே தெரியாம வந்து நம்ம டிராலில சாமான் வெப்பாங்க? வெச்சது மட்டுமில்லாம, அப்படியே வெச்ச கண்ணு வாங்காமப் பாக்கறா? சொல்லுங்க.. யாரு அது? என்று கோபமாக கேட்டார். சத்தியமா தெரியாதுடி...   இதற்குள் அந்தப் பெண்மணி கை நிறைய சாமான்களுடன் மீண்டும் வந்தார்.   ஸ்வாதி கோபமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு,   ஷ்யாம், யாரு இவங்க? எதுக்கு உன

குற்றமே தண்டனை

Image
இன்று: அவனும் நண்பரும் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். சைரன் சத்தம் கேட்டது. உடனே காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டான். ஏன் வண்டியை நிறுத்தின? ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேக்குதே.. அதான். அதுக்கு என்ன இப்போ? ஆம்புலன்சுக்கு வழிவிட்டு, வண்டியை ஓரங்கட்டினான். இரண்டு மாதங்களுக்கு முன்: காலையில் எழும்போதே, ச்சே.. இன்னிக்கு வெள்ளிக்கிழமையா.. ஆபீஸ்ல மீட்டிங் வெச்சு உசுர வாங்குவாங்களே என்று அலுத்துக்கொண்டான். காரணமேயில்லாமல் சிணுங்கிக்கொண்டிருந்த 3 வயது மகள், ஸ்கூல் ஐ.டி. கார்டை தேடிக்கொடுக்க சொன்ன 8 வயது மகனிடம், சட்னியில் உப்பு குறைவாகப் போட்ட மனைவி, பேப்பர்காரனை இன்னும் காணுமேடா என்று கேட்ட அப்பா, என எல்லாரிடமும் சிடுசிடு தான் . ஒருவழியாக அறக்கப்பறக்க கிளம்பி அலுவலகம் வந்தான். மீட்டிங்குக்கு தேவையான ரிப்போர்ட் எல்லாம் தயார் செய்தான். வாடா ஒரு தம்மும் காபியும் போடலாம் என்றான் நண்பன். மீட்டிங் இருக்கே டா. மேனேஜர் காட்டுக் கத்து கத்துவான் டா... உனக்கு தெரியும்ல.. டேய் 11 மணிக்கு தான் மீட்டிங். இப்போ மணி 10.40. பத்து நிமிஷத்துல

ஸ்வாமி ராமானுஜர் ஸஹஸ்ராப்தி

Image
2015ல் நாராயணன் சாரும் சுந்தரராஜன் சாரும் லிப்டில் செல்லும்போது சாதாரணமாக, "ராமானுஜர் 1000வது வருஷம் வைபவம் வருது. இந்த வருஷம் ஆரம்பிச்சு 2017 வரைக்கும் 3 வருஷம் நடத்தினா நன்னாயிருக்கும்" என்று நாராயணன் சார் சொல்ல, "அவ்வளவுதானே சார், பண்ணிடலாம்" என்று சுந்தரராஜன் சார் சொல்ல, அதுவே இத்தனை பெரிய வைபவத்திற்கான ஆரம்பப்புள்ளியாக ஆனது. முதல் வருடம் குழந்தைகளை வைத்து ராமானுஜர் நாடகம் நடத்தலாம் என்றும், இரண்டாவது வருடம் பெரியவர்கள் நடிப்பதாகவும், மூன்றாவது வருடம் மீண்டும் குழந்தைகளை வைத்தே நாடகம் அரங்கேற்றி வைபவத்தை முடிக்கலாம் என்றும் முடிவானது. முதல் வருடம் ஏற்பாடுகள் ஆரம்பமாயின. பிரசன்னா கதை எழுதுவார், லக்ஷ்மி நரசிம்மன் டைரக்ட் பண்ணுவார் என்று நாராயணன் சார் சொல்ல, "நானா... அதுவும் ராமானுஜர் கதையா? சார்.. வேற யாரவது எழுதட்டுமே" என்றேன். "உங்களால முடியும்.. எழுதுங்க" என்றார் நாராயணன் சார். இதோ, 3வது வருடத்திற்கும் கதை வசனமெழுதி முடித்தாயிற்று. முதல் வருடம் நிரம்பவே அவகாசம் இருந்தது. குழந்தைகளை தமிழ் பேசவைப்பதே பெரிய விஷயமாக இருந

கார்

Image
கோகுல் புதிய கார் புக் செய்த அன்றிலிருந்தே ஏதோ ஒன்று சரியாக இல்லாதது போல் உணர்ந்தான். லோன் அப்ரூவ் ஆகுமோ ஆகாதோ என்ற சந்தேகத்தால் அட்வான்ஸ் கட்டவில்லை. அட்வான்ஸ் கட்டலாம் என்று வந்தபோது இவன் செலக்ட் செய்த வண்டியை வேறு யாரோ ரிசர்வ் செய்திருந்தனர். இரண்டு வாரகாலம் போனது. ஆனால் இவன் கேட்ட கலர் கிடைக்கவில்லை. பேசாமல் வண்டியே வேண்டாம் கேன்சல் பண்ணிவிடலாம் என்ற மனநிலையில் இருந்தபோது இவன் ஏற்கனவே செலக்ட் செய்திருந்த கலர் வண்டி உள்ளது என தகவல் வந்தது. கோகுல் உடனே ஷோரூம் விரைந்தான். சார், ஏற்கனவே அட்வான்ஸ் பே பண்ணினவர் இந்த வண்டி வேண்டாம்னு சொல்லிட்டார். நீங்களும் இதே வண்டி கேட்டிருந்ததால முதல்ல உங்களுக்கு கால் பண்ணோம். ரெண்டு மூணு கஸ்டமர் இதே வண்டிக்காக வெயிட்டிங் சார். வேற யாராவது பே பண்றதுக்குள்ள நீங்க அட்வான்ஸ் பே பண்ணிட்டா உங்களுக்கு ரிசர்வ் பண்ணிடலாம். ஐ ஸீ... நான் இப்பவே அட்வான்ஸ் பே பண்றேன். லோன் அப்ரூவ் பண்ணிட்டாங்க. ப்ராசஸிங் கிட்டத்தட்ட கம்ப்ளீட் ஆயிடுச்சு. ரெண்டு மூணு நாள்ல பணம் வந்திடும். ஓகே சார். நீங்க பே பண்ணிட்டு ரெசிப்ட் காபி குடுத்தீங்கன்னா, நான் மத்த

குமார்ஜியும் கீதோபதேசமும்

Image
Dear Sri Kumar-ji pranams. Please accept my apologies for writing this in Tamil, as I’m not as proficient as you in English. Hope Srini sir or anyone from Sahasranamam sathsangh would translate it to you. இன்று ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் அவர்கள் இல்லதில் நடைபெற்ற ஸஹஸ்ரநாமம் நிகழ்வில் கலந்துகொள்ள சென்றிருந்தேன். ஸ்ரீ குமார்ஜி பஹ்ரைனிலிருந்து பிரியாவிடை பெற்று செல்வதால் அவருக்கு திவ்ய ப்ரபந்த ஸத்சங்கத்தின் சார்பில் ஒரு சிறிய அன்பளிப்பையும்   கொடுப்பதற்காக சென்றிருந்(தோம்)தேன். முதலில் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பிறகு வரிசையாக சில பல ஸ்தோத்திரங்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அத்தனை அழகாக ஸ்லோகங்களையும் நாம ராமாயணத்தையும் சொல்வதாகட்டும்.. அதுவும் பார்க்காமல் .. அற்புதம். நானெல்லாம் பார்த்துப் படித்தாலே ஸஹஸ்ரநாமத்தில் இல்லாத நாமங்களை எல்லாம் நீங்கள் கேட்கலாம். குழந்தைப் பருவத்தில் இத்தனை விஷயங்களை கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அது அதுக்கு ஒரு நேரம் வரவேண்டுமே. அந்த வகையில் நிச்சயம் அந்தக் குழந்தைகள் புண்யாத்மாக்கள். கீதையின் 13வது அத்தியாயம்

தூக்கு தண்டனை

Image
என்ன பாஸ்கரு.. ரெண்டு நாள்ல தூக்கு. ஆனா ரொம்ப குஷியா இருக்கியேப்பா. வருத்தமே இல்லையா? எதுக்குண்ணே வருத்தப்படணும்? அந்த ரவி பெரிய நல்லவனாட்டம் போலீஸோட சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு என்னை ஜெயில்ல போட்டான்... நான் பெயில்ல வந்து அவனைப் போட்டேன். ஆசை தீர வெட்டினேன். சும்மா ரத்தம் தெரிச்சுது பாரு... சுத்தி இருந்தவனெல்லாம் தெறிச்சு ஓடிட்டான். எனக்கு தூக்குன்னு தேதி தான் குறிச்சிருக்காங்க. ஆனா இன்னும் தூக்குல போடலல்ல.. என்ன நடக்குதுன்னு பாரு. பாஸ்கரு ஏதோ பிளான் வெச்சிருக்க போல.. ஆமா. பிளான் இருக்கு. வொர்கவுட் ஆகுமா தெரியல. ஆனா வொர்க் ஆச்சுன்னா அப்பறம் இந்த பாஸ்கரோட லெவலே வேற.. அப்படி என்ன பிளான் பாஸ்கரு? இருண்ணே. நாளன்னிக்கு நீயே தெரிஞ்சுக்குவ.. நீ எஸ்கேப் ஆனா, இந்த அண்ணனை மறந்திராத பாஸ்கரு. உன்னைப் போயி மறப்பேனா.. நான் வெளில போனதும், மொதல் வேலை, உன்னை வெளில கொண்டுவர்றது தான். தூக்கு தண்டனை நாளும் வந்தது. பாஸ்கர், உங்க கடைசி ஆசை என்ன? ஐயா, அடுத்த மாசம் நடக்கப்போற தேர்தல்ல எங்க தொகுதியில நான் வேட்பாளரா நிக்கணும். அவ்வளவு தான். அதுக்கு வாய்ப்பில்லை.

கேமரா

Image
என்ன சதீஷ் எப்போதான் புது கேமரா வாங்கப்போற? வாங்கலாம் ப்ரோ.. நல்ல ஆபருக்கு நாலு வருஷம் வெயிட் பண்ணாலும் தப்பில்லைன்னு ஒரு படத்துல ஆண்டவரே சொல்லியிருக்காரு.. அந்த நாளும் வந்தது. ப்ரோ, ஒரு ஆபர் போட்டிருக்கான். நிக்கான் SLR 3300 கேமரா + பேஸிக் லென்ஸ் சேர்த்து பதினேழாயிரம் ருபாய். நல்ல ஆபர் மாதிரி இருக்கு. கேமரா எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க. நல்ல கேமரா-ன்னா வாங்கிடலாம். சதீஷ், எண்ட்ரி லெவலுக்கு இந்த கேமரா ஓகே தான். நல்ல ஆபர். சூப்பர் ப்ரோ. இன்னிக்கே வாங்கறோம். க்ளிக்கறோம், பேஸ்புக்-ல Satty Clicks-ன்னு ஒரு போட்டோகிராபி பேஜ் கிரியேட் பண்றோம், கலக்கறோம். எல்லாம் ஓகே. அதென்னய்யா பேரு சட்டி க்ளிக்ஸ்-ன்னு? ப்ரோ, அது சட்டி இல்ல. சேட்டி க்ளிக்ஸ். சதீஷோட ஷார்ட் பார்ம் ப்ரோ. ஓஹோ.. அப்போ சரி அப்போ சரி.. கேமரா வாங்கியாயிற்று. என்ன சதீஷ், கேமரா வாங்கின அன்னிலேருந்து பையை விட்டே வெளியில எடுக்கல போல? பூஜை ரூம்ல சாமி படத்துக்கு சேர்த்து கேமராவுக்கு சூடம் பத்தி காட்டறீங்கன்னு கேள்விப்பட்டேன்... அப்படிலாம் இல்ல ப்ரோ. கேமரால ஒன்னும் புரியல. நிறையா ஆப்ஷன்ஸ் இருக்கு.

பாஸிங் - 2

Image
இன்னிக்கு நம்மள சுத்தல்ல விடப்போறாங்க என்று நான் நினைத்து முடிப்பதற்குள் "ஆப்டர் சூபர்வைசர் கோ டு ரெஜிஸ்தரேசன்" (After subervisor go to registharesan) என்றான். ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டாங்க என்று கன்பார்ம் ஆகிவிட்டது. வண்டியை பார்க்கிங் ஏரியாவுக்கு விட்டேன். ஏற்கனவே அங்கு டபுள் பார்க்கிங்கில் இருந்த நண்பனின் வண்டிக்கருகில் என் வண்டியை நிறுத்திவிட்டு, "ஏதோ சூப்பர்வைஸரப் பாத்து கையெழுத்து வாங்கணுமாம். அப்பறம் ரெஜிஸ்ட்ரேஷன் போகணுமாம். நீ கொஞ்சம் வெயிட்பண்ணு. இந்தா என் வண்டி சாவி. யாராவது வண்டிய பார்க்கிங்ல இருந்து எடுக்க வந்தா, என் வண்டியை நகர்த்தினாதான் அவங்க வண்டிய எடுக்க முடியும். நீ கொஞ்சம் பாத்துக்கோ" என்று சொல்லிவிட்டு சூப்பர்வைசர் இருக்கும் இடம் என்று தோராயமாக கூறிய திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றேன். இரண்டு மூன்று பில்டிங் இருந்ததால் எந்த பில்டிங்கிற்குள் நுழைவது என்று குழப்பம். கொஞ்சம் சுற்றும்முற்றும் பார்த்தேன். நண்பனின் வண்டியை பாஸிங் செய்த அரபி ஆபீசர் நின்றுகொண்டு வண்டிகளை ஒழுங்கு படுத்துவதும், சில வண்டிகளை சோதனையிடுவதுமாக